உயரத்தில் ஒரு நாள்
- வைதீஸ்வரன் -
சுற்றிலும் சோப்பு நுரை மேகங்கள்
விரிந்த வெள்ளை வனாந்தரங்கள்
இடைப்பாழில் நீலம் பாரித்த ஏரிகளைப்
போலி செய்யும் துளிவானம்!
கீழே நிலத்துக்குப் பல்முளைத்தது போல்
கட்டிடக் குப்பல்கள் குறுக்குமறுக்காய்.
உயரப் பறக்கும் போது
ஊர்கள் பெயரற்றுப் போகின்றன
விமானத்துக்குள் நகரும் மனம்
இரண்டு விதமாய் மகிழுகிறது
வலதுபுறம் வானமண்டலக் கோலாகலம்
இடப்புறம் என் விரலைத்தொட்டுக்
குறும்பாய் சிரிக்கும் ஒரு மழலை முகம்
****
(ஒரு விமானப் பயண அனுபவம்)
அருமையான வர்ணனை... அழகிய கவிதை
ReplyDelete