vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, February 1, 2020

ஒரு அம்பும் கவிதையும்







ஒரு  அம்பும்  கவிதையும்
   
மொழிபெயர்ப்பு: .எஸ்.வைதீஸ்வரன்


அம்பொன்றை எறிந்தேன்  காற்று வெளியில்
விழுந்ததெந்த  மண்ணில்  அறிந்தேனில்லை
விருட்டென்று பார்வை கடந்து  பறந்தந்த  அம்பன்றோ!
வான்வெளியில்  கவிதையொன்றை
உயிர்மூச்சாய்  ஊதி   விட்டேன்
மறைந்ததெங்கே  வெளியில்… அறிந்தேனில்லை..
ஒரு  கவிதையின் வீச்சைத் தொடர்ந்து பிடிக்க
யாருக்குண்டு  திறமையும் வீர்யமும்?
நெடுநாட் கடந்த  பின்  காட்டுப் புதரொன்றில்
கண்டெடுத்தேன்  முனைமுறியா அம்பதனை
அவ்வாறே  என் கவிதையின் முழு வடிவம் 
ஒரு   அன்புநெஞ்சின்  ஆழத்தில் 
அதிசயமாய்  உறையக் கண்டேன் 



மூலக் கவிதை :

The   arrow  and  the  song
    

I  shot an arrow   into  the  air
It  fell  to  earth  I knew not  where
For  so  softly  it  flew the  sight
Could  not  follow  it  in its  flight
I  breathed  a song  into the  air
It fell into  earth  I  knew not  where
For  who  has  sight  so  keen  and  strong
That  it  can  follow  the  flight  of  song
Long afterward  in an  oak
I  found  the  arrow  still unbroke
And  the  song  from  the  beginning  to  end
I found again   in  the  heart  of  a friend

         
(Longfellow)
_____________________________________________________________________

No comments:

Post a Comment