கவிதை
வேற்றூரில் ஒரு காலை
வைதீஸ்வரன்
அசையாமல் அசைந்து
காற்றை மெல்லக்
காட்டிக் கொடுக்கின்றன..
மேகங்கள்.
மேகங்கள்.
பறவைகள் பூத்த மரங்களின் கன்னம் சிவந்து
கனிகள் பாடுகின்றன காலைஇசையை..
கனிகள் பாடுகின்றன காலைஇசையை..
துவளும் பூமியை மெள்ளத் தடவும் கிரணவிரல்கள்
கிளுகிளுக்கின்றன பசுமை சிலுசிலுத்து
கிளுகிளுக்கின்றன பசுமை சிலுசிலுத்து
வழக்கத்திற்கு அடிமையற்ற வானம்
உன்னத ஒவியங்களை ஓயாமல்
எழுதிக் கலைத்துக் கொண்டே சிரிக்கின்றன
உன்னத ஒவியங்களை ஓயாமல்
எழுதிக் கலைத்துக் கொண்டே சிரிக்கின்றன
வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசமழிந்த
புள்ளியில்
மௌனத்தில் சயனித்திருக்கிறது உள்மனம்..
மௌனத்தில் சயனித்திருக்கிறது உள்மனம்..
தற்காலிக மரணத்தின்
அழகான சமாதி வரிசைகளாக
சாலையின் இருமருங்கிலும்
உறங்கும் வீடுகள்
உயிர்களை தாலாட்டியவாறு....
அழகான சமாதி வரிசைகளாக
சாலையின் இருமருங்கிலும்
உறங்கும் வீடுகள்
உயிர்களை தாலாட்டியவாறு....
0
No comments:
Post a Comment