vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label வைதீஸ்வரன் கதைகள் _ இந்திரா பார்த்தசாரதி. Show all posts
Showing posts with label வைதீஸ்வரன் கதைகள் _ இந்திரா பார்த்தசாரதி. Show all posts

Saturday, September 10, 2016

வைதீஸ்வரன் கதைகள் _ இந்திரா பார்த்தசாரதி

                வைதீஸ்வரன் கதைகள்

            இந்திரா பார்த்தசாரதி

 வாசகனுடன் கருத்துப் பகிர்தலுக்காக அவனுடன் நேரடியாக நிகழ்த்தும் உரையாடல் என்பதால், சிறுகதைகள், பரிசோதனை என்ற பெயரில், அவனைக் குழப்பிவிடாமல் கதை சொல்வது என்பதைத்தான் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். கதைக் கரு எப்படி வேண்டுமானுலும் இருக்கலாம். அந்நிகழ்வை படைப்பாளி எப்படித் தன் அநுபவத்துக்கேற்ப உள்வாங்கிக் கொண்டு, தன் அநுபவத்தைப் பகிர்கிறான் என்பதுதான் முக்கியம்.அண்மையில் கவிதா பப்ளிகேஷன் 
வெளியிட்டிருக்கும் ‘வைதீஸ்வரன் 
கதைகள்இதற்கு ஒரு நல்ல சான்று.

வைதீஸ்வரன் ஓர் அருமையான 
நவீனக் கவிஞர்செல்லப்பாவின் 
எழுத்துவின் மூலம் கவிஞராக 
அடையாளம் காட்டப்பட்டவர்
அதனால்தான் அவருடைய 
பெரும்பான்மையான சிறுகதைகளில் 
ஒரு கவிஞனின் பார்வை ‘பளிச்சென்று 
ஒளிர்கிறது.இத்தொகுதியில் இருக்கும் கதைகளில் பெரும்பான்மையானவை தன்மை ஒருமை நிலையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால்படிக்கும்போது என்னுடன் நண்பர்வைதீஸவரனுடன் நேரடியாக உரையாடிக் 
கொண்டிருப்பதுபோல் ஓர் அநுபவம் எனக்குஏற்பட்டதுஎழுத்தாளர் வைதீஸ்வரனுக்கும்இதுதான் உட்கோளாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.

சுயசரிதையைச் சொல்வது போல், ஆசிரியருக்குக் குழந்தைப் பருவத்திலிருந்து பல்வேறு பருவங்களில்
ஏற்பட்டிருக்கக் கூடிய பல்வகைப்பட்ட அநுபவங்களை, துலாக்கோல் தீர்ப்பாக எந்த விமர்சனத்தையும், முன் வைக்காமல், எழுதப்பட்டிருக்கும் கதைகள் இவை.

நம்புவதா ,நம்பாமலிருப்பதாஎன்ற ஒரு மனக்குழப்பம் மனிதனுக்கு இயல்பாக உண்டு. ஆனால், நம் நம்பிக்கையிமையைப் புறக்கணித்து விட்டு, சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அவை சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆங்கிலக் கவிஞர் காலரிட்ஜ் இந்த இலக்கிய உத்தியைக் கையாண்டுகிரிஸ்டாபல்’, ‘குப்ளாக்கான்போன்ற கவிதைகளை எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தன் எழுதியுள்ளகாஞனையும் இவ்வகைப் படைப்புதான். வைதீஸ்வரனின்விஸ்வாம்பரம்’, ‘’கனவில் கனவு’, போன்ற கதைகளைப் படிக்கும்போது இவ்வாறு தோன்றியது. இவ்வாறு நடந்திருக்குமா என்ற சந்தேகத்துக்கும், சந்தேகமிமைக்கும் இடையே ஊசலாடும் மன நிலை.

இந்நிலையில் பல தத்துவார்த்தமான் கேள்விகள் பிறக்கின்றன. எது நிஜம், எது தோற்றம்? இக்கேள்வியும், இவர் கதை ஒன்றில் வருகிறது. ‘ஆலிஸ் இன் தெ ஒண்டர்லாந்தில்ஆலிஸ் கேட்பாள்: ‘நான் கனவு காண்கின்றேனா, அல்லது நானே யாரோயொருவர் காணும் கனவில் வரும் கதாபாத்திரமா?’ என்று. தாத்தா அந்தவிஸ்வாம்பரம்கதையைச் சொல்லும்போது, அவ்வாறு நடந்திருக்க க் கூடியதுதான், அந்தக் கதையின் இன்றிமையாத தர்க்கம் என்று நமக்குப் படுகிறது. அவ்வாறு நம்ப வைப்பதுதான் கலைஞனின் ஆற்றல்.

தமர் உகந்த உருவம் அவன் உருவம்ன்று திருவாய்மொழி கூறுவது போல், களிமண்ணை எப்படிப் பிசைந்தாலும் அவர் பிள்ளையார்தாம். ‘சிருஷ்டிஎன்ற கதையில் அச்சிறுவனின் தந்தை சிற்பியாக ஆக முயன்று, த த்துவ ஞானியாக ஏற்றம் பெற்று, உண்மை உருவத்தில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என்பதை உணர்கிறார்..

வைதீஸ்வரன் கவிஞர் மட்டுமன்று, நல்ல ஓவியர். அந்த அநுபவ த்தில் விளைந்த சில நல்ல சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

வைதீஸ்வரன் என்ற கலைஞனைப் பல் வேறு பரிமாணங்களில் அறிவதற்கு இத்தொகுதி உதவும்.