சித்திரப் பூ மலர்ச்சி.
வைதீஸ்வரன்
கலையும் உறக்கமும் எங்கிருந்து
வருகின்றது?.. எப்போது ஏன் வருகின்றது?
இது என்னை வியப்பிலாழ்த்தும் புதிர்கள்.
இந்த ஓவியத்தை இப்போது வரைந்த போது
நான் ஓவியங்கள் வரையாமல் இருந்த வருடங்கள் ஏழெட்டு
இருக்கலாம். எனக்கு மறந்துபோய்விட்டது. ஒரு சூழ்நிலை விபத்தால் இந்த படத்தை
வரைந்தேன். நண்பர்கள் இதைப் பாராட்டியபோது
இது எனக்கு சேர்ந்ததா....அல்லது எனக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் இன்னொ ருவனுக்கு சேர்ந்ததா..
என்று சற்று தடுமாற்றம் நேர்கிறது.
முதலில் என் பேத்திக்கு நன்றி சொல்ல
வேண்டும். அவள் வரைய வேண்டும் என்று
பிடிவாதம் பிடித்து அவளுக்கு வண்ணப் பெட்டி யும்
தூரிகையும் வாங்கிக்கொடுத்தார்கள் அவள் ஆசையுடன்
அதை வைத்துக் கிறுக்கிக்கொண்டிருந்தாள். அவள் கிறுக்கி அலுத்துப்போய் தூங்கப்போன வேளைகளில் நானும் ஏதாவது வரையலாமே என்று தோன்றியது..
வரைய வரைய அந்த அனுபவம் ஒரு சிலிர்ப்பாகி மூடி வைத்த ஜன்ன லைப் பிளந்துகொண்டு காற்றுப் பாய்ந்த மாதிரி ஒரு தொலைந்து போன நதியை மீண்டும் கண்டறிந்துகொண்ட மாதிரி ஒரு மகிழ் ச்சி.....ஒரு மீட்சி...
நம்மைத் தானாகத் தேடி வந்து நம் மூலமாக
வெளிப்படும் கலை அனுபவத்தின் தருணங்கள் ஒரு கொடை.
இது ஒவ்வொரு கலைஞ னுக்கும் நேருகின்ற ஆழ் மன
மலர்ச்சிதான்..
இது தான் நமக்கு ஒப்புயர்வற்ற
பரிசு.
Ø
No comments:
Post a Comment