முரளீதரனின்
கதை சொல்லும்
உன்னத ஓவியங்கள்
பல
ஆண்டுகளுக்குப் பிறகு இளைய
நண்பர் ஓவியர் முரளீதரன்
கிருஷ்ணமூர்த்தியை சந்திக்கிறேன்,
சந்தோஷமாக இருந்தது.
பழைய நினைவுகளை
மீண்டும் அசை போட்டுக்
கொண்டிருந்தோம். அவருடைய
அருமையான ஓவியக் கண்காட்சி
இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நிறைய
வளர்ந்திருக்கிறார். அவர்
ஓவியங்கள் விசேஷ அனுபவத்தைக்
தரக் கூடியவை.
புறக்கண்கள் பார்க்கும்
காட்சியை அச்சு அசலாக வரைபவன்
திறமையை பாராட்டினாலும்
அவன் மகா கலைஞனல்ல!
சிறந்த
ஓவியங்கள் காலத்தின் நுண்ணுர்வை
மீட்டிப் பார்க்க வேண்டும்.
முரளியின் ஓவியங்கள்
அப்படிப்பட்டவை.
.
நீங்கள் செவிகளால்
பார்க்க வேண்டும் என்று
சொல்லுகிறது ஒரு Zen கவிதை!!
. முரளியின் ஓவியங்கள்
உங்கள் காதிலும் ஒலிக்கக்
கூடும்.!
தொன்மையான வரலாற்று
ஞாபகங்கள் நினைவில் நிழலாடக்
கூடும்.
அறையிருட்டில்
பாட்டியின் அரவணைப்பில்
கேட்ட புராணக் கதைகளின்
மாயாஜாலங்களின் சிலிர்ப்பு
உங்கள் மனதில் நிகழக் கூடும்..
அதே சமயம் ஓவியங்கள்
தற்கால வெளிப்படையான சகஜத்
தன்மை மாறாமல் இருப்பதைக்
கண்டறிந்து வியக்கக் கூடும்.
முரளி
தனக்குள் தோய்ந்து கண்டறிந்த
ஆழ்மன காட்சி அனுபவத்தை
நேர்மையுடன் துணிச்சலுடன்
நேர்த்தியான ஓவியங்களாக
படைத்திருக்கிறார்..
மிகவும் வித்யாசமான
படைப்புகள். மேலும்
சிறப்பான அங்கீகாரங்களைப்
பெற நண்பர் முரளிக்கு என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
_________________________________________
No comments:
Post a Comment