கிழித்தெறிந்த கவிதைத் துணுக்குகள் போல்
சிதறிப் பறக்கும் பறவைத் துகள்கள்
மாலை வானம்.......
பகல் துக்கங்களை
ஆழப் புதைத்துக் கொண்டு
இருட்டை அணைத்தவாறு உறையும்
நீர் நிலைகள். ஏரிகள்
தூக்கத்தின் சகதியில்
மொழி அழிந்த நினைவுகள்
கீறி விடும் துயரக்கனவுகள்..
அவள் ஏன் முகத்தைத்
திருப்பிக் கொண்டாள்?
இவன் ஏன் வெறுப்புடன் முறைத்தான்?
நாய்களுக்கு ஏன் நான்
திருடனாகத் தெரிகிறேன்?
எனக்கு ஏன் என் மேல்
வெறுப்பு?............இவ்விதம்
உலகம் தட்டைத் தகரமாகி
வெளியை ரத்தக் களரியாக்குகிறது.
சிதறும் பறவைத் துணுக்குகளாய்..............
அலைகிறது உயிர்க் குருவி
இறப்புக்கு முன்னும் பின்னுமாக
0
No comments:
Post a Comment