vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, April 11, 2018

பாசக் கயிறு [ வைதீஸ்வரன் ]


பாசக் கயிறு




                                                                              [ வைதீஸ்வரன் ]

கூடத்தில் சிம்னி விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்ததுசின்ன ஒளி வட்டத்தைத் தவிர மண்கூடத்தின் தரை முழுவதும் இருள் அப்பிக் கிடந்தது.
நானும் என் அக்காவும் விளக்கருகில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி என் அப்பா முகத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந் தோம்சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்த நீள கடிகாரத்தின் சின்ன முள் எட்டை மெள்ள நெருங்கிக்கொண்டிருந்தது.

அப்பா ஜன்னல் அருகே போய் அனாதியாக இருந்த இருட்டுத் தெருவைப் பார்த்து விட்டு ஜன்னலை மூடிக் கொண்டு வந்தார்.

“ மணி எட்டயிடுத்து.. இதோ இப்போ வந்துடும்இப்போ வந்துடும்!.. பாரு...”  அப்பா சொன்னதைக் கேட்டவுடன் நாங்கள் இரண்டு பேரும் அப்பாவிடம் போய் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டோம்.

விளக்குத் திரி திரித்துக் கொண்டு ஓரமாக உட்கார்ந்திருந்த அம்மா...” என்ன பயம்...உங்களுக்குதினம் தினம் தானே நடக்கிறது! “ என்று சொல்லி வாய் மூடுவதற்குள் காதுகள் செவிடாகும் பயங்கர சத்தத்துடன் சைரன் ஒலி கேட்டதுநாங்கள் காதுகளைப் பொத்திக் கொண்டோம்.
அந்த சைரன் ஒலி எங்கள் முனிஸிபாலிடி மைதானத்திலிருந்து வந்து கொண்டிருந்ததுஊர் முழுக்கக் கேட்பதற்காக அத்தனை சத்தமாக வைத்திருந்தார்கள்.
அந்த சத்தம் ஒரு நான்கு நிமிஷங்களுக்கு கேட்கும்ஆனாலும் அதைக் கேட்கும்போது எங்களுக்கு ஏனோ குலை நடுக்கம் உண்டாகும்காதைப் பொத்திக் கொண்டாலும் அதை கேட்காமல் தடுக்க முடியாது .மனசு கலவரமாக அடித்துக் கொள்ளும் நிஜமாகவே ஊருக்கு ஆபத்து வந்து விட்ட்து போல் நடுக்கமாக இருக்கும்.

அப்போது 1941 என்று நினைவுஜப்பான் ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு உலகத்தின் ஒரு பாதியை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டு மென்ற வெறியுடன் நடத்திக்கொண்டிருந்த இரண்டாம் உலக யுத்தம்இந்தியாவின் மேல் முக்கியமாக இந்தியாவின் கிழக்கு பிரதேசத்தில் தாக்கம் வரலாம் என்று ரகஸியத் தகவல்கள் வந்து கொண்டிருந்தனஅப்படி யுத்தம் வந்து குண்டுகள் வீசப் பட்டால் மக்கள் என்னென்ன பாதுகாப்பு எச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று எல்லோருக்கும் அறிவிக்கப் பட்டது.

தினமும் இரவு எட்டு மணிக்கு சைரன் ஒலி கேட்டவுடன் ஊருக்குள் வீடுகளெல்லாம் விளக்குகளை அணைத்து விடவேண்டும் ஏற்கனவே மறைப்புப் போட்ட மங்கலான தெருவிளக்குகளை அணைத்து விடுவார்கள் மக்கள் யாரும் வெளியே நடமாடக் கூடாது.

இதெல்லாம் எதுக்குப்பா செய்யறாங்கஎன்று அப்பாவை கேட்டேன்.

ஜப்பான்காரன் ராத்திரிலே தான் வந்து தாக்குவானாம்.. அப்போ அவங்க போர் விமானம் குண்டு போட மேலே பறந்து வரும் போது அவனுக்கு கீழே ஊரெல்லாம் இருட்டா இருந்தா அவனுக்கு குறி வைத்து குண்டு போட முடியாது இல்லையாஅப்பொ அவன் திரும்பி போயிடுவான்....நமக்கு ஆபத்து இருக்காது...இல்லையா!..” என்று சொல்லிவிட்டு என்னைக் கட்டிக் கொண்டார்.

நவீன ஆயுத தயாரிப்புகள் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கிற இன்று அப்படிப்பட்ட பழங்கால பாதுகாப்பு எச்சரிக்கைகளை நினைத்துப் பார்க்கும்போது ஹாஸ்யமாக இருக்கிறதுஇப்போது இருட்டோ வெளிச்சமோ எதுவுமே அழிக்க நினைக்கும் ஆயுதங்களைத் தடுக்க முடியாது!

ஆனால் அது அன்றைய யுத்தகாலத்தில் ராணுவம் விதித்த அவசியமான அவசர எச்சரிக்கையாக இருந்தது.

தவிரவும் அப்போது ஊர்த் தெருக்களில் அங்கங்கே பதுங்கு குழிகளை வெட்டி வைத்திருந்தார்கள் மாதங்களில் சில நாட்களில் அவ்வப்போது எங்கள் தெருக்களுக்கு வந்து ஒலிப்பெருக்கியில் அபாய அறிவிப்பு செய்வார் கள்கேட்ட உடன் மக்கள் வீட்டை விட்டு எவ்வளவு வேகமாகப் போய் எவ்விதம் பதுங்கு குழிகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊரில் உள்ள மாணவர்களை ஒன்று திரட்டி சாரணர் படைப் பயிற்சி அளித்து மக்களுக்கு அவர்கள் அபாயகாலங்களில் எவ்விதம் அவசர உதவிகள் செய்ய முடியும் என்கிற பயிற்சிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த வருஷங்களில் அப்படி ஒரு மாணவனாக இருந்த என் பெரியப்பா மகன் நரசிம்மனை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக பொறாமையாக இருக்கும் அவனுக்கு 17 வயது இருக்கலாம் என்னை விட பத்து வயது மூத்தவன்.

அவன் அப்படிப்பட்ட சாரணர் படையில் சேர்ந்திருந்தான்வாரத்திற்கு மூன்று நாட்கள் அவன் பயிற்சிக்காக விடியற்காலையிலேயே எழுந்து போய் விடுவான.அவனுக்கு தோளில் பட்டை வைத்த காக்கி சட்டையும் முழங்காலைத் தாண்டி நீண்ட டிராயரும் அகலமான குறுக்கு பெல்ட்டும் கொடுத்திருந்தார்கள்ஒரு கருப்பு ரப்பர் நாடாவில் ஒரு பிகில் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கழுத்தை சுற்றி ஒரு கலர் துணி சுற்றிக் கொள்வானஆனால் காலுக்கு செருப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை.

நரசிம்மனை இத்தகைய வீர உடைகளுடன் பார்க்கும்போது எனக்கு வியப்பாக பெருமிதமாக இருக்கும்நானும் சீக்கிரம் பெரியவானாக ஆக வேண்டுமென்று ஆத்திரமாக இருக்கும்.

ஆனால் என் பெரியப்பா நரசிம்மனைப் பார்க்கும் போதெல்லாம் நறநறவென்று பல்லைக் கடித்துக்கொள்வார். “உதவாக்கரை.. உதவாக் கரை..” என்று அதிக சத்தமில்லாமல் அவனைப் பார்த்துக் கடித்துக் கொள்வார்அவரை எங்களுக்கு பிடிக்காதுகூடத்துப் பக்கம் அவர் வந்தாலே நாங்கள் ஓடி விடுவோம்.

ஆனாலும் அவர் நரசிம்மனைப் பார்த்து அப்படி வெறுத்துக் கொண்டதற்கு அவர் பக்கமும் நியாயமில்லாமல் இல்லை... நரசிம்மனுக்கு படிப்பு ஏறவில்லை.ஒவ்வொரு வகுப்பையும் தாண்டுவதற்கு இரண்டு வருஷங்கள் எடுத்துக் கொண்டான்.

புஸ்தகத்தைப் பாத்தே புரிஞ்சிக்காத மண்டு இவன் நாட்டைக் காப்பாத்தப் போறானாம்எல்லாம் ஊர் மேயறதுக்கு இதுக்கு ஒரு சாக்கு இவனுக்கு! “ என்று பெரியப்பா பொருமிக் கொண்டே இருப்பார்.

ஆனால் நான் நரசிம்மனைப் பார்த்து எப்போதும் அசந்து போய்க் கொண்டு தான் இருப்பேன்அவன் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அவனுக்கு எப்படியெல்லாம் பயிற்சி கொடுத்தார்கள் என்றுஅவனைக் கேட்டுத் தொளைத்து விடுவேன் சில அப்யாசங்களை எல்லாம் எனக்கு சொல்லித் தருவான்கற்றுக் கொள்வதற்கு எனக்குக் குஷியாக இருக்கும்.

நரசிம்மன் பத்தாவது க்ளாஸ் பெயிலான போது அவனுக்கு பதினெட்டு வயது முடிந்து போய் விட்டது.

அந்த பரிட்சை தேர்வு அறிவிப்பு வந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறதுநரசிம்மன் கூடத்தில் தலையைக் குனிந்து கொண்டு நின்றான் சுற்றி சில உறவினர்களும் என் அப்பாவும் நின்று கொண்டிருந் தார்கள்.

இந்த தடிமாட்டை வளக்கறதுக்கு நான் இன்னும் எத்தனை வருஷம் ஓடா ஒழைக்கணும்டாவருஷத்துக்கு அரையடி ஒசர மட்டும் தெரியும்ஆனா படிப்புலே ஒரு....ரும்...கிடையாதுஇவனுக்கு ஒரு தம்பி ரெண்டு தங்கை குடும்பம்...இதைப் பத்தி எதாவது அக்கரை இருக்காபெயிலாயிட்டு வந்துருக் கானே! எங்கெயாவது தொலைஞ்சு போடா! “ என்று ஆத்திரத்துடன் கத்தினார்பெரியப்பா.

என் அப்பா பெரியப்பாவை சமாதானப்படுத்த முயன்றார் பெரியப்பா திமிறிக் கொண்டு நகர்ந்தார்உறவினர்கள் மேலும் அங்கே நிற்க விரும்பாமல் நகர்ந்தார்கள்நரசிம்மன் குனிந்த தலையுடன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்எனக்கு நரசிம்மனைப் பார்க்க மிகவும் வேதனை யாக இருந்ததுஸ்கூல் ...படிப்பு பரிட்சை பாஸ் பெயில்..இதெல்லாம் எனக்கு சரியாக விளங்கவில்லைஒரு அப்பா பிள்ளையை இவ்வளவு கோபித்துக் கொள்ள முடியுமா..என்று நினைக்க பயமாக இருந்ததுஎன் அப்பாவும் இப்படி இருப்பாரோ என்று முகத்தைப் பார்த்துக் கொண்டேன்.

நான் நரசிம்மனை நெருங்கி அவன் தோளைத் தொட்டேன்அவன் லேசாக அசைந்து தன்னை விடுவித்துக் கொண்டான்நெகிழ்ச்சியுடன் என்னை ஓரக் கண்ணில் பார்த்தான் அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை!!

அடுத்த நாள் விடிந்த போது பெரியப்பா வீட்டில் ஒரே சத்தமாக இருந்ததுபெரியம்மா தம்பி தங்கைகள் எல்லாம் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள் நானும் அப்பாவும் ஓடிப் போய் பார்த்தோம்.

நரசிம்மனைக் காணவில்லை!!

அவன் உடுப்புகள் வைத்திருந்த பெட்டி அதற்கு மேல் அவன் மாட்டி வைத்திருந்த விநாயகர் படம் பிக்ல் பெல்ட் எதையும் காண வில்லைபெரியப்பா தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார். “அவன் ஓடிப் போய்ட்டாண்டா! “

அப்பாவும் சில நண்பர்களும் பஸ் ஸ்டாண்டு ரயில் நிலையம் பள்ளிக் கூடம் சினிமாக் கொட்டகை எல்லா இடத்திலும் தேடி விட்டு வந்தார்கள்.

செய்தி கேட்டு பக்கத்து வீட்டு சங்கர மாமா ஓடி வந்தார்ஆனால் நிதானமாக பதில் சொன்னார். “ ஏய்...சாம்பு ஒம் பிள்ளை வேறெ எங்கியும் போகலைடா!மிலிடிரிலே சேந்திருக்கான்நீ வேணும்னா அந்த ஆபீஸுலெ விசாரிச்சுப் பாருஇப்பெல்லாம் வீட்டுலே கோவிச்சுகிட்டு ஓடற பசங்கள்ளாம் மிலிட்றீல தான் சேந்துடறாங்கவெள்ளக்காரனுக்கு இப்ப அவசரமா நெறைய ஆள் தேவைப் படுது" என்றார்.

விசாரித்துப் பார்த்ததில் அது உண்மை என்றே தெரிந்ததுபதினெட்டு வயது தாண்டி சாரணர் பயிற்சி உள்ளவர்களுக்கு உடனடியாக உடனடியாக மிலிட்டெரியில்வேலை கிடைத்தது தேர்வு செய்தவர்களை வடக்கே பயிற்சிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்பயிற்சிக்குப் பிறகு அவர்களை பர்மாவுக்கோ ஜப்பானுக்கோ அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த தகவல் அரசியல் ரகஸியமாக பாவிக்கப்பட்டது.

பெரியப்பா தலையில் இடி விழுந்த மாதிரி உட்கார்ந்திருந்தார். “என்ன இருந்தாலும் வயசுக்கு வந்த பையனை இப்படி கண்டபடி திட்டலாமாபுத்தி கெட்ட மனுஷனா இருக்கீறே! .” என்று பெரியம்மா அவரை ஏசிக் கொண்டிருந்தார்.

“ நல்ல துணிச்சலான பையண்டாஇப்படி துணிஞ்சி சண்டைக்குப் போயி நம்ம நாட்டைக் காப்பாத்தணும்னு நம்ம குடும்பத்துலே யாருக்கு தைரியம் வந்திருக்குபரம்பரையிலேயே நாம்ப பயந்தாங்குள்ளிகள்! “ என்று அப்பா உரத்த குரலில் பாராட்டினார்.

நான் தகுதியான வயது வந்தவுடன் நரசிம்மனைப் போல் சாரணர் பயிற்சியில் சேர வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தேன்நரசிம்மன் எங்கோ அபாயமான இடங்களில் கடுமையாக போரிட்டு எதிரிகளை தீரமாக சுட்டு வீழ்த்திக் கொண்டிருப்பது போல் எனக்கு அடிக்கடி கனவுகள் வந்து கொண்டிருந்தன
* * *
நாளுக்கு நாள் பிள்ளையை பற்றிய கவலையில் பெரியப்பா நொந்து போய் உடல் பலஹீனமாகிக்கொண்டுவந்தார்இரவெல்லாம் பிதற்றிக் கொண்டிருந் தார்,.அப்போது இரவு நேரங்களில் வானொலியில் சில பிரத்யேக அலை வரிசைகளில் யுத்த செய்திகள் ஒலி பரப்புவார்கள்ஆனால் வானொலிப்பெட்டி எங்கள் மூன்றாவது வீட்டில்இருந்த சாமுவேல்ராஜ் வீட்டில் தான் இருந்தது.

அன்று வரை யுத்தங்களிலொ நாட்டு நடப்பிலொ அக்கறையில்லாத பெரியப்பாவுக்கு இப்போது இந்த செய்திகளைக் கேட்பதில் மிகவும் முனைப்பு ஏற்பட்டது.பெரியப்பா என் அப்பா நான் எல்லோரும் இரவு பத்து மணியானால் சாமுவேல் மாமா வீட்டுக்குப் போய் விடுவோம்.

நேச நாடுகள் மிகவும் வெற்றிகரமாக எதிரிப் படைகளை முறியடித்துக் கொண்டிருப்பதாகவும் கூடிய சீக்கிரம் யுத்தம் நமக்கு சாதகமாக முடிவுக்கு வருமென்றும் நமது தரப்பில் போர் வீரர்களின் இழப்பு மிகவும் குறைந்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் சொல்லுதாகவும் ஒலிபரப்பிக்கொண்டிருந் தார்கள்.

பெரியப்பா அரற்றுவார். “இவன் புள்ளி வெவரத்தப் போயி கொள்ளி வைக்கஅங்கே செத்துப் போனவனுக்கெல்லாம் குடும்பம் இல்லையா...அப்பா அம்மா அண்ணா தங்கை இல்லையாபிள்ளையை பறி கொடுத்து எம்மாதிரி எத்தனை பேர் ஆலாப் பறப்பாங்களோஎம்புள்ளை போயிருந்தான்னா அவனைத் திருப்பிக் குடுப்பானுங்களா?“ என்று விம்மி விம்மி அழுவார்எல்லோரும் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருவோம்.

***

ப்பானில் அணுகுண்டு போட்ட உடனேயே உலகயுத்தம் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டதுநாடுகளுக்கிடையே நிகழ்ந்த போர்களில் அது வரை நிகழ்ந்திராத கற்பனை செய்யமுடியாத சேதத்தை அது உண்டாக்கியிருந்தது.
போரில் வீடுகள் உறவுகள் இழந்து அகதிகளான பல இந்தியர்கள் பர்மா வழியாக கால நடையாக் இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

“ எம் புள்ளெ போய்ட்டாண்டா!..” என்று முனகிக் கொண்டே என் பெரியப்பா உணவு செல்லாமல் படுத்த படுக்கையாக முனகிக் கொண்டிருந்தார்.அவர் மீண்டும் தேறி வருவார் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டு வந்தது.

அப்போது தான் அந்த பட்டாளத்து சிப்பாய் எங்கள் வீட்டு வாசலுக்கு முன் வந்து நின்றான்உயரமாக உரமேறிய கைகளும் கால்களுமாக கசங்கிய முரட்டுக் காக்கி சட்டையும் பேண்டும் உயரமான பூட்ஸும் போட்டுக் கொண்டு வாசலை அடைத்துக் கொண்டு நின்றான்சற்று கருத்த முகத்தில் சிறிய தழும்புகளுடன் அடர்த்தியான மீசையுடன் அவன் உள்ளே நுழைந்த போது நாங்க்கள் சற்று பிரமிப்புடன் திகைப்புடன் பார்த்தபடி நின்று போனோம்.

அவன் உள்ளே வருவதை முதலில் என் அப்பா தான் பார்த்தார்அவனை நரசிம்மாஎன்று கூப்பிடத் தோன்றாமல் வாயடைத்துப் போய் நாங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.அவன் கையில் ஒரு கோணிப் பை நீளத்துக்கு ஒரு சணல் பை தொங்க்கிக் கொண்டிருந்தது.

என்னாப்பா!...எல்லாரும் எப்படி இருக்கேள்!...என்ன அப்படி பாக்கறீங்கநரசிம் மன்தான்!” என்று பலமாக பேசிக் கொண்டே என் தோளைத் தட்டி னான்எனக்குத் தோள் வலித்தது.

டேய்....நரசிம்மாநரசிம்மாநரசிம்மனாடா நீவாடா...வாடா...” என்று எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள்குரல் கேட்டு வெளியே வந்த பெரியம்மா தள்ளாடித் தடுமாறி வந்து அவன் தோளைக் கட்டித் தழுவிக் கொண்டு வார்த்தை வராமல் விக்கி விக்கி அழுதார்.

கண்ணே..உசுரு பொழைச்சு வந்திட்டயாடாப்பா!..” என்று தேம்பி வாய் குழறிக் கொண்டிருந்தாள்.

என்னாம்மா...இப்படி அழறேள்ஏன் இப்படி எல்லாரும் கலங்கறேள்ஒண்ணும் ஆபத்தில்லேஒண்ணும் பயப் படறதுக்கு இல்லேநாம்ப இப்போ ஜெயிச்சுட்டோம்னு எல்லாரும் சந்தோஷப்படுங்கோஇனிமே நம்ப ஊரு உலகம் எல்லாம் நன்னா இருக்கப் போறதுகவலைப் படாதே ங்கோ!! அப்பா..எங்கே! அப்பாவைத்தான் முதல்லே பாக்கணும்னு நெனைச்சேன்அப்பா எங்கேஎன்றான்.

பெரியம்மாவால் பதில் சொல்ல முடியவில்லைஉள்ளறையைக் காட்டி விட்டு சோகமாக நின்றாள்.

நீ போனதுலேருந்து அப்பா ரொம்ப வேதனைப் பட்டுட்டார்டாநீ ஓடிப் போனதுக்கு தான் தான் காரணம்னு எப்பப் பாத்தாலும் நொந்து கொண்டே இருந்தார்இப்போ படுத்த படுக்கையாய்ட்டார் போய் பாரு! “ என்றார் என் அப்பா.

ஐய்யய்யோபாவம் அப்பாஅவருக்கு நான் படிச்சு நெரையா சம்பாதிக்கணும்னு ஒரு பேராசை..அவரோட சுபாவம் அப்படிஅவருக்கு நான் பணம் சம்பாதிக்கணும்!பொறுப்பாக் குடும்பத்தைக் காப்பாத்தணும்னு ஒரு ஆதங்கம்..ஆனா என் விதி வேறெ மாதிரி அமைஞ்சிது. “

போய்ப் பாரு..அப்பா உள்ளெ தான் இருக்கார்என்றார் என் அப்பா.

சித்தப்பா இப்போ பாருங்க.. அவருக்கு நான் இப்போ ஒரு வேடிக்கைகாட்டப் போறேன்! “ என்று சொல்லிக் கொண்டே நரசிம்மன் உள்ளே போனான்மெள்ள நுழைந்தான்.

நாங்கள் எல்லோரும் ஆவலுடன் அவனுடன் போய் அவனை சூழ்ந்து நின்று கொண்டிருந்தோம் அவன் என்ன வேடிக்கை காட்டப் போகிறான்!...

“ அப்பா.....அப்பா....” நரசிம்மன் மெதுவாக அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு பரிவாகக் கூப்பிட்டான்மேலும் இரண்டு மூன்று முறை கூப்பிட்டு தலையைத் தடவிக் கொடுத்தான்பெரியப்பா கண்ணை லேசாகத் திறந்து பார்த்தார்அவர் கண்கள் லேசாக சுருங்கிக் கொண்டது மீண்டும் அகலமாக திறந்துகொண்டது.

யாரு இதுடாக்டராடாக்டரெல்லாம் வேண்டாம்னு சொன்னேனேடீஎம் புள்ளை வந்தானா? “ வாயோரம் எச்சில் வழிய உளறலாக பேசினார்.

அப்பா...அப்பா... டாக்டர் இல்லேந்ரசிம்மன் உங்க பிள்ளை ந்ரசிம்மன் வந்திருக்கேன்..நரசிம்மன்...!

“ ....சி...ம்மனா!  நர சிம்ம..னா!...”

“ ஆமாம்ப்பா... நானே தான்....”

பெரியப்பா கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.வார்த்தைகள் வாயை விட்டு வர முடியாமல் மேலும் குழறியது.

“ என் கண்ணே...நரசிம்மா!...வந்துட்டியாடாஉசிரோட இருக்கியாடாஅப்பா வைப் பாக்க வந்துட்டியாடாஎங்க்கண்ணே! ..: நடுங்கும் கைகளுடன் அவனைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்.கண்பார்வை நிலைகொள்ளாமல் அலைந்தது..

“ வந்துட்டேம்ப்பா!.. கவலைப் படாதீங்க்கோஇதோ பாருங்கோநான் ஓடிப் போனேன்னு தானே உங்களுக்கு கோவம்பாருங்கோஓடிப் போயி எவ்வளவு சம்பாதிச்சிண்டு வந்திருக்கேன்பாருங்கோஎவ்வளவு பணம் சம்பாதிச்சிண்டு வந்திருக்கேன் பாருங்கோ! ... என்று சொல்லிக் கொண்டே அவன் சணல் பையிலிருந்து ஒரு சின்னமூட்டையைப் பிரித்து அப்பாவைக் குளிப்பாட்டுவது போல் அவர் உடம்பின் மேல் கொட்டினான்கொட்டி விட்டு சிரித்தான்.

பெர்யப்பா உடம்பு முழுவதும் நோட்டு நோட்டாக பணம் குவிந்து கிடந்தது.
சுற்றி நின்ற நாங்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் நின்றோம். ஒரு கணம் எங்களுக்கு எதுவும் நம்ப முடியவில்லை!.

அவர் மார்பிலும் முகத்திலும் பரவிக் கிடந்தஅத்தனையும் அன்னிய தேசத்து நோட்டுக்கள்கசங்கியும் மடிந்தும் சுருண்டும் கட்டுக் கட்டாக பெரியப்பாவின் மேல் கிடந்தது.

பெரியப்பா அவன் செய்த செய்கை சரியாக விளங்காமல் மார்பில் கிடந்த நோட்டுக்களைக் கையில் எடுத்து உற்றுப் பார்த்தார்.

நரசிம்மன் என்னா பாக்கறேள்பணம்...பணம்....! “ என்றான்.

பெரியப்பா இரண்டு கைகளாலும் நோட்டுக்களை எடுத்து எடுத்துப் பார்த்து திக்பிரமையுடன் வாயைத் திறந்து கொண்டார்அவருக்கு படபடவென்று மூச்சுவந்தது.கைகள் பரபரத்தது.

"நரசிம்மா...என்..கண்ணே!..” என்று வாய் குழறியது..

என் அப்பா நெருங்கிப் போய் அந்த நோட்டைக் கையில் எடுத்துப் பார்த்தார். ஏண்டா.. இதெல்லாம் பர்மா நோட்டு மாதிரி இருக்கே! “ என்றார்.

நரசிம்மன் பலமாக சிரித்து விட்டான்.

ஆமாம்..சித்தப்பா இதெல்லாம் பர்மா நோட்டுத் தான்இப்போ செல்லாத நோட்டு..அடுப்பு எரிக்கலாம்ஹாஹ்ஹ..சும்மா அப்பாவை தமாஷ் பண்றதுக்காக கொண்டு வந்தேன்என்றான் .

“ அப்பா என்ன பாக்கறேள்பணம்...பணம்...” என்று அவர் கையைப் பிடித்து சிரித்து சும்மா ஜோக்குப்பாஜோக்! “ என்று தலையைத் தடவப் போனான்.

ஆனால் பெரியப்பா அசையாமல் நோட்டுக்களையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்நரசிம்மன் பேசியதும் சிரித்ததும் அவர் காதில் விழவேயில்லைகண் விழி ஆடாமல் பார்த்துக்கொண்டிருந்தார்தலை மட்டும் சற்று சாய்ந்துகொண்டது.

நாங்கள் அத்தனை பேரும் எத்தனை முறை கூப்பிட்ட போதும் அவர் சலனமற்று கையிலிருந்த ரூபாய்நோட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். பணத்தைப் பார்த்த அதிர்ச்சி இன்னுமவர் முழியிலொட்டிக் கொண்டிருந் ததுஅப்படித்தான் தோன்றியது. அது தான் அவர் கடைசி நினைவு. .


***

ப்படி அப்பாவுக்கு விபரீதமாக அதிர்ச்சி நேரும் என்று நரசிம் மன் எதிர்பார்த்திருக்கமாட்டான்மிலிட்டரிக்காரகளுக்கு இப்படிபட்ட விளை யாட்டு சகஜமான ஒன்று அவனும் அதை நினைத்து சிலகாலம் மன உளைச்ச லுடன் தான் இருந்தான்.

ந்ரசிம்மனின் குரூரமான ஹாஸ்யத்தினால் நேர்ந்த விபரீதத்தை யாராலும் ஜீரணிக்க முடியாவிட்டாலும் அவனை ரொம்பவும் கடிந்துகொள்ள முடியவில்லைஇந்த விபரீதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தொலைந்து போனவன் மீண்டு வந்த நிம்மதியால் எல்லோரும் மெள்ள மெள்ள சமாதானமாகிக்கொண்டு வந்தார்கள்.

அதைவிட ஒரு பெரிய சம்பத்தாக நரசிம்மனின் மிலிடரி சேவைக்கு அரசாங்கம் அளித்த சலுகைகள் அவன் குடும்பத்தையே வறுமையிலிருந்து மீட்டு உயர்த்திவைத்ததுஅவன் தம்பி தங்கை அத்தனை பேருக்கும் இலவசப் படிப்பு குறைந்த வாடகையில் பெரிய க்வார்ட்டர்ஸ் வீடு... நரசிம்மனுக்கு ரயில் நிலைய பாதுகாப்பு உத்யோகம் இப்படி அவர்கள் வாழ்க்கைத் தரம் மற்ற குடும்பங்களை விட நன்றாகவே உயர்ந்து விட்டது.   

பெரியப்பா கடைசி வரை ஏமாந்து போனதுக்கு அவரே தான் காரணம் என்று எல்லோரும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்

***

.அம்ருதா ஏப்ரல் 2018


No comments:

Post a Comment