vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, September 11, 2015

ஒரு நகரக் கவிதை

ஒரு நகரக் கவிதை
                   --வைதீஸ்வரன் -


மேம்பாலங்களே இல்லாத கிராமத்தின் அடையாளங்கள்   
இன்னும் மிச்சமிருந்த அந்தக் காலத்து சென்னையில்  வளர்
ந்தவன் நான்.  இன்றைய அசுரத்தனமான  கான்க்ரீட்  கட்டட
ங்கள் எதுவுமே இல்லாமல்  ஊரெல்லாம் சூழ்ந்த கடலுக்கரு
கில் பரந்த வானத்தையும் மினுமினுக்கும் நட்சத்திரங்களை யும் போர்த்திக்கொண்டு தூங்கும் சாதுவான  அந்த  நகரம் 
இப்போது தொலைந்து விட்டது. அந்த இரவுகள் இப்போது  
இல்லாமல் போய்விட்டது.  நாளுக்குநாள் இரவில் மெல்ல  
வளர்ந்துமுழு வட்டமாகிப் பின் தேய்ந்து மறை யும் நிலவின் 
மோன லயத்தை மொட்டைமாடியில் நின்று ரஸித்துக்கொண்
டிருப்பது இப்போது நகரவாசிகளுக்கு மறுக்கப்பட்டபேரின்
பம்.

ஆனால் அப்போது ஊருக்குக்  குறுக்குமறுக்காக  போகும் 
புகை வண்டிகள் தான்  எங்கள்  அன்றாட போக்குவரத்துக்கு 
ஒரு பெரிய  தடங்கல். சிலசமயம் ரயில் தாமதத்தினால் சில 
மணி நேரம்போக்குவரத்து  ஸ்தம்பித்து போவதற்குக்  காரண
மாகவும்  நேர்ந்துவிடும். அந்த வகையில் மேம்பாலங்கள்  ஒரு 
பெரிய  உபகாரம்.

இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகக் கடந்து போகக் கூடிய  ரயிலுக்காக  இரு பக்கமும்  மூடிக்கொண்டு நிற்கும் ரயில்வே  கேட்டில் முட்டிக் கொண்டு  வாகனங்களும்  கட்டைவண்டி
ளும் ஜனக் கூட்டமும் பொறுமையற்றுக்  காத்துக் கொண்டி
ருக்கும். ரயில்கேட்  மூடுவதற்குள்  கடந்துபோய்விடவேண்டு
மென்று பல வாகனங்கள்  பரபரப்பாக  அந்த  ரஸ்தாக்களில்  
வேகமாக விரட்டிக் கொண்டு  ஓடுவதையும்  காண முடியும். 

 ரயில்வண்டி நெருங்கிவரும்  சப்தம்  கேட்டவுடனேயே 
கேட்டின் இரண்டுபக்கமும் காத்துக் கொண்டிருக்கும்  மக்கள் 
எல்லையற்ற பரபரப்புடன் திறக்கப்போகும் கேட்டை முட்டி 
மோதிக்கொண்டு தண்டவாளத்தைதாண்டிக்  கடந்துபோகத்  
தயாராக இருப்பார்கள். கேட் திறந்தவுடன் கடந்துபோன ரயி
லின் புகைப்புழுதியும் காற்றின் சுழற்சியும் அடங்குவதற்குள்
ளாகவே ஜனங்களின் கூட்டம் அலைமோதுவதைக்  காணும் 
போது எனக்கு ஒரு கவிதை மனதில் பட்டது. இந்தக் கவிதை 
யின் தொனியும் படிமமும் பான்மையும் எனக்கு எப்போதும்  
Ezra Pound கவிதையை ஞாபகப்படுத்தும். எனக்கு இந்தக் 
கவிதை பிடிக்கும். ஏனென்றால் இதில் மேம்பாலமற்ற சென் னையின் கடந்தகாலஅடையாளமும் தொக்கி நிற்கிறது.

"ரயில்வே கேட்
மாலை யிருட்டில்
விருட்டென வெளியைக் கலக்கி
தொலைந்து போன
மின்சார ரயிலை
குறுக்கு மறுக்காய்ப் பாய்ந்து
கூட்டமாய் தேடுகிறார்கள்
நகரத்து மக்கள் !!


* அப்போது மேம்பாலங்கள் இல்லை    

No comments:

Post a Comment