கவிதைக்கு மொழி ஒரு விசைப்பலகை தான்
------------------------------------------------------------------------------
நான் இவர் கவிதைகளை ஆங்கில மொழி பெயர்ப்பில் தான் கண்டேன்.
இவர் பெயர்
என். கோபி.
தெலுங்குக் கவிஞர்.
அடிக்கடி வாசிக்கத் தூண்டும் வரிகளாக தோன்றுகின்றன.
தமிழ் மொழிபெயர்ப்பு : வைதீஸ்வரன்
தாயாரின் முந்தானைக்குள் பதுங்குவது போல்
துன்பங்களின் போது
நான் கவிதைக்குள் புதைந்து போகிறேன்.
***********
அவள் மரணம்
நொடியில் நிகழ்ந்தது.
மரணம் இந்த நொடியில்
எங்கும் நிகழுகிறது
***********
காலண்டரை தின்று கொழித்த
காலத்துக்கு
இயக்கம் மட்டும் தான் உண்டு
இலக்குகள் இல்லை!
**************
வியர்வை எறும்புகள்
எத்தனை தட்டினாலும்
விலகுவதில்லை.
*****************
அதோ அந்தப் பையன்
மீண்டும் நம் குழந்தைப் பருவத்துக்குள்
பந்தை எறிகிறான்.
*********
.
No comments:
Post a Comment