vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, February 4, 2015

ஆபத்சகாயம்

ஆபத்சகாயம்
வைதீஸ்வரன்



  நாங்கள்  புதிதாக  அந்த வீட்டிற்குக்  குடிபோன  போது  எனக்கு  எட்டு வயது   இருக்கும்முதலில் இருந்த தெருவைவிட இது இன்னும் சற்று  அகலமாக இருந்ததுகொஞ்சம்  வசதியுள்ளவர்கள் வாழும்  இடமாக இருக்கும்.எங்களுக்கு அப்படி வசதி வந்ததா தெரியவில்லை. ஆனால்  எனக்குரொம்ப சந்தோஷமாகஇருந்தது.வீடும்தெருவும் விஸ்தாரமாக  இருந்ததால்எப்போதும் குட்டிக்குதிரை மாதிரி ஓடிக்கொண்டேஇருக்க  முடியும். 

அதைவிட என்னை மிகவும் குஷிப்படுத்திய விஷயம் அந்தத்தெருவில் அடிக்கடி “புடுபுடு சைக்கிளும்“[மோட்டார்  சைக்கிளை அந்தக்  காலத் தில்அப்படித் தான் அழைப்போம்மோட்டார்வாகனங்களும் போய்க் கொண்டே  இருக்கும்  நாற்பதுகளில்  மூன்று  வாகனங்கள்  தெருக்க
ளில் சேர்ந்து போனாலே அது  சிறுவர்களுக்கெல்லாம் மனசுக்குள் மிகுந்த கொண்டாட்டமாக  இருக்கும்..


மோட்டார் காரில் அதுவரை  நான் சவாரி போனதில்லைஅது ஏதோ  நமக்குக்  கிட்டாத  வாகனமாக  எட்ட  இருந்து  வேடிக்கை  பார்க்கும்  
காட்சிப்பொருளாகத்தான் எனக்குள் ஒரு சமாதானம் என்னையறியா
மலேயே  உள்ளோடி விட்டது.

அப்போதுதான் என் அடுத்தவீட்டுக்கு அந்த மாமா  குடிவந்தார்சற்று கருப்பாகஆனால் வெள்ளைக்காரன் போல் கால்சட்டை  கருப்புக்  
கோட்டு டை எல்லாம் போட்டுக்கொண்டு  வாயில் சுருட்டுப் புகை  நெளிய பேசிக்கொண்டே இருப்பார்அவர் மனைவி சற்று பழுப்புநிற மானவராக  கவுன் போட்டுக்  கொண்டிருப்பார். அவருக்கு  என்  வய
தில் ஒரு பிள்ளை  இருப்பான். பூனைக்  கண்ணும்  பழுப்பும்கருப்பும்  கலந்த தலைமயிருடன்  இருப்பான். சிரிக்கும்போது  முன் பல்  விழு
ந்த  ஓட்டையைப்  பார்க்கும்போது எங்களுக்கு மேலும்  சிரிப்பு வரும். அவன்  பெயர்  மரியதாஸ். தாஸ்  என்று  கூப்பிடுவார்கள்.


அந்த  மாமா என்னைக் கண்டால்  எப்போதாவது  கையாட்டி  சிரிப்பார். அவர்  வீட்டுக்கு முன்னால்  வாரத்துக்கு  ஒரு  முறை ஏதாவது  மோட்
டார் வாகனம்  வந்து  நிற்கும். வாகனம்  நின்றவுடன்  அதற்குள்ளிருந்து  அதன் டிரைவரும் இன்னொரு  ஊழியனும் இறங்கி வீட்டு வாசலில்  கை கட்டிக் கொண்டுவந்து  நிற்பார்கள்ஏன் என்று எனக்கு  முதலில்  புரிய வில்லை.


அந்த மாமா பெயர் என்னவென்று முதலில்எனக்குத்  தெரியவில்லைஎன் அப்பாவைக் கேட்டேன்.  “ஆபத்சகாயம் “  என்றார்.

என்னப்பா....இந்தப் பெயர்  வழக்கமாக  இல்லாமல்  ஒருமாதிரி இருக்
கிறதே!ஆபத்சகாயம்னா  என்னா? “  என்று கேட்டேன்.


 “ஆபத்தில்  உள்ளவர்களுக்கு  உதவி செய்பவர்”  என்றார் அப்பா.

எனக்கு  இன்னும்  அது  புதிராகத்  தான்  இருந்ததுஇருந்தாலும் அந்த  வாகனங்கள்  அடிக்கடி  அவர்  வீட்டுவாசலில்  வந்து  நிற்பதும் அந்த  வாகன  ஓட்டிகள்  மிகவும்  மரியாதையாக  அவர்  வாசலில்  கைகட்டி 
நிற்பதும்  எனக்கு சமீப  காலம்வரை  புரியாமல் தான்  இருந்தது.

ஒரு  நாள்  மதியம்  நானும்  மற்ற தெருப்பையன்களும் வெளியில்  
கோலி ஆடிக் கொண்டிருந்தோம்.


அப்போதும்  வழக்கம் போல் ஒரு  பெரிய  வாகனம்  ஆபத்சகாயம் 
வீட்டு வாசலில்  வந்து  நின்றது.

அந்த  வாகன  ஓட்டியும் சிப்பந்தியும் கையில் ஒரு  காகிதத்தை வைத்
துக்கொண்டுஅவர் வீட்டு வாசலில் மரியாதையுடன் காத்துக்கொண்டு நின்றார்கள்  ஆபத்சகாயம்  வெளியே  வந்தார்ஏதோ  அவர்களிடம் சொன்னார்

அவர்கள்  “ இல்லை அய்யா....வண்டியில்  எல்லாம்  சரியாக  இருக்கி
றது. பட்டறைக்குப்போய் பழுது பார்த்து சரிசெய்துவிட்டோம்இப்போது ப்ரேக் நன்றாக செயல்படுகிறதுநீங்கள்சோதனை  செய்யலாம்“ என் றார்கள்.

அவர்  அவன்  வார்த்தைகளை  முழுதாக  நம்பாதது போல்  தலையா
ட்டி விட்டு சுருட்டை வாயிலிருந்து  எடுத்துவிட்டு  எங்கள்  பக்கம் பார்த்து ஏதோ நினைத்துக்கொண்டவர் போலவிளையாடிக்  கொண் டிருந்த  எங்களைப்  பார்த்து, “டேய்  பசங்களா....எல்லாரும்  வந்து வண்டியிலே  ஏறிக்கோங்கடா!....”.என்றார்.

எங்களுக்கு  முதலில்  புரியவில்லைநம்பவும் முடியவில்லை.

“”ஜாலியா  போய்ட்டு வாங்கடா.. டேய், சீக்கிரம்  ஏறுங்கடா.....
என்று  சொல்லிவிட்டு  டிரைவருடன்  வந்த அந்த ஊழியனைப்  
பார்த்து ஏதோ  உத்தரவிட்டு விட்டு  உள்ளே  போய்  விட்டார் 

நாங்கள்  வண்டிக்குள்  ஏறிக்கொண்டு  சந்தோஷத்தில்  ஸீட்டுக்கு  
ஸீட்டாகத்  தாவிக் கொண்டிருந்தோம் இப்படி  ஒரு  சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை.  ஓவென்று  கும்மாளமிட்டுக்  கத்தினோம்  எங்களுக்கு  நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு  அனுபவம்ஒரே  சிலிர்ப்புவண்டி நகர்ந்து  தரையில் ஓடும்போது  ஆகாசத்தில்  
பறப்பது  போல்  ஒரு  பிரமை.


எனக்கு  தாங்கமுடியாத ஆச்சரியம்!  டிரைவரிடம் “  அண்ணா.. 
அண்ணா...நாம் இப்போ எங்கெ போறோம் அண்ணா?...”என்றேன். 

எங்கெயும் போகலே சும்மா ஒரு ரௌண்டு...பசங்களா....எல்லாம்  
ஸீட்டுலே கம்முனு ஒக்காந்து கம்பியைப்  புடிச்சுங்குங்கோ....அடிக்
கடி  ”ப்ரேக்  போடுவேன்ஜாக்கிரதை...” 

எங்களுக்கு  அவன்  சொன்னது  அதிகமாகப்  புரியவில்லைதெருச் 
சவாரியில் தான்  எங்கள்  ஸ்வாரஸ்யம்..


 “அதோ  பார்ரா....நம்ம  ஸ்கூலு..........” என்றான்  கிட்டு

இங்கே  பார்ரா....ஒத்தப் பாலத்துலெ  வண்டி  போறதை..”  என்றான்  
ராசு.

குதிரை  வண்டியெல்லாம்...சோடை...நம்ம  வண்டியோட  ரேஸுக்கு 
வர முடியுமா?“ என்று வெளியே கை  நீட்டி கடந்து வந்த குதிரையை வண்டிகளைப்  பார்த்து  கட்டை  விரல்  ஆட்டினான்  கோபாலு.

 “அதோ பார்ரா...நம்ம  பொடிமட்டை  வாத்தியார்..  சைக்கிள்ளே  வர்
ராருஹூய்..”கத்தினான்  என்றான்  வரதன்.

எல்லோரும் பலமாக அவரைப்  பார்த்து......ஸார் “ என்று  கையாட்டி னோம்.


அவர்  தோளில்  பறந்த  துண்டைப் பிடித்துக்கொண்டு  எங்களை  
முறைத்துப்  பார்த்தார்.

வாகனம் பெரிய தெருவைத் தாண்டி ஆற்றுப் பாலத்தில்  இறங்கி 
ஏறி செவ்வாய்ப்பேட்டையை சுற்றி வந்து  ஜங்ஷன் வழியாக திரும்பி  மறுபடியும்  ஒத்தைப்பாலம்வழியாக  வந்த வழியில்  திரும்பி  வீடு  நோக்கி  வந்துபோகும் வழியில் இரண்டு மூன்று முறை  டிரைவர் பிரேக்கை அழுத்திப் பிடித்து  நிறுத்திவிட்டு வண்டியை வேகப்படுத் தினான்.

கம்பியை  சரியாகப்  பிடித்துக்  கொள்ளாததால்  ரங்குவுக்கும்  ராமு
வுக்கும் இரண்டுமுறை தலை கம்பியில் முட்டி முழைத்துக்கொண்டு விட்டது. ஆனால்  யாரும் வாயைத்  திறக்கவில்லை.

வீட்டு முன் வண்டி நின்றவுடன் நாங்கள் மழை விட்ட ஈசல் கூட்டம் 

போல் வெளியே  குதித்து  ஓடினோம்.

ஆபத்சகாயம்  மாமா  வெளியே  நின்றுகொண்டிருந்தார்எங்களைப்  
பார்த்து  “என்னாடா...நல்லா  இருந்ததா?.. என்று சிரித்தார்


வாகன ஓட்டி அவரிடம் பழுப்புக்  காகிதம்  ஒன்றைக்கொடுத்தான். 
அவர் மூக்குக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு அதில் கையெழுத்
துப்  போட்டுக்  கொடுத்தார் 

எதிர்பார்க்காமல்  கிடைத்த  இந்த  மோட்டார்  சவாரியைப் பற்றி  
நான் வீட்டில்அம்மா பாட்டியிடம்  அட்டகாசமாக  சொல்லிக்கொண்
டிருந்தேன்.


அப்பா தான்  அதை  ரஸிக்கவில்லை.ஏண்டா...வண்டியில ப்ரேக் 
சரியா பிடிக்கிறதாஇல்லையான்னு பாக்க ஒங்களை ஏத்திகிட்டுப்  போகச் சொல்றானா...அந்த ஆபத்சகாயம்.....இந்த ப்ரேக்  இன்ஸ்பெக்
டர்.. நல்ல  ஆளு தான்..” என்று  தனக்குள்  கோபித்துக்கொண்டார்.

இருந்தாலும்  அந்த  மாதிரி  மீண்டும் இரண்டு  மூன்று  தடவை  எங்
களுக்கு ஓஸி  சவாரி  கிடைத்ததுநாங்கள்  வீட்டுக்கு  தெரியாமல் வாசலில் வாகனம் வந்து  நின்றவுடன்  ஏறிக்கொண்டு விடுவோம்  ஆபத்சகாயம்  எங்கள்   சந்தோஷத்தைக் கண்டு ஊக்கப்படுத்தி மகிழ் ச்சியடைந்ததாகத் தோன்றியது. அவர்  நல்ல  மாமா  என்று  நினைத் துக் கொண்டேன். 

ஆனால்  ஏனோ    நாங்கள்  வாகனத்தில்  சவாரிக்கு  சென்றபோது  
ஒரு  முறை கூட அவருடைய  பிள்ளை  தாஸை எங்களுடன்  அனுப்ப வில்லை. அந்தப் பையன் ஒவ்வொருமுறையும் வாசலுக்கு வந்து எங்களுடன்  வண்டியில் ஏறிக்  கொள்ள  வேண்டுமென்று  அழுவான்  அடம்பிடிப்பான்.  

அவன் அழுகையைக் கண்ட மறு நிமிஷமே அவன் அம்மா  வெளியே வந்து தரதரவென்று அவனைக் கிள்ளி  உள்ளே அழைத்துக்கொண்டு  போய்விடுவார். 

எனக்கு  அவனை  நினைக்கும்போது  பாவமாக  இருக்கும்  எங்களு
க்கு  கிடைக்கும்  சந்தோஷ சவாரியை  அனுபவிக்க விடாமல்  ஏன் 
தன்  சொந் ப் பிள்ளையைத்  தடுக்கிறார்!?

 ஆனாலும்  ஒரு  நாள்  அப்படி  அவரால் தடுக்க  முடியவில்லை.

அவன் அப்பாவிடம் கெஞ்சிக் கேவினான். “அப்பா  ஒரே  ஒரு தடவை 
மட்டும் எனக்கு அனுமதி கொடுங்கள்...இந்த ஒரு  தடவைக்குப்  பின்  இப்படி சோதனைஓட்டக் காரில் நான் போகவே மாட்டேன்......ஒரே  
ஒரு  தடவை...”  அவன்  குதித்துக்  கூச்சல்  போட்டான்.


பார்த்து  அவர்  மனம்  இளகிப்  போயிருக்க  வேண்டும் …“டேய்  
ஜாக்கிரதை.....” என்று  சொல்லி அனுப்பினார்.

ஆனால் எங்களுக்கு  இந்த  வண்டியின் சோதனை சவாரி  பழகிப்  
போய்விட்டதுஅந்தப் பையனுக்கு எல்லாமே  புதுசுமுதல்தடவை  நாங்கள் உணர்ந்த அந்த மகிழ்ச்சியும் துள்ளலும்குதிப்பும் அவனை  உற்சாகப்படுத்திக் குலுக்கிக்கொண்டே  இருந்தது


ஆரவாரமாக  கைகொட்டி  ரஸித்துக்கொண்டே  இருந்தான்.  கும்மா
ளமிட்டுக்கொண்டே இருந்தான்

வண்டி ஆற்றுப்பாலத்தில் இறங்கி ஏறும்போது டிரைவர்  ப்ரேக்கை 
சடாரென்று அழுத்தினான். இதை எதிர்பார்க்காத அந்தப் பையன்  தடாலென்று கீழே  ஸீட்டுக்கிடையில் குப்புற  விழுந்துவிட்டான். 

நாங்கள் பதற்றமுடன்  தூக்கிவிட்டோம்தாஸுக்கு  இன்னொரு  
முன் பல்லும் உடைந்து  முகமெல்லாம்  வாயெல்லாம்  ரத்தமாக  இருந்ததுஇடது முழங்கையில்  வீக்கம்  பெரிதாகிக்கொண்டே  இருந்தது  அவன்  வலி  வலி  என்று  கத்திக் கொண்டிருந்தான்.

டிரைவரும் உடன்வந்த  சிப்பந்தியும் பயந்துபோய் பையனை அமை
திப்படுத்தி வாயைத் துடைத்துவிட்டு ஸீட்டில் உட்காரவைத்து 
பயந்துகொண்டே வண்டியை ஓட்டி  வந்தார்கள். 

வீடு  வந்து  வண்டி  நின்றதும் அந்தப்  பையன்  ஓவென்று  அழுது 
கொண்டே  இறங்கி  ஓடினான்.  


ஆபத்சகாயம் வழக்கம்  போல் வாசலில்  நின்று கொண்டிருந்தார்.

ரத்தம் ஒழுக காயத்துடன் வந்த பையனைப் பார்த்தவுடன்  பதறிப் 
போய் விட்டார்.

ஏய்..... என்னடா....ஆச்சு?“ வாகனக்காரர்களைப்  பார்த்துக்  கத்தி
னார்: 


”எப்படீடா..ஆச்சுஆக்ஸிடெண்டா? ப்ரேக்  புடிக்கலியா?  “

“...............................................”


என்னடா  ஆச்சுஇடியட்ஸ்...சொல்லுங்கடா?....”

ப்ரேக்  நல்லாத்  தான்  ஸார்  புடிச்சிது  அதனால  தான் இப்படி!  
பையன் கம்பியைப்  புடிச்சிக்கலே!.......  வேணும்னா  எல்லா பசங்களையும்  கேட்டுப் பாருங்க ஸார்.”    என்றான்  டிரைவர்.

ஆபத்சகாயத்தின்  உதடுகள்  துடித்து  முகம் கோபமாக வீங்கியது.
அவர்  அந்த வாகனஓட்டியின் கையில் இருந்த  பழுப்புக் காகிதத் தைப்  பிடுங்கிககிழித்து காற்றில்  எறிந்துவிட்டு“ கெட்  அவுட்.. 
கெட்.. அவுட்..  யு...fools”என்று கத்திவிட்டு உள்ளே போய்விட்டார்.

அந்த  சிப்பந்திகள்  நின்றுகொண்டே  இருந்தார்கள்.

வழக்கம் போல்  ப்ரேக்  சரியாகத்  தானே பிடித்தது! . ஆபத்சகாயத்
துக்குஏன் இப்போது மட்டும் ஆத்திரம் வருகிறது? ’என்று எங்களுக்கு    புரியாமலிருந்தது.

உள்ளே  தாஸ்  பலமாக  அழுது கொண்டிருந்தான்.



(அம்ருதா, பிப்ரவரி 2015)

No comments:

Post a Comment