ஒரு கவிதையால் வந்த நினைப்பு
வைதீஸ்வரன்
வைதீஸ்வரன்
** நேற்று தூக்கமில்லை
என்றான்.
இல்லாத நேரத்தில்
அது எங்கே இருக்கிறது?
என்று கேட்டேன்.
" இப்போது வருகிறது""
என்கிறான்..
எங்கிருந்து? என்று கேட்பதற்குள்
அவன் தூங்கி விட்டான்.
****** [கால் மனிதன் தொகுப்பு]
தூக்கம் எப்படி வருகிறது? ஏன் வருகிறது?
முக்கியமாக எங்கிருந்து
வருகிறது ? என்று யோசித்துப்
பார்ப்பது ஸ்வாரஸ்யமான விஷயம்...இது பற்றி நான்
அடிக்கடி யோசிப்பது உண்டு நள்ளிரவில் தூங்காமல்
உட்கார்ந்து கொண்டு.
அழகிய சிங்கர் ஒரு கூட்டத்தில் தூங்கியதை படம்
பிடித்து அனுப்பிய போது. .''நான் இப்படியா தூங்கினேன் ?
என்று ஆஆச்சரியப்பட்டுக் கொண்டார்..
இலக்கியக் கூட்டங்களில் தூங்குவது தான் வசதி..
"ஸார் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்.."என்று பிறர்
தவறாக நினைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு
அதனால் பெருமையும் கிடைக்க வாய்ப்பு உண்டு..
பார்லிமெண்டில் தேவ கௌடா தூங்கியதை யாரும் தவறாக
எடுத்துக் கொள்ளவில்லை.. அந்த மெய்மறந்த நிலையில்
அவருடைய பங்களிப்பு விழிப்பு நிலையை விட உபயோக
மானதாக இருந்ததாக பலர் கருதினார்கள்...!!
தூங்குவது போலும் சாக்காடு என்று வேதாந்திகள் சாவைப்
பற்றி ஒரே வாக்கியத்தில் முடிவு கட்டி விட்டார்கள்.. தினம்
தினம் நாம் தூங்குவதும் சாவின் துளித் துளி அம்சம் தான்
என்கிறார்கள். ஆனால் இந்த சாவில் அகத்துக்கும் புறத்துக்
கும் உள்ள ஒரு சலனப்பகுதி விழித்துக் கொண்டு உயிருடன்
விளையாடிக் கொண்டிருக்கிறது.
இந்த சின்னத் தூக்கத்தில் தான் வேண்டாத கனவுகள்
எல்லாம் வந்து தொலைகின்றன.. அதிலும்
விருப்பமில்லாத தொழில் நிர்ப்பந்தத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு
அடிக்கடி மேலதிகாரியின் அசிங்கமான மாற்றல் மிரட்டல்களும்
லெட்ஜர்களுக்கு நடுவில் சொருகிவைத்து தொலைந்து போன
கவிதைகளின் ஞாபகங்களும் விடாமல் கனவில் வந்து தூக்கத்தின்
நிம்மதியைக் கெடுக்கலாம். ...
தூக்கம் ஒரு வரப் பிரஸாதம்..அதன் அருமை தூங்க முடியாத
வர்களைக் கேட்டால் தெரியும்.. சமூகத்திலும் கலைத் துறையிலும்
மிகவும் பிரபலமானவர்களைக் கேட்டால் தெரியும்.. அவர்களால்
தூங்கவே முடியாது.. எப்போதும் உலகத்தில் தங்கள் பிம்பத்தை
தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற தீராத கவலையும் பயமும்
அவர்களை தூங்கவே விடாது..!!!.
சிலருக்கு அது வியாதியாகவும் நேர்ந்து விடுகிறது..
எனக்குத் தெரிந்து ஒருவர் 10 வருஷமாக தூங்கியதில்லை..அதற்கு
வைத்தியமும் இல்லையாம்...
அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு ராத்திரியிலும் தங்கள் வீடுகளில்
ஆனந்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களைப் பார்த்து குமுறிக்
கொண்டே அலைவார்கள் என்று என்று நினைக்கிறேன்...
பாவம்!!......... இடம் பொருள் ஏவல் பாராமல் தூங்குபவர்கள் தான்
கொடுத்து வைத்தவர்கள்!

0
தூக்கம் ஒரு வரப்ரசாதம்தான்.
ReplyDeleteஇரண்டு விஷயங்களை இது நினைவு படுத்துகிறது.
முரகாமி தூக்கம் போன ஒரு பெண்ணைப் பற்றிய சிறுகதை ஒன்றை எழுதி இருக்கிறார்.
எங்கிருந்து வந்தது இந்த நிழல் எனும் சு.ரா வின் கவிதை