டேப்
(*சின்னக்கதை)
வைதீஸ்வரன்
மணி
பகல் பன்னிரண்டே
முக்கால் ஆகி
விட்டது. காலையிலிருந்து
வியாபாரம் எதுவும்
ஆகவில்லை. நடை
பாதையை ஒட்டிய
மாதிரி இருந்த
அந்த சின்னக்
கடைக்குள்ளிருந்து பார்த்தால்
கடந்து போகிறவர்களைப்
பார்த்துக் கொண்டே
இருக்கலாம்.
சிவலிங்கம்
கடந்த மூன்று
மணி நேரமாக
கடைக்குள்ளிருந்து அப்படித்தான்
பார்த்துக் கொண்டிருந்தார். வித
விதமான கால்கள்
எதிரும் புதிருமாக
போய்க் கொண்டிருக்கும்
நிகழ்வை எததனை
நேரம் தான்
பார்த்துக் கொண்டு
கல்லாவில் உட்கார்ந்திருப்பது? பசி
வேறு வயிற்றைக்
குடைய ஆரம்பித்தது.
சில
சமயம் இம்மாதிரி
பகல் நேரங்களில்
பள்ளிக்கூடப் பசங்களாவது
பென்சில் நோட்டு
ஸ்டிக்கர் சாக்கலேட்டு
என்று எதையாவது
கேட்டு வாங்குவார்கள்.இன்று
அது கூட
நேரவில்லை. இன்று
விடுமுறை.
கடையில்
மூன்று அடுக்குகளாக
ஷோகேஸில் அடுக்கிக்
கிடந்த பொம்மைகள்
அலங்கார கடிகாரங்கள்
பூங்கொத்துக்கள் பெண்களுக்கு
தேவைப்படும் அநேக
அனாவசியங்கள் தைய்யல்
தேவைகள் பிறந்த
நாள் வாழ்த்து
அட்டைகள் இப்படி
எத்தனையோ அன்றாட
பொருட்கள் சீந்துவாரற்று
காட்சி அளித்துக்
கொண்டிருந்தன.
பார்க்கப்
பார்க்க சிவலிங்கத்துக்கு
அலுப்பாகக் கூட
இருந்தது.
இனிமேலும்
பசியை ஒத்திப்
போட வேண்டாமென்று
முடிவுடன் கல்லாப்
பெட்டியை மூடிவிட்டு
எழுந்தார். ஷோ
கேஸ் கண்ணாடிக்
கதவுகளை ஒழுங்கு
படுத்தி மூடி
பூட்டி விட்டு
விளக்கு... விசிறிகளை
அணைத்து விட்டு
வெளியே வந்து
கடைக் கதவை
பூட்டினார்.
அந்தக்
கடைக்கு இரண்டு
பூட்டுக்கள் இருந்தன./ மேல்பூட்டை
பூட்டி விட்டு
கீழ் பூட்டைப்
பூட்டக் குனிந்தார்
அப்போது
தான் சர்ரென்று
ப்ரேக் போட்டவாறு
அந்தப் பையன்
சைக்கிளை ப்ளாட்பாரத்தில்
நிறுத்தி " அண்ணே...”
“ என்று அவசரமாக
குரல் கொடுத்தான்.
சிவலிங்கம்
இன்னும் பூட்டாத
கதவுடன் திரும்பிப்
பார்த்தார். அடுத்த
தெருவில் ஏதோ
கடையில் வேலை
பார்க்கும் பையன். சில
சமயம் பார்த்திருக்கிறார்.
பையனின்
முகமும் சட்டையும்
வேர்வையால் நனைந்திருந்தது. தலை
கலைந்து முகம்
ஒட்டிப் போயிருந்தது. முதலாளி
அவசரமாக அனுப்பியிருக்கக்
கூடும்.
“ அண்ணே...இன்னிக்கு
சீக்கிரம் மூடிட்டீங்களா? அண்ணே
வேகவேகமா வர்ரேன்...அண்ணே!”“ என்றான்
சற்று கெஞ்சிய
குரலில்...... அவனுக்கு
தேவையான பொருள்
வாங்குவதற்கு இந்தக்
கடையை விட்டால்
வெகு தூரம்
அலைய நேரிட
வேண்டும் போலும்!
சிவலிங்கம்
அவனை ஏற
இறங்கப் பார்த்தார். சற்று
பரிதாபமாக இருந்தது. இந்த
மாதிரி வயதில்
வேலை செய்யும்
கடைப் பையங்களை
பொதுவாக முதலாளிகள்
கை ஓங்காமல்
வேலை வாங்குவதில்லை
என்கிற யதார்த்தம்
அவருக்கு ஒரு
க்ஷணம் தோன்றி
மறைந்தது.
“ என்னடா?,,,இப்படி
ஓடி வரே! அவ்வளவு
அவசரமா என்ன
வேணும்? நான்
சாப்பாட்டுக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன்..”
“ அண்ணே...தயவு
செஞ்சி எல்ப்
பண்ணுங்க.. அண்ணே!
.மொதலாளி கோவுச்சுக்குவாரு! மணி
ஒண்ணாவலை! “
“ அப்படி
என்னடா அர்ஜண்டா..வேணும்
முதலாளிக்கு? “
“ டேப்
வேணும் அண்ணே! ஒடனே
வாங்கியார சொன்னாரு. லேட்
பண்ணா கோவிச்சுக்குவாரு!..” என்றான். தலையைக்
கலைத்துக் கொண்டே!
சிவலிங்கம்
சற்று தயக்கத்துடன்
நின்றார். காலையிலிருந்து
வியாபாரமே இல்லாத
நாளில் இப்படி
கதவைத் தட்டி
ஒரு வாடிக்கை
வந்திருக்கிறான். பையனைப்
பார்த்தாலும் பரிதாபமாக
இருக்கிறது..
அவர்
மெள்ள பூட்டைத்
திறந்து கதவை
அகட்டி வைத்து "உள்ளே
வாடா!” என்றார்.
விளக்கு
விசிறியைப் போட்டார். பையன்
திடீரென்று அடித்த
குளிர்ந்த காற்றில்
சட்டையை உதறிக்
கொண்டு நெற்றியைத்
துடைத்துக் கொண்டான். நீர்
தெளித்த அடுப்புவாணலி
மாதிரி பெருமூச்சு
விட்டான்
“ என்ன
டேப்புடா வேணும்....சின்ன
சைஸா? பெரிசா?
“
“பையனுக்கு
அவர் கேட்ட
விவரத்துக்கு சரியான
பதில் தெரியவில்லை. சற்று
தாமதித்து விட்டு "பெரிசே
கொடுத்துடுங்க அண்ணே!' என்றான். பொதுவாக.
கடையின்
நிம்மதியான குளிர்ச்சியான
சூழலில் நின்று
கொண்டிருந்த பையன்
முகத்தில் "அப்பாடா..” என்ற
ஆசுவாசம் தெரிந்தது. பொருள்
வாங்க வந்த
நோக்கம் கூட
அவனுக்கு முக்கியமற்றதாக
தோன்றிக் கொண்டிருந்தது. களைப்பு
மாறிக் கொண்டிருந்த
அந்த நிம்மதியில்
அவன் திளைத்துக்
கொண்டிருந்தான்
சிவலிங்கம்
பெரிய சைஸ்
டேப் எங்கே
என்று ஞாபகப்
படுத்திப் பார்த்தார். தேடிய
போது அது
ஷோகேஸில் கீழ்
அடுக்குப் பலகையில்
காணவில்லை. பிறகு
தான் நினைவுக்கு
வந்தது. அது
உயரே மேல்
அடுக்கில் சில
பொருள்களுக்கு பின்னால்
ஒரு அட்டைப்
பெட்டியில் வைக்கப்
பட்டிருந்தது.
இப்போது
உள்ளே கனன்று
கொண்டிருக்கும் பசியை
பொறுத்துக் கொண்டு
தான் ஆக
வேண்டும்.. சற்று
எரிச்சலாக இருந்தது.
ஒரு
ஸ்டூலைப் போட்டு
மேலேறி காலை
எக்கியவாறு நின்று
கொண்டு வலது
கையை கூடிய
வரை ஷோகேஸ்
பலகையில் நீட்டினார். அநேகமாக
மூலையை ஒட்டிய
மாதிரி இருந்தது. அந்த
அட்டைப் பெட்டி.
அதை
எடுத்துக் கொண்டு
கீழே இறங்குவதற்குள்
பல ஆபத்தான
தருணங்களை தவிர்த்து
வர வேண்டியதாக
தோன்றியது.. மேல்
மூச்சு வாங்கியது. வயதும்
கூடி விட்டதோ!
கஷ்டப்பட்டு
கீழே மேஜையில்
அந்த பெட்டியை
இறக்கி வைத்தார்.
அந்தப்
பையன் அதிக
அக்கறையில்லாமல் நிம்மதியாக
நின்று கொண்டிருந்தான்.
“ ஏண்டா
இது அவ்வளவு
அர்ஜண்டா. தேவையா .உங்க
முதலாளிக்கு? “ எடுரா..எந்த
டேப் வேணும்? வொய்ட்டா.?......கருப்பா?
பையன்
அப்போது தான்
சுய நினைவுக்கு
வந்தது போல்
பொருளைப் பார்த்தான்
அந்த டேப்பைப்
பார்த்தவுடன் அதிர்ச்சி
அடைந்தான்
" அண்ணே..அண்ணே..இது
இல்லே அண்ணே !
.நான் அளக்கற
டேப் கேக்கலே
அண்ணே! நான்
கேட்டது செல்லோ
டேப்.. பார்ஸலுக்கு
ஒட்டறாங்களே! அந்த
டேப்பு! என்றான்.
சிவலிங்கத்துக்கு
முகம் துடித்தது
கை பதறியது. கொஞ்சம்
நிதானமிழந்தாலும் அவர்
கைகள் அவனை
அறைந்து விடக்
கூடும் என்று
தோன்றியது.
டேய்
முட்டாளு!...கேக்கற
பொருளை ஒழுங்கா
சொல்ல முடியாதா?
“ ஸாரி..அண்ணே....மன்னிச்சுக்கோங்க
அண்ணே....செல்லோ
டேப்பு! “ அவர்
கையைப் பிடித்துக்
கொண்டான்.
இப்போது
செல்லோடேப்பை எடுக்க
வேண்டும்!
அதை
எடுக்க கல்லாவின்
இடுக்கில் உள்ளே
நகர்ந்து போக
வேண்டும். அடியில்
கீழ்ப் பலகையில்
இருந்தது!
சிவலிங்கம்
மெதுவாக கல்லா
இடுக்கில் தன்னை
நுழைத்துக் கொண்டு
உள்ளே போய்
குனிந்தார். தலை
லேசாக முட்டியது. உட்கார்ந்து
கொண்டு மெதுவாக
செல்லோடேப்பை எடுத்தார்.
ஏற்கனவே
மேலேயிருந்து கீழே
இறக்கிய அந்த
டேப் அட்டைப்
பெட்டியை மீண்டும்
அங்கே வைத்தாக
வேண்டிய காரியம்
நினைவுக்கு வந்தது. பல்லைக்
கடித்துக் கொண்டார்.
இனிமே
எவனுக்கும் பச்சாத்தாபப்படக்
கூடாது! “
“ சரி
சரி...எது
வேணும் எடு...” செல்லோ
டேப்பை எடுத்து
மேஜையில் வைத்தார்.
பையன்
பார்த்தான். “பெரிசு
கேட்டாரா!...சின்னது
கேட்டாரா....” பையனுக்கு
குழப்பம்.
“ என்னடா...முழிக்கிறே! சீக்கிரம்
எடுரா....கடையை
மூடணும்..” கடுப்பாக
பேசினார் சிவலிங்கம்.
“ அண்ணே...எது
கேட்டாருன்னு ஞாபகம்
இல்லை அண்ணே...”
“ என்னடா...என்னடா.. ஞாபகம்
இல்லே" சிவலிங்கத்துக்கு
ஆத்திரமாக வந்தது. மணிக்
கட்டை முறித்துக் கொண்டார்.
“ கொஞ்சம்
இருங்க அண்ணே!” பையிலிருந்து
கைப்பேசியை எடுத்துப்
பேசினான் பையன். பேசும்போதே
அவன் கை
நடுங்கியது.
“ அய்யா,
செல்லோ டேப்
பெரிய சைஸா....சின்ன
ஸைஸா...”
அவன்
முதலாளி மறுமுனையில்
கத்தியது சிவலிங்கத்துக்கே
காதில் விழுந்தது.
“ஏண்டா..சோமாரி....இன்னுமா...வாங்கிட்டு
வரலே! ஊர்
சுத்தறயா? பெரிய
டேப்பு வாங்கிட்டு
வாடான்னு தானே
சொன்னேன். இங்கே
அர்ஜண்டா பார்ஸல்
கட்டியா வணும். சீக்கிரம்
வாங்கியாடா! “
முதலாளி
சொன்னது சிவலிங்கத்துக்கே
நன்றாகக் கேட்டது. பையன்
மீண்டும் சொல்லத்
தேவையில்லை.
“ இந்தாடா....பெரிய
டேப்பு....45 ரூபா! சீக்கிரம்
எடு..கடையைப்
பூட்டணும் "
பையனிடம்
டேப்பைக் கொடுத்தார்.
பையன்
பைக்குள்ளிருந்து நோட்டை
எடுத்தான். இருபது
ரூபாய் இருந்தது.
“அய்யய்யோ குறையுதே! முதலாளி
இவ்வளவு தான்
கொடுத்தனுப்பினாரா!.......
“ அதுக்கு
நான் என்னடா
பண்ணட்டும்! “ சிவலிங்கத்தின்
குரல் தீனமாக
ஒலித்தது!
அப்போது
மீண்டும் பையனின்
கைப்பேசி ஒலித்தது.
முதலாளி
தான் மீண்டும்
கோபமாக "ஏன்னடா....இன்னுமா
கெளம்பலே! என்னடா
வாங்கிட்டியா? “
பையன்
முனகிக் கொண்டே
நிலவரத்தை சொன்னான்
“ஓ
பணம் கொண்டு
போகலையா...தடிமாடு.. நீ
தானடா இருபது
ருவா போரும்னே!
! ..யாரு..நம்ப
சிவலிங்கம் கடை
தானே! சாயங்காலம்
நானே போறபோது
கொடுத்திடறேன் இப்போ
முதல்லே டேப்பைக்
கொண்டு வாடா....சிவலிங்கத்து
கிட்டே போனைக்
கொடுரா!..” என்று
கத்தினார்.
சிவலிங்கத்துக்கு
அவரிடம் நிதானமாக
நாகரீகமாகப் பேசும்
அளவுக்குப் பொறுமை யில்லை.
நிலைமை
கட்டு மீறிப்
போய்க் கொண்டிருந்தது.
“ ஓடுரா...முதல்லே
உடனே கடையைக்
காலி பண்ணு!.. இல்லாம
போனா நானே
உன்னைக் கடையிலே
வைச்சுப் பூட்டிட்டுப்
போயிருவேன் ஓடுரா...” என்று
கத்திக் கொண்டே
டேப்பை அவன்
மூஞ்சியில் எறிந்தார்... அவர்
கையில் சாவிக்
கொத்து ஆடிக்
கொண்டிருந்தது!!.
பையன்
டேப்புடன் மாயமாய்
மறைந்து போனான்.....”
(*தீராநதி மார்ச் 2018)
Ø
No comments:
Post a Comment