பெயர்
-வைதீஸ்வரன்
பெயர்
-வைதீஸ்வரன்
அன்று மிலிட்டரி உத்யோகத்துக்கு அனுப்பவே மாட்டேன்
என்று பெரியம்மாவும் பெரியப்பாவும் பிடித்த பிடிவாதத்தை யும்
லட்சியம் செய்யாமல் கிளம்பிப்போன ஒரே பிள்ளை
பிரகாஷ் இன்று கடுமையான ராணுவப் பயிற்சிகளில் தேறி உத்யோகத்தில்
நிரந்தரமாகி பத்திரமாக விடுமுறைக்கு வந் திருக்கிறான். என்
பெரியம்மாவுக்கு கண்ணீர் தழுதழுத்தது. இத்தனை காலமாக உள்ளூர கவலையில் குமைந்துகொண் டிருந்த பெரியப்பாவுக்கு திடீரென்று பாரமற்றுப்போன மனசை தாங்கிக்கொள்ள
முடிய வில்லை. அடிக்கடி துண்டால்
முகத் தைத் துடைத்துக் கொண்டார்….
எங்கள் இரண்டு தலைமுறைகளில் இந்த மாதிரி வித்யாசமான வேலைக்கு யாருமே போனதில்லை.அதுவும்ராணுவத்துக்கு. முதல் முதலாகப் போனது பிரகாஷ் தான்.எங்கள் தலை முறைகளைப் பார்த்தால் அநேகமாக தோட்டத்தை வைத்துக் கொண்டு ஜீவனம் செய்வது, அல்லது ஊருக்குள் வைதீக காரியங்கள் செய்து பிழைப் பது கோர்ட்
வாசலில் பத்திரம் எழுதுவது இல்லாவிட்டால் ஆரம் பப் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியார் உத்யோகம் பார்ப் பது. இந்த சின்ன வட்டம்
தான். அதைத் தாண்டி
யாரும் வெளியே போனதில்லை..இந்தப் பின்னணியில் பிரகாஷ் இப்படி ஒரு
துணிச் சலான லட்சியங்களுடன் வீட்டை
விட்டுப் போய் ராணுவத்தில் சேரவேண்டுமென்றமுடிவெடுத்தது எல்லோருக்கும் திகைப்பா கவும் கவலையாகவும் இருந்தது….
பெரியம்மா பிள்ளையைத்
தொட்டு தொட்டுப் பார்த்தாள். “அங்கே போய் என்ன
கஷ்டமெல்லாம் பட்டேடா?... இதென்ன இங்கே தழும்பு? இதென்ன.. இங்கே ஒரு சிராய்ப்பு?” என்று பிரகாஷை தடவித் தடவி விசாரித்துக் கொண்டே
இருந்தாள்.. பிரகாஷ்
அங்கே மலைப் பள்ளத்தாக்குகளில் அவனுக்கு கொடுக்கப்பட்ட விதவிதமான
பயிற்சிகளையெல் லாம் விவரித்து சொல்லிக்கொண் டிருந்தான். அவனைச்
சுற்றி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அச்சமும் பிரமிப்புமாக கேட்டுக்கொண்டேயிருந்தார்கள்.பெரியப்பா முகத்தில் பையனைப் பற்றிய பெருமை
அடிக்கடி மின்னிக் கொண்டே இருந்தது.
“என்ன பிள்ளையாண்டான் வந்துட்டானா? “எங்கள் குடும்பஜோஸி யர் உள்ளே வந்துகொண்டே கேட்டார்.. ஏற்கனவே அவரை பெரியப்பா வரச் சொல்லியிருக்க வேண்டும்.
“என்ன பிரகாஷ்.....நன்னா இருக்கயா? அங்கே
எல்லாம் பிரமா தமா டிரய்னிங் எல்லாம் முடிச்சுட்டு
வந்திட்டயா?”
“ஆமாம் மாமா...நீங்க சௌக்கியமா?
“எல்லாம் சௌக்கியம்.. பிரகாஷ்...இப்போ ஒங்க அப்பா அம்மா வுக்கெல்லாம் என்ன கவலை
தெரியுமோ?” ஜோஸியர் தலையை
சாய்த்துக் கொண்டு கேட்டார்.
“................”
”இனிமே நம்ம நாட்டுலெ எல்லாம் அமைதியா இருக்கணும்அண்டை
அயல் நாட்டோட சண்டையே வரப்படாது... நாட்டுக்கு பட் டாளமே தேவையில்லையோன்னு
எல்லாரும் நெனைக்க ணும் ....”
எல்லோரும்
சிரித்தார்கள்.
பெரியம்மா
கேட்டாள்: ”ஜோஸியரே, நல்லநாள் பாத்துட்டேளா? “
“நாளைக்கு வெள்ளிக் கிழமையே நன்னா..இருக்கு. பிரகாஷ் ஜன்ம நட்சத்திரமும் நாளைக்குத் தானே..! “
“ஆமாம்”
“கணபதி ஹோமம் ஆயுஷ் ஹோமம் ரெண்டையும் நாளை க்கே பண்ணிடலாம்…எல்லாம் ஏற்பாடு பண்ணுங்கோ.. நானே ஸாஸ் திரிகளைக் கூட்டிண்டு வந்துடறேன்...சரியா?..”
பெரியப்பா திருப்தியுடன் தலை அசைத்தார்.
“ரொம்ப
சந்தோஷம் மாமா..எல்லாம் தயார் பண்ணிடறோம்” என் றாள் பெரியம்மா.
ஜோஸியர் வழிநடை தாண்டியவுடன் பெரியப்பா மெதுவான குர லில் கேட்டார்:
“ஜோஸியரே, பிள்ளை ஜாதகத்தைப்
பாத்துட்டேளா? நீங்க பயப் படுத்தின மாதிரி இன்று வரை எதுவும் நடக்கலியே!! ஆண்ட வன் செயல் தானா?..”
“அதைத் தான் நானும்சொல்லணும்னு இருந்தேன்.ஏதோ தசாபுக்தி அவனைக் காப்பாத்திருக்கு.ஆனா..இன்னும் அந்த கண்டம் இருக்கு.
அதுக்குத்தான் நாளைக்கு ஹோம பரிகாரம் வரட் டுமா?..”
காலை விடியும் முன்பே வாசலில் செம்மண் கோலமிட்டு குத்து விளக்குகள்
ஏற்றப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அதே ஊரில் இருந்த பிரகாஷின் அக்கா உதவிகள் செய்ய சீக்கிரமே
வந்து விட்டாள். நெருங்கிய உறவினர்கள் மெல்ல வந்து
கூடிக் கொண்டிருந்தார்கள்.
பெரியப்பா வாசலில் ஒரு ஈஸிசேரில் உட்கார்ந்துகொண்டு
காபி குடித்துக்கொண்டிருந்தார்.முகத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டே பிரகாஷ்
அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
“என்னடா,நன்னாத்
தூங்கினயா? Many happy returns. இன்னிக்கு உனக்கு நட்சத்திரப் பொறந்த நாளு...”
“அப்பா அதைப்பத்தித்தான் நானும் நெனைச்சிகிட்டிருந்தேன்”
“என்ன? “
“இன்னிக்கு என் ப்ரெண்டு ஜார்ஜை கூப்பிடலாம்னு இருக்கேன்.. வந்தா அவனும் ரொம்ப சந்தோஷப்படுவான்...”
பெரியப்பா ஈஸிசேரிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டார்.
“அது யாரு..? ஜார்ஜூ?.......
“டேராடன்னிலிருந்து நானும் அவனும் ஒண்ணாத்தான் வந்தோம். நாளைக்கு அவன் சொந்தஊர் ஆலப்புழைக்குப் போறான். மூணு வாரம் கழிச்சுத்தான் வருவான்...”
பெரியப்பா கன்னத்தைத்
தடவிக்கொண்டார்.
“பிரகாஷ்,எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே...
இந்த விசேஷமெல்லாம் நம்ப குடும்பத்துக்குள்ளேசெய்யறது..
இதுலே வெளி மனுஷா கலந்துக்கறது சரி இல்லே....இன்னொரு சமயம் அவன் வர முடிஞ்சா நன்னா இருக்கும்...”
“இன்னொரு சமயம் அவனால வர
முடியாது..அதனால தான் சொல்றேன்...”
“நான் எப்படி விவரமா ஒனக்கு சொல்லறதுன்னு தெரியலே.. ஒங்கம்மா.. இங்கே வந்திருக்கிற உறவுகள் ஸாஸ்திரிகள்
யாருமே இதை ஆட்சேபணை செய்யலாம்....குடும்பத்து விசேஷம் இல்லையா? அது நமக்குள்ளே இருக்கிற
வழக்கம்... மத்தபடி. வேறெ ஒண்ணும் இல்லெ”
பெரியப்பா எழுந்து ஸாஸ்திரிகளிடம் ஏதோ பேசப்போவது
போல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
பிரகாஷுக்கு வருத்தமாக இருந்தது. ’அதென்ன குடும்பவழக்கம்?.. இரண்டு
வருஷமா என்னுடன் மிக நேசமாக தோழமையுடன் பழகி வந்த ஜார்ஜை ஏன் நான் குடும்பத்தில் ஒருவனாக அழைக் கக் கூடாதா? ஒரு
சகோதரனை விட அக்கறையுடன் அவனு க்கு பல சமயங்களில் கைகொடுத்து
உதவி இருக்கிறான். சமயத் தில் நல்ல யுக்திகள் சொல்லி இக்கட்டான சங்கடங்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறான்.. அப் படி ஒரு
நட்பு....பாசம்....
தவிர, அவன் இன்று வரமுடியாவிட்டால் பிறகுமூன்றுவாரங்
களு க்குப் பிறகு வேலைக்குத்
திரும்பிய போது தான் பார்க்க முடியும். சங்கடமாக
இருந்தது. ஆனாலும் அப்பா எந்த தனிப்பட்ட காரணத்துடன் இதைச் சொல்லவில்லை என்று அவனால் உணர முடிந்தது.
பலமான வேத கோஷங்களோடு ஹோமம் இரண்டுமணி நேரம் நடந்தது. வீடுமுழுதும் புகைமண்டலம் கூடத்தை சுத்தப் படுத்தி உணவு பரிமாற இலை போட தயார்
செய்து கொண்டி ருந்தார் கள்.
உறவினர்கள் வாசல்பக்கம் வந்து காற்றாட நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள் எல்லோருக்கும் பசி கிள்ள ஆரம்பித்தி ருந்தது. பெரியம்மா பிரகாஷை நெருங்கி அவன்நெற்றியில் குங்கு மம் இட்டு அனைவரையும்
நமஸ்கரிக்கச் சொன்னாள். பிரகாஷ் அவன் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணும் போது அவர் பிரகாஷ்
முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்த மாதிரி இருந்தது. ஜார்ஜ்
பற்றிய நினைப்பு அவருக்கு வந்திருக்கக்
கூடும்.
அப்போது டெலிபோன் ஒலித்தது. பிரகாஷ் எடுத்தான். மறு முனையில் பிரகாஷின் சகோதரி புருஷன் தான் பேசினார். “ஹலோ
பிரகாஷ்” என்றார்..
வீட்டிலிருந்து புறப்படும் போது தன்னுடைய ஸ்கூட்டர் பழுதடைந்துவிட்டதாகவும் பைக்கில் வந்து கூட்டிக்கொண்டு
போகமுடியுமா? என்று கேட்டார்.
“அதுக்கென்ன? இப்பவே வரேன்” என்று அப்பாவிடம் விஷ யத்தை சொன்னான். வாசலில் அங்கே வீட்டுக்கு வந்த உற வினர்களின் பைக்குகள் இரண்டொன்று நிறுத்தப்பட்டிருந்தன. அங்கே ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
“மாமா..இது உங்கள் பைக்கா?”
“ஆமாம்...”
அதற்குள் பெரியப்பாவும்
வாசலுக்கு வந்துவிட்டார்.
“சுந்தரம் உன் பைக்கை கொஞ்சம்கொடேன். மாப்பிள்ளை வீட் டுலெ காத்துண்டிருக்கார். பிரகாஷ் போய் கூட்டிண்டு வந்திடு வான் வீடு பக்கத்திலெ தான் இருக்கு போய்ட்டு வர பத்து நிமி ஷம் தான் ஆகும்..என்ன?..
“ என்ன மாமா தாராளமா எடுத்துண்டு போகட்டுமே!! பிரகாஷ்... இந்தா சாவி...”
பிரகாஷ் வண்டியைத் திருப்பி உட்கார்ந்து சாவியைப் போட்டு துரிதமாக ஸ்டார்ட் செய்தான்.
“பிரகாஷ்...சீக்கிரமா வந்துட்றா....எல்லாருக்கும்இலை போட்டாச்சு..”
“இதோ இப்பொ வந்துடறேன்...”
வண்டி வேகமாக வாசல் கேட்டைத் தாண்டி திரும்பியது
அவசரமாக வெளியே வந்த பெரியம்மா உரத்த குரலில் கத் தினாள்:
“சீக்கிரம் வந்துடுறாப்பா...
இங்கே இலை போட்டாச்சு.......”
***************
பிரகாஷ் கிளம்பிப்
போய் அரைமணி ஆகி விட்டது. மாப் பிள்ளை இதோடு
மூன்று முறை போன் செய்துவிட்டார். பிர காஷ் இன்னும்
வரவில்லை.
“ஒரு வேளை வண்டி நடுவில பஞ்சர் ஆகி இருக்குமோ?”
உறவினர் ஒருவர்
லேசாக தனக்குள் சொல்லிக்கொண்டார்.
“ உன் வண்டிலே பெட்ரோல் ஒண்ணும் கம்மியா இல்லையே? பெரியப்பா உறவினரைக சந்தேகமாக கேட்டார்.
“அதெல்லாம் நெறைய இருக்கு...”
உறவினர்கள்
எல்லோரும் வெளியில் வந்து கேட்டையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டார்கள். எல்லோருக்கும்
பசி கிண்டியது. உள்ளே இலைகளைப்
போட்டு சமையல்காரர் சில பண்டங்களைப் பரிமாறியிருந்தார்...
பிரகாஷின் சகோதரி சொன்னாள், “அப்பா...எனக்கு இப்ப நிச்ச யமா தெரிஞ்சி போச்சு. பிரகாஷுக்கு வீடு மறந்து
போயிடுத்து ரெண்டு வருஷம் கழிச்சு வரான் இல்லையா? தெரு
கட்டிடமெல் லாம் இப்ப மாறி இருக்கோல்யோ?... அதான் சுத்தறான்..”
”அடையாளம் தெரியாத அளவுக்கு ..பிரகாஷ் அவ்வளவு ஒண்ணும் சோடை இல்லை..அவன் மிலிட்டரிக்காரன்.
தெரிஞ் சுக்கோ!... ஆனா, ஏன் இவ்வளவு நாழின்னு
தான் யோஜ னையா இருக்கு..” பெரியப்பா குறுக்கும்
நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார். திடீரென்று நின்றார்.
’ஒருவேளை அவன் ப்ரெண்டு ஜார்ஜைப்
பாத்துட்டு அங்கே போகப் போறானோ?..’ தனக்குள்
நினைத்துக்கொண்டார்.
மேலும் பத்து நிமிஷம் கழிந்தது. [அப்போது
கைப்பேசி இல் லாத
காலம்] பெரியப்பா திடீரென்று
தீர்மானித்தவராய் அங்கே நின்று கொண்டிருந்த ஒரு உறவுக்காரர்
பையனைப் பார்த்து, “டே,ராமூ, இந்த சைக்கிளை எடுத்துண்டு போய்.. நம்ம த்யாகு
மாமா வீட்டு வரைக்கும்
போயிப் பாரு.வழிலே பிரகாஷ் எ ங்க யாவது நிக்கறானான்னு
பாத்துட்டு வா...”
ராமு உடனே சைக்கிளை
எடுத்துக்கொண்டு போனான் “அம்பீ. . சீ க்கிரம் பிரகாஷைப்
பாத்து கூட்டிண்டு வாடா... இங்கெ எல்லாருக் கும் பசிக்கிறது...” யாரோ ஒரு வயதான உறவி னர் வயிற்றைத் தடவிக்கொண்டு சொன்னார்.
நினைத்ததற்கும் சீக்கிரமாகவே ராமு போனவேகத்திலேயே
திரும்பிவந்தான். “என்ன....என்னா...?“என்று எல்லோரும் நெருங்கி
வந்தார்கள்.
“மாமா....தெரு திரும்பின உடனே இடது பக்கம் காம்ப் பௌண்டு கிட்டே நம்ம பைக் கீழே விழுந்து கண்ணாடி ஒடை ஞ்சி கிடக் கறது..பைக்கின் முன் சக்கரம் வளைந்துபோச்சு.கீழே மண் ணு லே எல்லாம் ரத்தக்
கறை...”
“அய்ய்ய்யோ...அய்யோ...ஆண்டவா...
என்னடா ஆச்சு? பிரகாஷ் எங்கேடா? யாரானும் அங்கெ இருக்காளா? அய்யோ முருகா.. முருகா..”பெரியப்பா தலையை
பிடித்துக்கொண்டு கத் தினார்.
விஷயத்தைக்கேள்விப்பட்டு பெரியம்மா, பிரகாஷின்
சகோதரி, கூடி இருந்தவர்கள் எல்லோரும்
வேதனையில் பதறி அரற் றினார்கள்.
உடனே பெரியப்பாவுடன் நாலைந்து பேர்கள் சேர்ந்துகொண்டு ஓட்டமும்
நடையுமாக விபத்து நடந்த இடத்துக்கு
விரைந் தார்கள்.
பைக் மிகவும் மோசமாக
சேதமடைந்திருந்தது.அதிக வேகத்துடன் அது கட்டுப்பாடு இழந்து அந்த மின்
கம்பத்தில் மோதியிருக்க
வேண்டும். அதை ஓட்டிக்
கொண்டு வந்தவன் எவ்வளவு ஆபத்தான நிலைமையில் இருக்கக்கூடும் என்று கற்பனை செய்து பார்க்க
பயமாக இருந்தது.
அந்த இடத்தை சுற்றி இரண்டு மூன்று
பேர் நின்றுகொண்டிருந் தார்கள் .
“என்ன ஆச்சு ஸார்?...எப்படி இது நடந்தது? இதை
ஓட்டிக்கொண்டு வந்தவர் எங்கே? இவர் தான் அவருடைய அப்பா...என்ன ஆச்சு சொல்லுங்க..? “ எல்லோரும் பதறினார்கள்.
”வண்டி ரொம்ப வேகமாத்தான் வந்தது.திடீர்னு ஒரு நாய் குறுக்கெ பாஞ்சு ஓடியது.. அவரு அதை எதிபார்க்கலெ..வண்டி இடது பக்கம் வேகமாப்போய் விளக்குக்கம்பத்துலெ மோதிடுத்து. ஓட்டி யவர் கீழ சாஞ்சி
அவர்மேலெ பைக் பலமா விழுந்துடுத்து. அவருக்கு முட்டிக்கால்லெ பலமான அடின்னு நெனைக்கிறேன்..”
“அய்ய்யோ... அப்புறம் என்ன
ஆச்சு? இப்ப எங்கெ
இருக் கார்..?
இந்தப் பக்கம் வந்த யாரோ ஒரு இளைஞன் தான். ஓடி வந்து சம யோசிதமா எல்லா உதவியையும் செஞ்சான்.... அடிபட்ட இடத் துலெ கைக்குட்டையை இறுக்கமா கட்டுப் போட்டு அவரை மெள்ள தாங்கி பிடிச்சுத் தூக்கி வழிலே வந்த காரை நிறுத்தி அதிலெ பக்கத்துல உள்ள ஸாயி நர் ஸிங் ஹோமுக்கு கொண்டு
போயிருக்கான்.. எங்க கிட்டே தகவல் சொல்லிட்டுப் போனான்..”
“ஐய்ய்யோ...”
ஸாயி நர்சிங்ஹோம் அதிக தூரத்தில் இல்லை.எல்லோரும் வண்டி பிடித்து வேகமாகப்
போய்ச் சேர்ந்தார்கள். அங்கே அவசர சிகிச்சைப்பிரிவு எங்கே என்று விசாரித்துக்கொண்டு ஓடினார்கள்,
அந்தப் பிரிவில் போடப்
பட்டிருந்த இரண்டு மூன்று கட்டில்களில்
கைகளிலும் கால்களிலும் மண்டையிலும்
கட்டுப் போட்டுக் கொண்டு பல வயதுள்ளவர்கள் பரிதாபமாகப் படுத்துக் கொண்டிருந்தார்கள்.
பிரகாஷ் கடைசிக்கட்டிலில் சாய்ந்தவாறு இருந்தான்.அவன் முகத்தில் வலியும் களைப்பும்
தெரிந்தது. கைகளிலும் முகத் திலும் சிராய்த்து
ரத்தம் துளிர்த்துக் கொண்டிருந் தது. அவன் கணுக் கால் பெரிதாக வீங்கி இன்னும் ரத்தக்கசிவு நிற்கவில்லை பெரிய கட்டுப்போட்டு டாக்டர் வலியைக் குறைக்க ஊசி
போட்டிருந் தார்...கை மணிக்கட்டில் பொருத்திய drip ஓடிக் கொண்டிருந்தது.
“ அய்ய்யோ... பிரகாஷ்.... என்னப்பா இப்படி ஒரு ஆக்ஸிடெண்ட்...அதுவும் இன்னிக்கு... “ பிரகாஷின் தந்தை பதறி போய் பொங்கி வந்த துக்கத்தை
அடக்கிக் கொண்டு பேசினார்.
பிரகாஷ் விபத்தின்அதிர்ச்சியை வெகுவாகவே தாங்கிக்கொண்டு வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருந்தான். அப்பா வைப் பார்த்தவுடன் சிரிக்க முயற்சிசெய்தான். ராணுவப் பயிற்சியால் வளர்த்துக் கொண்ட மனத் திண்மை
அது.
“ஒண்ணும் பயப்படும்படியா இல்லைப்பா.... ஏதோ இப்படி நேர்ந்து போச்சு...ஜோஸியர் இனிமே கண்டம் அது இதுன்னு நம்மை பயப் படுத்த மாட்டார் இல்லையா?.. “
அப்போது டாக்டர் வந்தார்.
”இங்கே எல்லாரும் கூட்டமா நிக்கக் கூடாது...தயவு செய்து வெளியெ போங்க.. நீங்க தான் இவரோட
அப்பாவா? நீங்க இருங்க..”
எல்லோரும் நகர்ந்தார்கள். “டாக்டர் என்ன ஆச்சு
டாக்டர்? இப்போ எப்படி இருக்கு?“
“நல்லவேளை பெரிய ஆபத்துலேருந்து தப்பிச்சுட்டார். கணுக்கா லிலே சிக்கலான முறிவுஏற்பட்டிருக்கு. ரத்தமும் ஜாஸ்தியா போயி ருக்கு.எல்லாத்துக்கும் இப்போ சிகிச்சை கொடுத்துருக்கோம். நாளைக்கு ஆபரேஷன் பண்ணணும்.அதுக்கப்பறம் எலும்பு சேர்றதுக்கு ஒரு மாசமாவது ஆகும்..
இருந்தாலும் இவர் இளைஞரா ஆரோக்கியமா இருக்க றதுனாலெ பழையபடிக்கு வந்துடுவார்... சரியா..?
“இப்போ நீங்க கெளம்புங்க.உடனடியா சிலஎக்ஸ்ரே ஸ்கேன் இதெல்லாம் எடுக்கணும்...கொஞ்சம்
வெளிலே போய் இருங்க...”
டாக்டர் வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் திடீரென்று இந்த நல்ல நாளில்
இப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நேர்ந்ததை
நினைத்து அவர் உருகிப்போனார்.
“பிரகாஷ்....இனிமே ஒனக்கு ஒரு ஆபத்தும் வராது...எல்லாம் சரியாயிடும்... நான் வெளிலே இருக்கேம்ப்பா....” பெரியப்பாக கண்களைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தார்.
“அப்பா....”
“ என்ன?”
“என்னைத் தாங்கி
பிடிச்சி வண்டி ஏத்தி இங்கே கூட்டிகிட்டு
வந்தானே... அவன் எங்கே? “
“அய்ய்ய்யோ....அதை மறந்தே போய்ட்டோமே! எப்படி இருப்பான்?”
“சீக்கிரம் போய் அவனைப் பாருங்கப்பா...வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டு பெல்ட் போட்டுண்டு இருப்பான்.. இங்கே வந்தபோது என் அவஸ்தை யிலே அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலே! பெரிய உதவி செஞ்சிருக் கார்... சீக்கிரம் போய் பாருங்க....”
“ஏம்ப்பா...நீதான் என் பிள்ளையைக் காப்பாத்திக்கொண்டுவந்தபையனா? நீ எவ்வளவு சிரமப்பட்டு இந்த பெரிய
உதவியைப் பண்ணியிருக்கே!! ஒன் வெள்ளைச் சட்டையெல்லாம் இப்படிப் பாழாயிடுத்தே! ஒனக்கு எப்படி நன்றிசொல்றதுன்னே தெரியலே..”
”இருந்தாலும் இப்படியொரு நல்லமனசும் அக்கறையா உதவிசெய்யற குணமும் எல்லாருக்கும் வராதுப்பா.......நீ தீர்க்காயுசா நன்னா இருக் கணும்...பகவான் ஒனக்குஒருகொறையும்வைக்கக் கூடாது..”
“அய்யா.. இப்படி
சரியான சமயத்துலே ஒருத்தரைக்
கஷ்டத்துலேர்ந்து காப்பாத் தற சந்தர்ப்பத்தை ஆண்டவன் எனக்கு கொடுத்தாரே!அதையே ஒரு வரமாவே நெனைச்சிக்குறேன் எல்லாருக்கும் கெடைக்காத புண்ணியம்... ஒங்க பையன் நல்லா ஆயிடுவார்... நான் வரட்டுமா?”
குள்ளே பேசிக் கொண்டே போனார்....
அந்தப் பையன் ஜார்ஜ்ஜா யிருந்தா என்ன?
ராமுவா இருந்தா என்ன? கரீமா இருந்தா என்ன?
யாரா இருந்தா என்ன...?
அவனை நான் சாப்பிடக் கூப்பிட்டிருக்க வேண்டும்
* அம்ருதா ஆகஸ்ட் 2013
No comments:
Post a Comment