vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, April 30, 2019



கை நழுவும் உலகம் 


நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் Chinua Achebeயின் Things Fall Apart என்கிற குறுநாவலில் வரும் சில சுவாரசிமயமான தொன்மக் கதைகள் இங்கே தரப் படுகின்றன...பகிர்வுக்காக.

மொழி பெயர்ப்பு  : வைதீஸ்வரன்  



******************

வானம் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மழையைப் பொத்தி சிறை வைத்திருந்தது. பயிர்பச்சைகள் காய்ந்து மடிந்து போயின. வறண்ட காற்றால் குத்துக் கோல்கள் காய்ந்து வறண்டு ஒடிந்து போனதால் இறந்தவற்றை தோண்டிப் புதைக்க முடியாமல் போயிற்று.

கடைசியாக வானத்திடம் மழையை வேண்டி முறையிட்டுக் கெஞ்ச கழுகு ஒன்று அனுப்பப் பட்டது. வானத்தை நோக்கிப் பாடிய நெஞ்சை இளக வைக்கும் பூமியின் துக்கத்தை எதிரொலிக்கும் கழுகின் அந்த இசை---

அவன் அம்மா அதை எப்போது தாலாட்டாக இதை இசைத்துப்பாடினாலும் என் குழந்தை மனம் அந்தக் கழுகு பூமியின் நேசதூதனாக வானத்தை சாந்தப்படுத்த பாடிய அந்த நெடுங்காலப் பிரதேசத்துக்கு போய் விடும்.

முடிவாக வானம் மனம் இளகியது. அது மழையை சில கோகோ இலைகளில் பொத்திப் பொதிந்து கட்டி கழுகிடம் கொடுத்தது. அதைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் பறந்து வந்த போது கழுகின் கூரிய அலகுகள் அந்த இலைகளைத் துளைத்து விட்டதால் மழை அத்தனையும் நடுவழியிலேயே கொட்டித் தீர்ந்து போய் விட்டது. .

மழை கொட்டித் தீர்ந்ததால் கழுகு பூமிக்குத் திரும்பாமல் எங்கோ தூரமான பிரதேசத்தை நோக்கிப் போய் விட்டது. அங்கே கீழே அது ஒரு தீஜுவாலையைக் கண்டது. அருகில் போய்ப் பார்த்த போது அங்கே ஒரு மனிதன் பரித்யாகம் செய்து கொண்டிருந்தான். தன்னைத் தானே எரித்துக் கொண்டு குடலைத் தின்று கொண்டிருந்தான்!

**************

அடிவானத்தில் திடீரென ஈசல் கூட்டமாகத் தோன்றும் விட்டில்பூச்சிகள் ஏதோ கரும்புயல் திரண்டது போல் வருகின்றன. இந்தப் பூச்சிக் கூட்டங்கள் ஏதோ குகைகளில் வாழும் குள்ள மனிதர்களால் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பறக்க விடப் படுகின்றன....என்று சொல்லுவார்கள்


**************

ஆமைகளின் முதுகு ஓடுகள் ஏன் கரடு முரடாக இருக்கின்றன?

ஒரு காலத்தில் வண்ண வண்ணமாக இறகடித்துப் பறக்கும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடிப் பேசி உயரே மேகக் கூடங்களின் மத்தியில் ஒரு அருமையான கொண்டாட்டம் நிகழ்த்த வேண்டுமென்று தீர்மானித்தன.

இதை தூரத்திலிருந்து ஒட்டுக் கேட்ட ஒரு வயதான ஆமை தானும் இந்தப் பறவைகளின் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டது. அது பறவைகளை அணுகி மிகவும் இரக்கமான குரலில் கெஞ்சி தன்னையும் அந்தக் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று முறையிட்டது. “ உனக்கு இறகுகள் இல்லை. உன்னால் எங்களோடு பறக்க முடியாது" என்று பறவைகள் பதிலளித்தன. அப்போது மனம் இளகிய ஒரு பறவை சொன்னது " நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு இறகை இந்த ஆமைக்கு கொடுத்து ஒட்டவைத்து நம்மோடு அழைத்துப் போவோம்" என்றது. எல்லாப் பறவைகளும் உடனே அதற்கு ஒப்புக் கொண்டு ஆளுக்கு ஒரு இறகைக் கொடுத்து ஆமையை பறக்கச் செய்தது.


மேலே விருந்து தொடங்கு முன் எல்லான பறவைகளும் அதனதன் பெயரை சொல்ல வேண்டு மென்று தெரிவிக்கப் பட்டது. அப்போது ஆமை தன் பெயரை "எல்லாம் எனக்கே" என்று அறிவித்து விட்டு அங்கு விரித்து வைக்கப் பட்டிருந்த அத்தனை உணவுப் பண்டங்களையும் தானே உண்ண ஆரம்பித்தது.

பறவைகள் மிகுந்த கோபத்துடன் இதைக் கவனித்துக் கொண்டு மீதமிருந்த துண்டு உணவுகளை உண்டு விட்டு திருட்டு ஆமையின் தந்திரத்தை எண்ணிப் பொருமிக் கொண்டே இருந்தன.

அப்போது உயரத்தில் கடவுள் மாதிரி இவற்றை கவனித்துக் கொண்டிருந்த ஒரு கழுகு பாய்ந்து வந்து அந்த ஆமையிம் ஒட்டி வைத்த சிறகுகளை கிய்த்தெறிந்து கீழே பூமிக்குத் தள்ளி விட்டது.

பூமியில் விழுந்த ஆமையை மற்ற ஆமைகள் சூழ்ந்துக்  கொண்டு அதன் முதுகில் பிய்ந்து ஒட்டிக் கிடந்த ஒறகு மிச்சங்களை கடித்துக் கடித்துப் போட்டன. அதன் வடுவால் ஆமையில் முதுகு அதற்குப் பிறகு கரடுமுரடான கடினமான ஓடாக ஆகி விட்டது!!


________________________________________________


No comments:

Post a Comment