vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, April 20, 2018

மாயக் கிடங்கு - வைதீஸ்வரன்

மாயக் கிடங்கு
வைதீஸ்வரன் 

2002





















பிரும்மாண்டமான அரண்மனை போல் அந்தக் கட்டிடம்... அந்தக் கட்டிடத்தின் 
கூடத்தில் நின்று அண்ணார்ந்து பார்த்தேன்அதன் உயரம் எல்லையற்றதாக 
அநேகமாக  வானத்தைத் தொட்ட மாதிரி இருக்கிறது.

சுவர்களில் அகலமும் நீளமுமாகக் கண்ணாடிகள்.!ஆனாலும் கண்ணாடியின் 
முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டபோது அங்கே என் முகம் தெரிய
வில்லை! வேறு ஏதேதோ முகங்கள் தெரிகின்றனஎன் அப்பா  தாத்தா முப் பாட்டனார்கள் முகங்கள் அங்கே மாறி மாறி எனக்குப் பதிலாகத் தெரிந்து கொண்டிருக்கின்றன

எனக்கு பயமாக இருந்தாலும் பயம் என்று சொல்லத் தெரியவில்லைஎந்தக் 
கண்ணாடியில் என் முகம் தெரியும் என்பதும் எனக்குப் புலப்பாடாத ஆச்சரிய
மாகவே  இருந்தது.







கதவுகளே தெரியாத அந்தக் கூடத்தில் திடீரென்று காற்று புயல் போல் அடித்தது
என்னை நிலைகுலையச் செய்ததுசில கண்ணாடிகள்  இடம்பெயர்ந்து விழுந்தனகண்ணாடிகள் அற்றுப்போன அந்தக் கூடத்தில் திடீரென்று கதவு ஒன்று தெரிந்தது.
நான் தப்பித்துக்கொள்ளும் நோக்கத்துடன் கதவைத் தாண்டி வெளியே வந்தேன்தாண்டியவுடன் சுலபமாக நகர இடமில்லாதவாறு ஒரு குறுகிய பால்கனி 
சுற்றி  வளைந்து ஓடிக்கொண்டிருந்தது

கீழே பால்கனியை ஒட்டியவாறு நுரைக் கோடு போலக் கடல் அலையடித்துக்
கொண்டிருந்தன.

நான் அங்கே அத்தனை விசாலமான கடலை எதிர்பார்க்கவில்லைகடல் 
எப்படி அங்கே விரிந்தது என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட அந்த 
இடத்தை விட்டுத்  தப்பித்துக்கொள்ளும் அவசரம் என்னை விரட்டிக்கொண்டி
ருந்ததுபால்கனியைச் சுற்றி கம்பிகளைப் பிடித்தவாறு நடந்துபார்த்த போது கடல் அலைகள் எம்பி எம்பி  என் கால்களை அடித்து  இழுக்க முயற்சித்
துக் கொண்டிருந்தன.

கடல் என்னையும் கட்டிடத்தையும் முழுங்கி விடுமோ என்ற பயம் வயிற்றில் 
சுருட்டி அடித்துக்கொண்டிருந்ததுஆனால் கடல் ஒவ்வொரு முறையும் என்னை 
பயமுறுத்தி விட்டுப் பின்வாங்கிவிடுகிறதுபயமுறுத்துவதை நிறுத்துவதில்லை.

ஒவ்வொரு கணமும் நான் சாவைத் தொட்டு வாழ்வுக்குள் தப்பித்துக்கொள்
கிறேன்..... .வலைக்கு மேல் எகிறிய மீன்களைப்போல.......!..

நான் மீண்டும் வந்த வழியே பின்வாங்கி கதவு வழியாக கட்டிடத்துக்குள் 
இறங்குகிறேன்.

ஆனால் சற்று முன் நான் கடந்து வந்த கட்டிடம் இப்போது எப்படியெல்லாமோ 
மாறி விட்டிருந்ததுதிசைகள் குழம்பிப் போயிருந்தனஏதோ மரத்தால் ஆன 
படிக்கட்டுக்கள் மேல் நோக்கிப் போய்க்கொண்டிருந்தன.

எனக்கு விதித்த ஒரே பாதை அந்தப் படிக்கட்டுக்கள்தான் என்று தோன்றி
விட்டது.  வெட்ட வெளியில் காட்சி முடிந்ததும் ஸர்க்கஸ் மிருகங்களின் நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரே திறப்புப் போல் நான் அந்த மரப்படிகளில் ஏறத் தொடங்கி
னேன்போகிற  இலக்கு தெரியாமல் போய்க்கொண்டிருப்பது விபரீதமாகவும் 
விசித்திரமாகவும்  தோன்றிக்கொண்டிருந்ததுஎங்கே எதற்காக என்கிற வழக்க
மான உள்ளக் கேள்விகள் மேலே எழும்பி எழும்பி விடையற்ற குழப்பத்தில் 
மனத்துக்குள் செத்துக் கொண்டேயிருந்தன.

.எதிர்பார்க்காத உயரத்தில் எனக்குத் தரை தெரிகிறதுமண்தரைஅங்கே 
எனக்குத் தெரிந்த என் இளவயது உறவினன் மிகுந்த வயோதிகனாகி நின்று
கொண்டிந்தான்.

அவன் இங்கே எப்படி வந்தான் என்கிற கேள்வி எனக்கு அவசியமில்லாமல் 
இருந்தது.

எனக்கு ஒரு துணை கிடைத்ததுமனிதத் துணைஎன் பயத்தையும் மருட்சி
யையும்  இறக்கி வைத்து இளைப்பாற ஒரு சுமைதாங்கி கிடைத்துவிட்டது. .

நான் அவன் தோளில் கை போட்டுக்கொண்டேன்.சாய்ந்துகொண்டேன்அவன் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகத் தரையில் நகர்ந்தேன்சில தப்படிகள் தான் 
நடந்திருப்போம்அங்கே மண்தரை முடிவடைந்து சில மரப்படிகள் கீழ் நோக்கிப் 
போய்க் கொண்டிருந்தன.

மேலும் நாங்கள் கட்டாயமாக முன்னோக்கி நடப்பதே அபாயமற்றதென்று 
மனம்  சொல்லியது.

கடந்துவந்தவைகள் எல்லாமே நிலைகுலைந்து அடையாளமற்றுப் போயிருக்கும் என்ற ஊகம் மனதில் பதிந்துவிட்டதுகடந்தவைகள் காணாமல் போவதுதான் 
இயல்பான நடப்புகள் என்பது தெளிவான போது உள்ளே பயம் குறைந்து போய்
விட்டது..















 நாங்கள் நிதானம் தவறாமல் மரப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்தோம்.

“ இங்கே என்ன நடக்கிறது!.... நான் இழந்துவிட்ட அந்தப் பழைய கூடம் மீண்டும் 
என் முன்னே விரிந்து கிடக்கிறதுஎன்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. கடந்துபோனது மீண்டும் திரும்பித் தோற்றம் கொள்ளாதென்று என்னை நம்ப வைத்து இந்த சம்பவங்கள் மீண்டும் தைப் பொய்யாக்கி என்னை அசடாக்கியதுஎதையும் முடிந்து போனதாக எண்ணுவது நம்மை 
ஏமாற்றக் கூடுமோ?

கூடத்தின் ஒரு மூலையில் ஒரு கதவு ஒன்று தன்னை திறக்கச் சொல்லுவது போல் ஓயாமல் அடித்து சப்தித்துக்கொண்டே இருந்தது.

ஆவலால் அந்தக் கதவருகில் சென்று தாழ்ப்பாளை நீக்கப்போனேன்கதவு 
திறக்கப்பட்டவுடன் மீண்டும் அந்த பால்கனியும் கடலும் இருக்கவேண்டு
மென்று என் ஞாபகம் எனக்கு சொல்ல முயற்சி செய்ததுஇப்போது எதையும் 
நம்பி  முட்டாளாவதைத் தவிர்க்க நினைத்தேன்.

கதவு திறந்து கொண்டதுநான் இரண்டொரு தப்படிகள் வைத்து விட்டு 
பின்தொடரும் என் உறவினனைப் பார்த்தேன்அவன் இல்லைஎங்கே 
எப்போது  என்னை விட்டுப் போனான் என்று அனுமானிக்க முடியவில்லை.

எனக்கு முன்னே பாவாடைகளும் ஜாக்கட்டுகளும் புடவைகளும் வண்டி 
வண்டியாக மரச்சட்டத்தில் தொங்கவிடப்பட்டிருந்தனஅந்தப் புது நெசவு 
மணமும் சாயக்கஞ்சிகளின் வாசனையும் காற்றை மூச்சடைக்கச் செய்து
கொண்டிருந்தன!!

நான் ஏதோ பெரிய ஜவுளிக் கடையின் பின்கிடங்கில் இருப்பதாக ஓரளவு 
ஊகிக்க முடிந்ததுகடையின் முகப்புப் பக்கத்திலிருந்து வந்த ஜனங்களின் 
பேச்சும் பேரங்களும் வாதங்களும் அபிப்ராயங்களும் என்னை சகஜமான 
யதார்த்த உலகச் சூழலுக்கு கொண்டுவந்துகொண்டிருந்தன.

இப்போது எல்லாமே நிதானிக்கக்கூடிய விஷயமாக ஆகிவிட்டிருந்தது.

உயரே மாயப்பருந்தின் கால்பிடியிலிருந்து நழுவி பாழைக் கடந்து கீழே 
உயிரோடு  விழுந்தது போல் உடல் வியர்த்துப் படபடத்துக்கொண்டிருந்தது.

என்னங்க!...என்னங்க!....” என்று கூப்பிட்டவாறு என்னை நெருங்கிக்கொண்
டிருந்தது என் மனைவியின் குரல் தான்நான் இங்கே எப்போது வந்தேன்!

இங்கே என்ன புடவை பாக்கறீங்க?..எனக்கு இங்கே ஒரு டிசைனும் 
பிடிக்கலே!... வாங்க நாளைக்கு வேறே கடைக்குப் போகலாம்!..” என்றாள்.

“ நாம்ப இந்தப் புடவைக் கடைக்கு என்னிக்கு வந்தோம்?”...என்று 
கேட்டேன்....”எப்போ வந்தோம்?..” என்று கேட்பதான நினைப்பில்..

நாங்க புடவை எடுக்க வந்தா...உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்தான்!”   என்று ஒரு இடிஇடித்தாள்நான் வானத்தைப் பார்த்தேன்.


                                *நவீன விருட்சம் ஜனவரி 2002


No comments:

Post a Comment