க்ளாவரின் இரண்டு பக்கம்
----------------------------------------- வைதீஸ்வரன்.
எனக்கு ஐந்துவயதானபோது நான் திண்ணைப்பள்ளிக்கூடத்தில்
சேரவில்லை. வீட்டுக்கு
எதிராகவே இருந்த “கூடத்துப்”
பள்ளிக்
கூடத்தில் சேர்த்துவிட்டார் என்
அப்பா. அது உண்மையில் பள்ளிக் கூடம் இல்லை. ஒரு ஓட்டு வீட்டின் முன் தாழ்வாரத்து மண்தரை யில் நீளப் பலகையைப் போட்டு எங்களை உட்கார வைத்து எதிரே ஒரு குச்சு நாற்காலியும் ஒரு காலொடிந்த மேஜையும்போட்டுக் கொண்டு ஆசிரியர் உட்கார்ந்திருப்பார்.
அவருக்குப் பின்னால் கரியை அரைத் துப் பூசிய ஒரு நீளமான கரும் பலகை சுவற்றில்
ஏதோ ஒரு கோணத் தில் சாய்ந்து கொண்டி ருக்கும்.
எங்கள் வாத்தியார்
குள்ளம். ஒல்லியாக
நெற்றியில் மெல்லிய நாமம்போட்டுக்கொண்டு இருப்பார். குரல்பெண்ணைப் போல் இருக்கும். வகுப்புக்கு வந்தவுடன் எங்களை கடவுள் வணக்கம் பாடச்சொல்லி விட்டு கரும்பலகையில் ஒண்ணாம்
வாய்ப்பாடு எழுதுவார். அவர் எப்போதும் கணக்கு
வாய்ப்பாடு தான் எழுதி யதால்
அவர் கணக்கு வாத்தியார் என்று தான் இப்போது
ஞாபகம்.
அவர் குரலின்
காரணமாக அவர் அநேகமாக எதையும் எழுதித் தான் கற்பித்துக்கொண்டிருந்தார்என்று நினைக்கிறேன்.அதைப் பார்த்து
ஸ்லேட்டில் தப்பில்லாமல் எழுதவேண்டும் யாரும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு
சற்றுநேரம் கண்ணை மூடிக்கொள்வார். திடீ ரென்று கண்விழித்து அவர் பையிலிருந்து கலர் கலரான நீள நீள மான சாக்குத் துண்டுகளை[Chalkpiece}மேஜையின்
மேல் எடுத்து வைப்பார். ஒரு பேப்பரில் சுற்றி வைத் திருந்த
கூர்மையான முனை யில் தட்டையான ஊசி ஒன்றை
எடுப்பார். சாக்பீஸைக் கையில் எடுத்து லாகவமாக அதை விரல்களில் பிடித்துக்கொண்டு ஊசியால் அதை பல அழுத்தத் தில் வருடுவார்.
தினந்தோறும் அவர் செய்யும் இந்தக் கைநேர்த்தியைப் பார்ப்பதற்கா கவே நான் வாய்ப்பாட்டை அவசரமாக எழுதிவிட்டு அவரையே கவனித்துக் கொண்டிருப்பேன்.
விரல்களால் திருப்பித்திருப்பி ஊசிமுனையால்மிக நுண்மையாக சாக்குக்கட்டியை செதுக்கிக்கொண்டே வருவார். அதன் மேல் படிந்த சாக்குத் தூளை
அடிக்கொருமுறை ஊதி
ஊதி அப்புறப்படுத்திக் கொண்டேயிருப்பார்.
அந்த சாக்குக் கட்டிக்குள்
இருந்து ஒரு உருவம் வெளிப்படும். இன்று அது என்னவாக இருக்கும் என்று நானும் மற்ற மாணவர்களும் ஆவலாகப் யோசித்துக்கொண்டிருப்போம். மெல்லமெல்ல ஒரு தலையும்அபிநயம்
பிடிக்கும் கைகளும் அழகாக
வளைந்து நிற்கும் கால்களும் உருவாகும். தலை குனிந்தோ சாய்ந்தோஒரு பார்வையின் கோணத்தைக் காட்டும்.
வாத்தியாருக்கு நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதுஎதுவும் தெரியாதுஅவருக்கு சுற்றியிருக்கும்
உலகமே தெரியாது. வீடு உலகம் சுற்றி யிருக்கும் நாங்கள் பள்ளிக்கூடம் எதுவும்அவர் ப்ரக்ஞையில் இருக் காது. ஒரு சிருஷ்டியை
சேதமில்லாமல் அழகாக வெளியில் எடுக்கும் மருத்துவச்சியின் கவனிப்புடன் அவர் செதுக்கிக் கொண்டிருப்பார்.
செதுக்கி முடிந்தவுடன் சற்றுமுன்அவர்
கையிலிருந்தசாக்குத் துண்டு முற்றிலும் புதியபிறவி எடுத்திருக்கும். பாவாடையுடன் நிற்கும் பெண் ணாக இருக்கும். முண்டாசு
கட்டின கிழவனாக நிற் கும். நீண்டு வளைந்த தென்னைமரமாகஇருக்கும். கண்ணுக்கு பழைய சாக்குக் கட்டி தெரியாது.
வீட்டில் என் தூக்கத்தில்கூட அந்த
வாத்தியாரின் மென்மை யான விரல்களும் அதன் நாசூக்கான பரபரப்பில் வெளிப்படும் ஆச்சரிய மானஉருவங்களும்தான்மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்து கொண்டேஇருக்கும்.ஒரு சிறந்த சிற்பக்கலைஞராக மிளிர வேண்டிய இந்தக்
குள்ளமானஉருவம் ஒரு ஓட்டுக்
கட்டி டத்தில் ஒண்ணாங் கிளாஸ் வாத்தியாராகி உட்கார்ந்துகொண்டு அற்புதமான சிருஷ்டி
களை யார்கண்ணிலும்படாமல் படைத்துப்பின் உடைத்துப்போடும் மனப்பக்குவம் எப்படி நேர்ந்தது? அல்லது இது தான் அவருக்கு விதி க்கப்பட்டதா? அல்லது அதுதான் அவர் தனக்கே இன்னதென்று தெரியாமல் உள்ளும் புறமும் ஒன்றிப்போய் பூரித்துப்போகும் நிறை வான
கலை அனுபவமா? அல்லதுஇதுஒரு இயல்பாக அவருக்கு வாய்த்த ஆன்மீகப் பயிற்சியா?
அல்லது யாரும் காணா பாலையில் தானே பூத்து தானே வாடி உதிர்ந்துபோகும் சில பூக்களின் அற்ப வாழ்வைப் போன்றதா அவருடைய அபூர் வமான கலைத்
திறன் ?
தன்னுடைய கையிலிருக்கும் சாக்குத்துண்டு ஒரு நிறைவான உரு வம் பெற்றவுடன் அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியும்
சிரிப்பும் தோன் றும். இரண்டு முறை அதை திருப்பித் திருப்பிப் பார்ப்பார்.
நான் அந்தநேரத்துக்காக காத்துக்கொண்டிருப்பேன். “ஸார்..” என்று கையை நீட்டுவேன்.அவர் என்னைப்பார்ப்பார்.”வாய்ப்பாடெல்லாம் ஒழுங்காஎளுதினயா?. “எழுதிட்டேன் ஸார்.”அவர்
என் வார்த்தையை நம்புவார். கையிலிருந்த அந்த அற்புதமான பொக்கிஷத்தை
என்னிடம்சந்தோஷமாக கொடுத்து
விடுவார். நான்
அதை தலை யில் வைத்துக்கூத்தாடிக்கொண்டு வீட்டுக்கு வந்து என் வாத்தியார் செய்த பொம்மையை எல்லா ரிடமும் பெருமையுடன் காட்டி அவர் என்னிடம் காட்டிய விசேஷ
பரிவையும் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுவேன்.
அப்போது ஒரு ஆசிரியராக அவர்
எதையும் சொல்லிக்கொடுக்கவில் லையோ என்று தோன்றலாம். பாடம் நடத்தும் நேரத்தில் அந்த ஆசிரியர் இந்த மாதிரி கைவேலைசெய்துகொண்டிருப்பதை மூத்த
ஆசிரியர் என்று யாராவது பார்க்க நேர்ந்தால் அவரைக் கடிந்து கொள்ளக் கூடும். ஆனால் அவர் இந்த மாதிரி இல்லாமல்
எங்க ளுக்கு வாய்ப்பாடும் கணக்கும் மட்டுமே கற்றுத் தரும் வழக்கமான
வாத்தியாராக இருந்திருந்தால் நாங்கள் ஒரு
நிறைவான, என்றும் நினைவில் நிற்கக் கூடிய நெகிழ்ச்சி யான கலை அனுபவத்தின் பாதிப்பை அந்த சின்ன வயதில் இழந்திருப்போம்.
அதற்கு அடுத்த வருஷம் நான் அந்தக் கூடத்துப்பள்ளிக் கூடத் தின் உள்கூடத்துக்கு மாற்றப்பட்டேன். ஒண்ணாம் வகுப்பிலிருந்து இரண் டாம் வகுப்புக்கு உயர்வு.
இந்தவகுப்பில் கணக்கு
தமிழ் சொல்லிக் கொடுக்க ஒரு உபாத்தியாயரும் மீதி நேரத் துக்கு உபரி யாக இன்னொரு வாத்தியாரும் வந்தார்கள். அந்த இன்னொரு வாத்தியார் டிராய்ங் மாஸ்டர் என்று சொல்லிக்
கொண்டார்கள். கறுத்த
முகமும் அழுக்கான சட்டை
வேட்டியும் அணிந்துகொண்டு கையில் ஒரு கசங்கிய பழுப்பேறிய புத்தகத்துடன் எப்போதும் காட்சியளிப் பார் அவர்.
அவர் வகுப்புக்கு
வந்தவுடன் கரும்பலகையில் செங்குத்தாக ஒரு கோடு இழுப்பார். அதில் க்ளாவர் வடிவத்தின்
ஒரு பாதியை கோட் டுக்கு வலது பக்கம் வரைந்து விட்டு எங்களை அதேமாதிரி ஸ்லேட் டில்
வரைந்து க்ளாவரின் உருவத்தை கோட்டுக்கு இடதுபக்கமும் முழுமைப்படுத்த வேண்டுமென்று சொல்லுவார். அதோடு அவர் பாடம்முடிந்தது.பிறகு காலைத் தூக்கிமேஜையில்
வைத்துக்கொண்டு லேசாக ஆட்டிக்கொண்டவாறு கையிலிருந்த கசங்கல் புத்தகத்தை படிக்கத்தொடங்குவார். படிக்கப் படிக்க அவர்
கண்கள் கிறங்கிப் போகும். பக்கங்களை
அவர் புரட்டப் புரட்ட அவர் கால்களின் ஆட் டம் விறுவிறுப்படையும். வாயோரம்
ஈரம் கசியும். அடிக்கொரு தரம் வேட்டியை சரிப்படுத்திக் கொள்வார்.
நாங்கள் க்ளாவரை
வரைவதைவிட அவர் காலாட்டத்தைப் பார்த்து ரஸிப்பதில் தான் ஸ்வாரஸ்யம்
கொள்வோம்.
அந்த வருஷம்
முடியும்வரை அவரும்
க்ளாவர்வடிவத்தின் அரைப் பகுதியை தாண்டி வரையவில்லை. நாங்களும் ஒரு தடவை கூட அதை அதை முழுதாக வரைந்து காட்டவில்லை.
அன்று எனக்கு
க்ளாவர் வடிவத்தின்
மேல் ஏற்பட்ட வெறுப்பும் ஒவ் வாமையும் பல வருஷங்களுக்கு மறையவேயில்லை.
இவர்எப்படிஒரு டிராய்ங் மாஸ்டரா? என்றுகேட்கத்தோன்றாதவயது அப்போது. ஒரு
வேளை வேறு எதற்கும் லாயக்கில்லாதவராக
இருந் திருக்கலாம்!
*********************
நன்றி கணையாழி
No comments:
Post a Comment