ஆயுள் ரேகை
_
வைதீஸ்வரன்
பிரபலமான ஜனரஞ்சக எழுத்தாளர் குஷ்வந்த் சிங்குக்கு இப்போது வயது98. இன்னும் அவர் ஆரோக்கியமாக சுறுசுறுப்புடன்எழுதிக்
கொண்டு வாழ்க்கையை உற்சாகமாகக் கழித்துக்கொண்டுவருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய நீண்டஆயுளின் ரகஸியங்களை, அவர் கடைப்பிடித்த சில வாழ்க்கைமுறைகளைஒருபத்திரிகைப்பேட்டியில்
பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவை:
“அறுபது கடந்தவுடனேயே உணவு
நித்திரை பழக்க வழக்கத்தை சீர்படுத்திக் கொள்ளவேண்டும்.
காலையில் டீ காபி
குடிப்பதில்லை. கொய்யாப்பழ சர்பத் சாப்பிடு கிறேன்.
அன்றாடம் கொஞ்சமும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். முதல்நாள்இரவில் “வயிறுஇளக்கி” பழங்கள் எடுத்துக்
கொண்டோஅல்லது மறுநாள் இனிமாசிகிச்சை செய்துகொண்டோ குடலை சுத்தமாக வைத்துக் கொள்வது
மிக மிக அவசியம்.
நமக்கு அப்பாற்பட்ட ப்ரும்மாண்டமான
சக்தி ஒன்றை ஏதாவது ஒரு ரூபத்தில் நினைத்து சில
நிமிஷங்கள் பிரார்த்தனையில் ஈடுபடலாம்..
காலை 9மணிக்கு காய்கறித்
துண்டுகளோடு ரொட்டி பழ பானம்.
பிறகு நடைப்பயிற்சி
அவசியம்.
நடைப்பயிற்சி செய்யும் சக்தி குறைந்து விட்டால் தினமும் உடல்
முழுவதும் சூடு பறக்க மஸாஜ் செய்து கொள்ள ஏற்பாடு செய்து
கொள்ள வேண்டும்.
மாலையில் கூடியவரை நண்பர்களுடன் கலந்து பேசிப்
பொழுது போக்க வேண்டும்.
இரவு ஏழு மணிக்கு மிதமான அளவு malted wine குடிக்கலாம்.
பிறகு சப்பாத்தி காய்கறிகள் கோதுமைக்
கஞ்சி பால் 8 மணிக்கு முன்பாக எடுத்துக்
கொண்டு ஒன்பது
மணிக்குப் தூங்கப் போக வேண்டும். மிகவும் விருப்பமான புத்தகங்களைப் படிக்கலாம்
சாப்பிடுவது தூங்குவதை தவிர வேறு
ஸ்வாரஸ்யங்கள் அவசியம். எழுத்தாளனும் ஓவியனும்அதிர்ஷ்டசாலி. மற்றவர்கள்
தோட்ட வேலை பூ, அலங்காரம் போன்ற நல்லபொழுதுபோக்குகளை
வளர்த் துக் கொள்ள வேண்டும்
இதைவிட முக்கியமாக,வாலிப
நாட்களில் திறமைக்கேற்ற தொழில்செய்து நிறையப் பொருள்ஈட்டியிருக்க வேண்டும். அந்திம
வயதில் மிகுந்த நிம்மதியையும் பாதுகாப் பையும்அளிப்பது வங்கியில்
உள்ள பணம் தான்.
தன்னுடைய பராமரிப்பு மருத்துவசெலவு அத்தனைக்கும்
போதுமா னதாக பிறரை எதிர்பார்க்காத அளவுக்கு சேமிப்பு இருந்தால்
வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்
இதையெல்லாம்விட இன்னும் முக்கியமாக மேலும் இரண்டு
விஷயங்கள்தான் வயதான
காலத்தில் நிம்மதியைக்
கொடுக்க கூடியது...
ஒன்று, எப்போதுமே உங்களை மற்றவர்களோடு ஒப்புநோக்கி சீர்
தூக்கிப் பார்த்துக் கொள்வது தவறு.
இரண்டு,எப்போதும்மற்றவர்கள்மேல் பொறாமையோ எரிச்சலோ
நெஞ்சில் வளர்த்துக் கொள்வது மனஆரோக்கியத்துக்கு
மிகவும் தீங்கு விளைவிக்கக்
கூடியது .””
குஷ்வந்த் சிங்கின் தந்தையும் ஆரோக்கியமான நீண்டஆயுளுடன்
வாழ்ந்தாராம். அவரு டைய மூத்த சகோதரர் இறக்கும்போது நூறு வயதைத் தாண்டினாராம். அவருடைய தொண்ணூற்றி ஐந்து
வயது இளையசகோதரர் மிக ஆரோக்கியமாக வாலிப மிடுக் குடன்
இருக்கிறாராம் “அவன்
நிச்சயம் என்னை மிஞ்சி
விடுவான் “ என்கிறார் சிங்!
இந்த ஆயுள்நீட்டிப்புக்கு தங்கள்குடும்ப மரபணுக்களின் ரஸாயனக் கலவைகளும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்கிறார் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்.
****************
படிப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. ஆனால் ஆண்டவனின் திட்டம் தான் அறுதியான கணக்கு. (அதைத் தான் மரபணு
என்று சொல்லுகிறார்களோ!?}
சாப்பிடும் பொழுதைத்தவிர உதட்டில் சுருட்டை ஒட்டிக் கொண்டே வாழ்ந்த சர்ச்சில் 90 வயது
தாண்டி வழுக்கிவிழுந்துதான் இறந்தார்...
No comments:
Post a Comment