vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, June 9, 2013





மீண்டும்  அந்த இரவு
 வைதீஸ்வரன்




பல வருஷங்களுக்கு முன் அந்த  வரிகளை எழுதுவதற்கு ஆதாரமாக  
இருந்த  சிலகணங்கள் எனக்கு இப்போதும்  நினைவில்  இருக்கின்றன. 
உள்ளும் புறமும் ஒரே  இருட்டு... பாதையில்லாக்     காட்டில்   பயணம். 
ஏன் வாழ்க்கை இப்படிக் கசக்கிறது என்ற  அபத்தமான  இனமறியாத  
குழப்பம்.

என்னைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் ஊமைகளாய் செவிடர்களாய்
இருப் பதாக தோன்றுகி றது. யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை.
அத்தனை உயிர்களையும் நான் நேசிக்கிறேன் என்று நினைப்பதை ஏன்  
யாருமே   புரிந்துகொள்வதில்லை என்ற மலட்டுக்கோபம்.  கலப்படமற்ற  
அன்பால் அத்தனை உயிர்களையும் ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் 
என்ற என் உள்ளத் தழுதழுப்பை  எல்லோரும் அலட்சியம் செய்கிறார்
களே...  ஏன்   இப்படி?

நிலவும்மணலும்பித்துப்பிடித்தது போல் இரைச்சலிடும் அந்தக் கடல்
அலைகளும் கூட அன்புக்காக  உயிர்களின் நேசத்துக்காக இந்த நள்ளிர 
வில்  அனாதையாகத்  தவமிருக்கின்றன….

அதோ ஆபத்துக்கள் நிறைந்த அந்தக் கடற்பாறையின் இடையில் எப்ப 
டியோ தன்னை ஊன்றிக்கொண்டு  மெலிந்து நீண்டு   ஒற்றை மலரை விரித்துத்தள்ளாடிக்கொண்டிருக்கும் அந்தக் கொடியும்கூட நானாகத் தெரி 
கிறேன்..இந்த நட்ட நடு பிரபஞ்சத்தில்  என்னைப் புரிந்து கொண்டு  ஒரு
மாற்று உலகத்திற்கு  என்னை அழைக்கும்ஒரே ஜீவன் அந்த   மலர்  தானா?   
ஆம்.... அந்த  மலர் தான்...
.
 “ இரவில் மலர்ந்த  மலரே!  -  எனை
  இருளில் எங்கு  அழைக்கிறாய்?
 தனிமைத் துயரில்  வாடும்  என்னைக்
 கனிந்து  எங்கே  அழைக்கிறாய்         [இரவில்]

1960ல் எழுதிய இந்தப் பாட்டின் வரிகள்  இரண்டுமூன்று வருடங்களுக்கு 
முன்பு வுட்லாண்ட்ஸ்  ட்ரைவ்-ன்   ஹோட்டலுக்குப்  போனபோது  எனக்கு 
மீண்டும்பளிச்சென்று ஞாபகத்துக்கு வந்தது.

காரணம்,அங்கே இன்னொரு மூலையில்  பட்டுத்தலைப்பாகையுடன் 
பத்துப்பதினைந்து  பேனாக் களை சொருகிக்கொண்டு எழுதிக்கொண்
டிருந்த  P B   ஸ்ரீனிவாஸ்.1960களில் அகில இந்திய வானொலியில் 
விசேஷத் தேர்வுடன் ஒலிபரப்பான   சில  மெல்லிசைப் பாடல்களில்
 நான்  மேற் கூறிய பாடலும் ஒன்றுஅந்த  கவித்துவ வரிகளுக்கு தன் 
இதமான குரல்  ஒலியால்  மகுடம் சூட்டியது  அவர்தான்.

 பலமுறை அந்தப் பாடலை காலை ஒலிபரப்பில் கேட்டிருந்தாலும்   
அவரை இவ்வளவு சமீபத் தில் பார்க்க நேர்ந்தது இப்போதுதான்.

நான்  அவரை  நெருங்கி  “வணக்கம்“ என்றேன். அவருக்குக் காது கேட்க
 வில்லை.  மேஜை நிறையத் தாள்களை வைத்துக்கொண்டு ஏதோ 
எழுதிக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த   ஹோட்டல்  சிப்பந்தி 
பலமாகப்   பேசுங்கள்அவருக்குக்  கேட்காது..  என்றான்.

மீண்டும்  “வணக்கம்   என்றேன்.

அவர்  தலையைத்  தூக்கிப்  பார்த்தார்.

வணக்கம்...யாரு  நீங்க? “ 

என்  பெயரைச் சொன்னேன். 

அவர் கேள்விக்குறியுடன்  என்னைப் பார்த்தார்.

என்னை  உங்களுக்குத்  தெரியாது...இருந்தாலும் நமக்குள்   
ஒரு  நல்ல  தொடர்பு   இருக்கிறது” .

 “அப்படியா?....பலே....என்ன  தொடர்பு  அது?”

வானொலி விவித்பாரதி மெல்லிசை நிகழ்ச்சியில் என் பாட்டு

 ஒன்றை   நீங்கள்  பாடியிருக்கிறீர்கள்...

“ ரேடியோவிலையா?...எத்தனையோ  பாடினேன்  எல்லாம்   மறந்து
போயிடுத்து...சொல்லப்போனா  காத்தோட  போயிடுத்து”. பலமாகச் 
சிரித்தார்..எப்போ பாடினேன்?  என்ன  பாட்டு அது...?”

 “ஆயிரத்தி தொளாயிரத்தி அறுபதிலே..

அடேடே...அப்படியா....நீங்க  கவிஞரா?  பேஷ்.பேஷ்....சந்தோஷம்.. 
காபி சாப்பிடுறீங்களா?...

 “ நன்றி.....வேண்டாம்...

 “அது  என்ன  பாட்டு  அது?..”

 இரவில் மலர்ந்த மலரே......என்னை
   இருளில்  எங்கு  அழைக்கிறாய்?
   தனிமைத் துயரில்  வாடும்  என்னைக்
   கனிந்து எங்கே  அழைக்கிறாய்.?”

 நான்கு  வரிகளை சொன்னேன்.

ஓஹோ....சபாஷ்...வரிகள்  நல்லா  இருக்கே?   இதை நானா பாடியிருக்கேன் ?   
யாரு கம்போஸ்  பண்ணினாங்க?.”

“ டி.ஆர்.பாப்பா..அப்போ  அவர்  வானொலியில் உத்யோகத்தில் இருந்தார். 
சினிமாவுக்கும்  இசை அமைத்துக்கொண்டிருந்தார்".

இவ்வளவு  ஞாபகம்  வச்சிண்டிருக்கேளே?....எனக்கு  பலவிஷயம் மறந்து
போறது..  அதுலே  ஒரு  சௌகரியம் என்ன தெரியுமோ? "

என்ன?”

தெனம் எந்திருக்கற போது   எல்லாமே   புதுஸா  தெரியறது.. .ஹா ஹா ஹா..  
 குழந்தை போல சிரித்தார்.

மீண்டும்  என்னைப் பார்த்து, ”ஒங்க பேரு என்னன்னு சொன்னீங்க?”

 என்  பெயரைச்  சொன்னேன்.

வைதீஸ்வரன்...ஒண்ணு  சொல்லமுடியும்....இரவுக்கும் எனக்கும் ஒரு ராசி  உண்டு....
இரவு  நிலவு  இதை  வச்சி   பாடின  என்  பாட்டெல்லாம் ரொம்ப நல்லா  வந்திருக்கு..
இது  மாதிரி  கன்னடத்துலே ஒரு  பாட்டுதெலுங்கிலெ ஒரு பாட்டுஎனக்கு   இப்ப 
ஞாபகம்  வருது.. ஒங்க வரிகள் நல்லாயி ருக்கு.ஆனாபாட்டு  மறந்துபோச்சு ...
புதுஸா   கம்போஸ் பண்ணலாம் இந்தப் பேப்பர்லெ  அந்த வரிகளை   எழுதிக்
கொடுங்க....

எனக்கும் பாட்டின் அத்தனை வரிகளும்  ஞாபகத்துக்கு வருமா  என்று  ஐயமாக  
இருந்ததுஎழுதினேன்.

        “இரவில் மலர்ந்த  மலரே....என்னை
         இருளில்  எங்கு  அழைக்கிறாய்?
         தனிமைத் துயரில்  வாடும்  என்னைத்
         கனிந்து  எங்கே  அழைக்கிறாய்?..............[இரவில் ]
         அலையும் மனித இதயங்களிலே
         அமைதி  சேர்க்க நினைத்தாயோ?
         குவியும்  துன்ப  இருளைப் பார்த்து
         நகைக்க  நெஞசம்   துணிந்தாயோ?
         துயிலும்  உலகின்  அழகைக்  காண
         துணைக்கு  என்னை  அழைத்தாயோ?
         உயிரில்  மணக்கும்  மதுவை  எனக்கு
         ஊட்டி  இன்பம்  தருவாயோ?          {இரவில் }

பலே பலேநல்லா இருக்கு....ஏதாவது நிகழ்ச்சியிலே இதைக் கம்போஸ் பண்ணிப்  
பாடறேன்”. காகிதத்தை  மடித்து  பத்திரமாக  புத்தகத்துக்குள்  வைத்துக்கொண்டார்.

வைதீஸ்வரன்இந்த   மொபைல்   நம்பரை  எழுதிக்கங்க...இது   என்   தனிப்பட்ட  
நம்பர்...எல்லோருக்கும் கொடுக்கறதில்ல...நீங்க  எப்ப வேணும்னாலும்    இந்த  
மாதிரி விஷயத்தை என் கிட்டேபேசலாம்...”

 ”நன்றி...”

அவருடன்  பேசினது  எனக்கு  நிறைவாக இருந்தது...அவர்  மீண்டும் அந்தப் 
பாட்டை கம்ப்போஸ் செய்து  பாடுவார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்க
வில்லை.  எதிர்பார்க்கவும் முடியாதுஅவருக்குக் குரல் போய்விட்டது.
நம்பிக்கை ஒன்று மட்டும் தான்  தளராமல் இருந்தது.

ஒரு வயதான ஓவியனுக்கு கைகள் தளர்ந்துபோகலாம்இசைக் கலைஞனுக்கு 
சாரீரம் போய்விடலாம்எழுத்தாளனுக்கு  வார்த்தைகள் மழுங்கிப்  போகலாம்.....
இந்தத் தவிர்க்கமுடியாத  தேய்வுகளைப் பொருட் படுத்தாமல்  அந்திமகாலம்
 வரை வாழ்க்கையை  எப்போதுமே அலுக்காத ஆர்வத்துடன்  கலாபூர்வமாக 
நேசித்துக்கொண்டே இருப்பது வெகு சில கலைஞர்கள்   தான்.

 அதில்  P.  B .  ஸ்ரீனிவாஸ் முக்கியமானவர்.


No comments:

Post a Comment