vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, March 12, 2015

நான் ஒரு சகாதேவன்

நான்  ஒரு  சகாதேவன்
வைதீஸ்வரன்




 1958  என்று  நினைக்கிறேன்அப்போது  கோமல் சுவாமிநாதன்  என்  நண்பராகி விட்டார்.  அப்போது  அவர் சேவாஸ்டேஜ்  நாடகக் கல்வி நிலையத்தில்  மாணவ ராக  சேர்ந்து  பயின்று முடித்து திரு ஸஹஸ்ரநாமம்  நாடக கம்பனியிலேயே காரியஸ்தராக வேலையில் இருந்தார்.  ஆனால் அவர்  உள்நோக்கம்  நாடக  ஆசிரியராக வளர்வது  தான். 


 இதற்கு  முன்  அவர்  நிரந்த ரமாக  இருந்த  கவர்மென்ட் வேலையை  உதறி விட்டு  இங்கே  நாடகத் துக்கு  வந்தவர்.. அதனால் அவர்  குடும்பத்துக்கு அசாத்திய அதிர்ச்சியும்  தாங்க  முடியாத கோபமும்  அவர்  மேல் இருந்தது.

நான்  அப்போது கல்லூரி  முடித்து விட்டு எதிர் காலம் பற்றிய குழப்பத்தில் இருந்தேன். நாடகம்  சினிமா  கவிதை  ஓவியம் இப்படி  எல்லா  விஷ யங்களும் என்னைத் தாக்கி குழப்பி சித்ரவதை செய்து கொண்டிருந்தன. சம்பாதிப்பதும் வேலை செய்வதும்  முட்டாள்கள் நடத்தும்  வாழ்க்கை  என்று  ஒரு நினைப்பு.

ஆனால்  பாதை எதுவென்று  நிர்ணயிக்க முடிய வில்லை..  கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத தான்தோன்றியான  மனப்போக்கு.  ஆங்கிலத் தில் இதை bohemian  என்று  கூட சொல்லுவார் கள்.

நான் அப்போது பார்ப்பதற்கு அன்றைய  வழக்க மான திரையுலக  கதாநாயகன்  போன்ற ஒரு பிம் பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்ததால் என்னைப்  பார்க்கும்  நண்பர்கள்  எல்லோரும்  “ ஏம்ப்பா.. சினிமாவுலே  சேந்துக்கோப்பா... ஜெமினி கணெசனுக்கு போட்டியா.....பிச்சு வாங்கிடுவே! “ என்று சொல்வது வழக்கம்.

அவர்கள் நக்கலாகத்  தான்  சொல்லியிருப்பார் களோ!! தெரியவில்லைஆனால் நான் அதை  உண்மையென்று நம்பத் தொடங்கினேன்ஆனாலும்  அப்படிப்பட்ட  ஆசைகளில்  துணிந்து  இறங்குவதற்கு எனக்கு  நாடக  அனுபவம்  கொஞ்சம் தேவைப்பட்டது.

அப்போது கோமல் சுவாமிநாதன் மூலம் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவின் தொடர்பு  கிடைத் தது. அந்த  சமயம் அவர்களும் ஒரு ராஜா கதை யை  நாடகமாக்க முயன்று கொண்டிருந்தார் கள்.

அதில் என் வயதில் ஒரு இளவரசன்  வருவான்.  புத்திசாலி… ஆனால், கோமாளி போல்  நடித்து  தந்தையின்  கபடத்  திட்டங்களை அம்பலப்படு த்தி  மக்களை விடு தலையாக  வாழ வழி வகுக் கிறான்.“நான் அந்த  வேஷத்திற்கு மிகப் பொருத் தமானவன்என்று அவர்கள்  நினைத்து  எனக்கு நடிக்க சந்தர்ப்பம்  கொடுத்தார்கள்.

 
கல்லூரி  நாடகங்களில்  நடித்திருந்தாலும்  அந்த அளவு  தொழில் சுத்தமாக நடிப்பது  அது  தான்  முதல்  தடவை

எனக்கு  உள்ளூர  நடுக்கம் தான்ஆனால் அந்த  நடுக்கமே  என்  கோமாளி  பாத்திரத்துக்கு சாதக மாகக்  கூடும்  என்று நான்  எதிர்பார்க்கவில்லை எனக்குப் பாராட்டுக்கள்  கிடைத்தது.  

அதை விட  விசேஷமாக,  அந்த  நாடகத்தைப்  பார்க்க  பி.எஸ்.ராமையா  வந்திருந்தார்!

 
பி.எஸ். ராமையா  எழுதிய  “தேரோட்டிமகன்“  நாடகம்  அப்போது  சேவாஸ்டேஜ் நாடக மன்றம்  தயாரித்துக்  கொண்டிருந்தது.

நாடகத்தைப் பார்க்கவந்த ராமையா மறு நாள் என்னை  அழைத்து வெகுவாக பாராட்டி னார்...ஒரு வாரம்  கழித்து  என்னை வரச் சொன் னதாக சேவா ஸ்டேஜ் ஆளொருவன்  என்  வீட்டு க்கு வந்து கூப்பிட்டான்.

நான்  போனபோது  ராமையா..கூடத்தில்  சில  நடிகர்களோடு  உட்கார்ந்திருந்தார்என்னைப்  பார்த்தவுடன்  “  வாப்பா...சகாதேவா..”  என்றார்

என்  பெயரை  ஏன்  மாற்றி  சொல்லுகிறார்  என்று  குழப்பமுடன்  பார்த்தேன்.
  
 வைதீஸ்வரன்.....தேரோட்டிமகன்  நாடகத்துலே நீ தான்  சகாதேவன் வேஷம் பண்றே......தன பாலு  உனக்கு  வேண்டியவசனத்தை எழுதிக்  கொடுப்பான்வாங்கி ண்டு  போய்  ரெண்டு  நாள்லெ  நல்லா பாடம்  பண்ணிண்டு  வரணும்  ஒத்திகைக்கு  வரும்போது  எல்லாம்  தயாரா சரியா  இருக்கணும்..தெரிஞ்சுதா...”என்றார்

எனக்கு வியர்த்து விட்டது.

ஸார்... எங்க  மாமாகிட்டே.......”என்று  இழுத்தேன்.

என்  மாமா [ஸஹஸ்ரநாம்ம்”]  தன்  உறவினர் கள்  யாரும்  இந்தத் தொழிலுக்கு வரக்  கூடாது  என்று  பிடிவாதமாக  இருப்பவர்அதுவும்  முறை யான  மரபான   நாடகப்  பயிற்சியில்லாமல்  கல்லூரியில்  படித்தவர்கள்  நாலு சினிமாவைப் பார்த்து விட்டு அது போல்  தானும்  நடிக்க வேண்டுமென்று  கிளம்புகிற அமெச்சூர்  கும்ப லைக்  கண்டால் அவர்  ஆவேசமாக கோபப்படு வார். கன்னாபின்னாவென்று  திட்டுவார்.

அதுவும்  எங்கள்  குடும்பத்திலேயே  என்  ஒன்று  விட்ட  மூத்த  சகோதரர் [நிறையப்  படித்தவர் ] இந்த  மாதிரி  நாடக  சேவை  செய்யப்  போய்  எதிர்காலத்தை இழந்தவராக  இருந்ததால்  என்  மாமாவின்  ஆதரவு  பற்றி  எனக்கு  நம்பிக்கையு மில்லை  அவர் எதிரில்  நிற்பதற்குக்  கூட  பேசு வதற்குக் கூட  எனக்கு  பயம்….

அவரா... என்னை....... ..இதற்கு  சம்மதித்தார்.. .. இதென்ன  உலக அதிசயமாக இருக்  கிறதே!’

ஸார்..என்  மாமா  ..எப்படி  ஒப்புக் கொண்டார்... .. .பயமாக  இருக்கிறது ......கோபப்படுவார்....”..  என்றேன்.
 
 “
அதெல்லாம்  பத்தி  ஒனக்கு  ஏன்  கவலை??.  நான்  ஒங்க மாமாகிட்டே அடிச்சி சொல்லிட் டேன்  சகாதேவன்  ரோலுக்கு  நீ  தான்  பொருத் தம்  நீ தான்  நடிக்கப் போறேன்னு  சொல்லிட் டேன்ஒனக்கு  அனுபவம்  இல்லியேன்னு  மாமா  சொன்னார்.  அனுபவம்  இருக்கு  நான்  ஏற்கனவே  நீ  நடிச்ச  நாடகத்தைப்  பாத்திருக் கேன்னு  சொல்லிட்டேன்ஆனா..ஒங்க மாமா  ஒரு  கண்டிஷன்  போட்டார். முதல் நாடகம்  நடிக்கட்டும்,அதிலேஅவன்  சரியா  செய்யலே ன்னா  நான்  ஆளை  மாத்திடுவேன் னார்..அத னாலெ  நீ தான்  என்  வார்த்தையைக் காப்பாத் தணும்  தெரிஞ்சுதா..” என்றார்  நீளமாக.  
   
ஏப்ரல்  14ந்தேதி1959  மைலாப்பூர்  ஆர்  ஆர்  சபாவில்  தேரோட்டிமகன்  நாடகம்  அரங்கே றியது.

முதல்  தடவையாக  நான் தொழில்முறை  நாடக க்  கம்பனியில்  நடித்த  நாடகம்நான்  பயத்தை  மூட்டை  கட்டி விட்டு அந்த வேஷத்துக்கு  அவசி யமான பக்தியும்  ஞானமும்  கலந்த  உணர்வு டன் அக்கறையுடன்  நடித்தேன்... என்று நினைக் கிறேன்.!!!

நாடகம்  முடிந்தவுடன்  யாரும்  எதுவும்  சொல்ல வில்லை. ராமையாகூட  ஒன்றும்  சொல்ல வில்லை  ஆனால்  என் பாத்திரம்  சின்னது  தான்  சொல்லக் கூடிய  அளவுக்கு  ஒன்றுமில்லை  என்று  சமாதானப்படுத்திக் கொண்டேன்.

 
மறு நாள்  பொழுது  விடிந்து நேரமானதும்  தெரியவில்லைமுந்தைய நாள்  நாடகத்தி னால்  ஏற்பட்ட அழுத்தமும்  அலுப்பும்  இன்னும் தேங்கிய அசதியில் தூங்கிக் கொண்டிருந்தேன்.

 
என்  அப்பா  என்னை வந்து  எழுப்பினார்... சிர மப்பட்டு  அவசரமாக நான் கண் விழித்த தும்....”பார்ரா....ஒம்பேரு  கூட  பேப்பர்லெ  வந்திருக்கு..”என்று  ஹிந்து பத்திரிகையை  என்னருகில்  போட்டார்.

என்னால்  நம்பமுடியவில்லை!

ஆமாம்..என்  பெயரும்  இருந்ததுமுக்கியமான  பாத்திரங்கள்  நடித்தவர்களையெல்லாம்  சிலா கித்து  விட்டு கடைசியில் ஒரு  வரியாக நானும்  பொருத்த மாக  நடித்ததாக  என்  பெயரும்  இருந்தது.

முதல் முறையாக  ஒரு  பத்திரிகையில் என்  பெயர்....நான்  சிலிர்த்துப்  போனேன்! ... சகா தேவனாக  நான்...நல்லவேளை .... ராமையா  பெயரைக்  காப்பாற்றி விட்டேன்  பெரிய  நிம்மதியாக  இருந்தது........

ஆனால்  கெட்ட  வேளை.....தொழில்  முறை  நடிகனாக நானே  என்னை  வரித்துக்  கொண்டு    தீர்மானித்துக்  கொண்டு  அடுத்த  மூன்று  வரு டங்கள்  நான்  நாடகத்  தொழிலில்  தீவிரமான  இலக்கிய  சூழலுக்கு  அன்னியமான  பகட்டு சூழலில் ஊர்  ஊராக  சுற்றிக்  கொண்டிருந் தேன்!!........

 எந்த  நடிகனும்  தனிமையில்  அமைதியற்று  வெறுமையாகத்  தான்  இருப்பான்  என்று எனக் குள்  ஒரு  உணர்வு  என்னை இடைஞ்சல் படுத் திக்கொண்டே  இருந்தது...  அது  எனக்கு  மட்டும்  பொருத்தமான  உணர்வாக  இருக்கலாம்.

No comments:

Post a Comment