> பிடித்தவற்றுள் மேலும் சில கவிதைகள்
வைதீஸ்வரன்
> சொல்லக் கேட்டு
> சொல்லச் சொல்லி
> பிறந்த்து ஒருசொல்
> சொல்லச் சொல்ல
> சொல் பெருகியது.
> பின்னிப் பின்னி
> உருவானது
> ஒரு சொல்வலை.
> சொல் தன்னைத் தனே
> சொல்லத் துலங்கியது.
> தான் வரித்த வலைக்குள்
> தானே சிக்கியது சொல்
> மலரென்ற ஒருசொல்
> கிளையென்ற
> ஒருசொல்லிலிருந்து
> காற்றென்ற சொல்லைத்
> தழுவி
> மண்ணென்ற ஒரு
> சொல்மீது
> உதிர்கின்றது
> மண்ணில்புதைந்த
> விதையென்ற ஒரு
> சொல்
> மண்ணைக் கீறி
> மரமென்ற ஒரு சொல்லாக
> முளைத்து
> வான் என்ற
> சொல்லைத்
> தீண்டி நிற்கிறது
ரா..ஸ்ரீனிவாசன்
>
மொண்ணை மனசு
> முற்றத்தில்
> மழை நீர் கொஞ்சம்
> மிச்சமிருந்தது.
>
> கத்திக் கப்பல்
> செய்து தா வென்றது
> குழந்தை
> கத்தி எதற்கு
> என்றேன்
> முட்டும் மீனை
> வெட்டுவதற்கு என்றது
> விழிகள் விரிய
> முனை கொஞ்சம்
> மழுங்கலாக செய்து
> கொடுத்தேன்.
இறகின் பிறகும்
> ----------------------------------
> பாலொத்தவெள்ளையும்
> பரிச்சயமானதொரு
> மென்மையும்
> அந்த இறகிலிருந்தது.
> இறந்திருக்க
> முடியாதென்ற
> பெரு நம்பிக்கையுடன்
> தேடியலைந்தேன்
> அப்பறவையை..
> எதிர்ப்பட்ட
> மின்கம்பங்களில்
> எருமையின்முதுகில்
> என
> எங்கேயும் இல்லை.
> அம்மாதிரியொரு
> பறவையால்
> கவலை பெருக்கியும்
> கையிலிருந்த இறகு
> கருக்கியும்
> கவிழ்ந்து
> கொண்டிருந்த
> இரவில்
> வெண்பறவை தென்படா
> வானம்வழி
> பறந்து மறைந்த
> கருங்காக்கை
> எஞ்சியிருந்த
> அவ்விறகில்
> எச்சம் இட்டது
>
> ----------------------------------
> பாலொத்தவெள்ளையும்
> பரிச்சயமானதொரு
> மென்மையும்
> அந்த இறகிலிருந்தது.
> இறந்திருக்க
> முடியாதென்ற
> பெரு நம்பிக்கையுடன்
> தேடியலைந்தேன்
> அப்பறவையை..
> எதிர்ப்பட்ட
> மின்கம்பங்களில்
> எருமையின்முதுகில்
> என
> எங்கேயும் இல்லை.
> அம்மாதிரியொரு
> பறவையால்
> கவலை பெருக்கியும்
> கையிலிருந்த இறகு
> கருக்கியும்
> கவிழ்ந்து
> கொண்டிருந்த
> இரவில்
> வெண்பறவை தென்படா
> வானம்வழி
> பறந்து மறைந்த
> கருங்காக்கை
> எஞ்சியிருந்த
> அவ்விறகில்
> எச்சம் இட்டது
>
> கார்த்தி-
No comments:
Post a Comment