vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, August 9, 2015

உத்தரவாதம்
                                                                           வைதீஸ்வரன்










அப்பாவின்  அந்திமக் கிரியைகளை   முடித்துவிட்டு  வீடு திரும்பிஆயாசமாக  கூடத்தில்  உட்கார்ந்துகொண்டிருந்
தான் சங்கரன்.

அப்பாவின் நீண்டகால ராணுவ சேவை...பிறகு ஓய்வு, தள்ளாமை நோய்.... மரணம்...ஒவ்வொன்றாக அவன் நினை
வில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.

அண்ணாந்துபார்த்தான் மேலே பரணில் அப்பாவின் பழைய 
பெட்டிஒன்று கண்ணுக்குப் பட்டது. அதை அவன்  இத்தனை 
வருஷங்களாகத்திறந்து பார்த்ததே  இல்லை. அப்பா வும் ஓய்வு
க்குப் பிறகு அந்தப்பெட்டியைப் பற்றி அக்கறை காட்டவே 
இல்லை.

ஏணிவைத்து ஏறிபெட்டியைக் கீழே இறக்கித் திறந்து பார்த்
தான். ஏற்கனவே  அதன் பழைய பூட்டுஉடைந்துதான் இருந்
தான்.

உள்ளே அப்பா கடைசியாஅணிந்துகொண்டுபோன ராணுவ
உடைஒன்று   பூச்சிமணத்தோடு கசங்கிப்போய் நவுப்பாக மடி
ந்துகிடந்தது. 

அப்பாவை ஒரு  காலத்தில் அந்த உடையில் கம்பீரமாக பார்த்த 
ஞாபகம் சங்க ரனை  சற்று நெகிழச்செய்தது.

உடையை நன்றாகவெயிலில் உலர்த்தி உதறி  புழுதிகளை நீக்கி  
சீராக்கினான். அதைப் பார்க்கும்போது அப்பாவின்  கடந்த கால 
ஸ்பரிஸமும் வாசனையும்  நினைவில் சுழன்று  மனதை ஈரப்படு
த்தியது. அப்பாவின் ராணுவஉடையைத் தானும் அணிந்து
கொண்டு பார்க்க வேண்டுமென்று அவனுக்கு ஒருஆவல்.

அவர் இவனைவிட பருமனாக இருப்பார். போட்டுக்கொண்ட
போதுஉடை  பெரியதாக தொளதொளவென்று இருந்தது.
கண்ணாடியில்  பார்த்துக்கொண்டு சற்று நேரம் நின்றான்.  
சிரிப்பு வந்தது.இரண்டுபக்கமும் நீண்ட  ஆழமான பாக்கெட்
டுகள்இருந்தன.... கையை  விட்டுப் பார்த்தான்.

இதென்ன?"வலது பாக்கெட்டில் ஏதோ ஒரு காகிதம் 
தட்டுப்பட்டது. பிரித்துப் பார்த்தான்.

ரங்கராஜூ  ஷூ கடை
ரிப்பேருக்கு  ஒரு  ஜதை  ஷோ
மிலிட்டரி கோபால்
தேதி  8-9- 90”  கூலி  ரூ25/

இதென்னஅப்பா இருபத்திஐந்து வருஷங்களுக்கு முன் ரிப்
பேருக்காக இந்தக்கடையில் கொடுத்தகாலணியை வாங்கவே       மறந்துபோயிருக்கிறார். கடைசியாக   சில வருஷங்களில் 
அவருக்குமெள்ள மெள்ள ஞாபக மறதி அதிகமாகிக்கொண்
டிருந்தது.

ஓய்வுக்குப்பின் உபயோகமற்றுப்போன காலணியைப் பற்றி  
நினைக்கவேஅவருக்கு விருப்பமில்லாமல் போய்விட்டதோ!!

25  வருஷங்கள்....இப்போது அந்தக் கடை இருக்கிறதாஅந்த 
சொந்தக்காரன்   இன்னும் இருப்பானா?அவனுக்கு ஞாபகமி
ருக்குமாஅந்தத்தெருவே இப்போது அதே மாதிரி இருக்குமா?

விலாஸத்தைப் பார்த்தான் :

ரங்கராஜூ  ஷூ  கடை
நம்பர்  14  ராகவ ரெட்டி  தெரு...

நல்லவேளைவிலாஸம் தெரிந்ததாகத்தான் இருந்தது

ஆனால் தெரு பெயர் தான் இப் போது ராகவாத் தெரு 
என்றுமாறிப் போயிருந்தது.

ஆவலை அடக்கிக்கொண்டுமறுநாள் காலைவரை காத்திருந்து  
சங்கரன் ரங்கராஜு ஷூ கடையைத்தேடிக்கொண்டு போனான்.

இப்போது நிச்சயமாக ராகவாத் தெரு பழைய ராகவ ரெட்டி
தெருவைப் போல்  இருக்காது. ஏகப்பட்ட கடைகள் .இடித்துக் 
கட்டப்பட்ட அடுக்ககங்கள்... வாகனக்  கூச்சல்கள்...

இருந்தாலும் ஏன்அந்தப் பழைய ஷூ கடைஅங்கே இன்னும் 
இருக்கக்கூடாது?

இரண்டுமூன்று
 முறை மேலும் கீழுமாக நடந்துநம்பர் 14 கண்
ணில் படுமா என்று   பார்த்துக்கொண்டு போனான். 

நம்பர்கூட மாறி இருக்கலாம். பெயர் பலகை இருக்கலாமே!!

சட்டென்று  ஒரு இடத்தில் நின்றான். அங்கே வலதுபக்கம் 
ஒரு சைக்கிள் கடை யின் தகரக் கூரைக்குப் பின் தெரிந்த மேல்
மாடி யில் அநேகமாக  பிளந்து கொண்ட ஒரு அறைக்கதவில் 
அந்தப்பலகை கோணலாகத் தொங்கிக் கொண் டிருந்தது !!

ரங்கராஜூ  ஷூ கடை!!

சங்கரனுக்கு வியப்புத் தாங்கவில்லை. சைக்கிள்கடையின் 
பக்கவாட்டில் மெல்ல  றிப்போய் மேலே கடைக்குள் எட்
டிப்பார்த்தான்

சிறிய நீள வாட்டமான அறை. சுவர் ஓரங்களில்பொருந்தி
யிருந்தநீளமான பலகைகளில்  பலவிதமானகாலணிகள்
அலங்கோலமாகநிரம்பிக்கிடந்தன.  அதிக வெளிச்சமில்லை. 
பழைய தோல் வாசனை குப்பென்று நெடியடித்தது.

யாரு  ஸார்?”   

வயதான கிழவன் ஒருவன் கண்ணாடியை மூக்கில் பொருத்
திக் கொண்டு இருண்டபின்கட்டிலிருந்துமெள்ள வெளியே 
வந்தான். அங்கேதான் அவன்  குடித்தனமும்  இருக்க வேண்டும் என்று தோன் றியது.

 சங்கரன்  தயக்கத்துடன்  ஆரம்பித்தான்.

நல்லவேளை  ஒங்ககடையை  கண்டு பிடிச்சுட்டேன்...ரொம்ப 
வரு ஷமா இந்த  கடை  இருக்குதோ?" ஒரு  பேச்சுக்காக சொன்
னான்.

 கிழவனுக்கு  அது ரஸிக்கவில்லை.

தம்பீ...இப்போ  என்னா  வோணும்  உங்களுக்கு?  ஒங்க  
செருப்புநல்லாத்  தானே  தெரியுது!..

இல்லேஅதுக்காக வரலே!.. இது இப்போ இருக்குமோ
இருக்  காதோ...தெரியலேய்யா.. இந்த சீட்டைப் பாருங்க..
எங்கஅப்பா  மிலிட்டரிக்காரர்...இருபத்தி அஞ்சு வருஷத்து
க்குமுன்னாடி இங்கே  ஷூ  ரிப்பேருக்கு  கொடுத்தார்திருப்பி 
வாங்கமறந்துபோய்ட்டாருன்னு நெனைக்கிறேன்.இந்தச் சீட்
டைப்பாருங்க!  அநேகமா  இருக்காது.  சும்மா ஒரு  ஆர்வத்துக்
காகத்தான்  அப்பா ஞாபகமா....வந்தேன்".

சங்கரன் அந்த ரஸீதை கிழவனிடம் கொடுத்தான்.

கிழவன்  தடிமனான கண்ணாடியை சரி செய்து  கொண்டு 
சற்று நேரம் ன்னிப்பாக ரசீதைப் பார்த்துக்கொண்டே
நெற்றியை  தேய்த்துக்கொண்டான்...கொஞ்சம் இருமி
னான்.

 “இருங்க..பாக்கறேன்..”   .

மெதுவாகஅண்ணாந்து சுவரோரம் இருட்டு மூலையில் 
சாய்ந்து நின்றுகொண்டிருந்த ஒரு பரணின்  மேல்   தட்டில்சுமத்திவைக்கப்பட்டிருந்த பழைய செருப்புக் கூட்ட
ங்களுக்குள் ஒரு கம்பை நீட்டி ஆட்டினான். நாலைந்து செருப்பு கள் தபதபவென்று தரையில் விழுந்தன. 

கிழவன் அவற்றையெல்லாம் எடுத்து உன்னிப்பாகப் பார்த்து
விட்டுக்  கீழே  போட்டான். மீண்டும் பரணின் இன்னொரு 
மூலையிலிருந்து செருப்புகளை   உதிர்த்தான்.
  
சங்கரனுக்கு  பெரிய  எதிர்பார்ப்பில்லை.

"முடியலேன்னா  விட்டுடுங்க..” ......

கிழவன் கழுத்தைத்திருப்பி சங்கரனைகூர்மையாகப் பார்த்து
விட்டுஒங்க  அப்பா ஞாபகார்த்தமா கேக்கறீங்க.இருங்க,
பொறுமையா  பாத்து        தரேன்...மறுபடியும்  கும்பலில் 
தேடஆரம்பித்தான்.... 

கையில் ஏதோஒரு  ஜதையைஎடுத்து சோதித்துப்  பார்த்து 
விட்டு மறுபடியும் ஏதோ நினைவுக்கு  வந்த  மாதிரி மேலே  
பார்த்தான்...

  “இருக்குங்க...

  “என்னது?..இருக்கா?..” சங்கரனால்  நம்பமுடியவில்லை!

 “அதோ பாருங்க அந்த  மேல் தட்டு மூலையில….அந்தக்  
கருப்புஜோட்டுக்   குப் பின்னாலெ நாடா இல்லாமெ ரெண்டு  
ஷூ  தெரி யுதா.தல தடிமனான    முரட்டு   ஷூ.....

  சங்கரனால் இன்னும்   நம்ப முடியவில்லை.

 ஆமாம் தெரியுதே!..

 “அது தான்  ஒங்க  அப்பாவோட  ஷூ...

சங்கரனுக்கு  நம்ப முடியாமல்  ஆச்சரியமாக இருந்தது..
அந்தக்  கிழவனை   பெருமிதத்துடன் பார்த்தான். 'இந்த  
வயதில் இவருக்குஎவ்வளவு ஞாபகம்! எவ்வளவு நாணயம்! 
எவ்வளவுசிரத்தை...! அடடா!........'

ரொம்ப  நன்றிங்க....எப்படி  இருபத்தி ஐஞ்சு வருஷமா 
இவ்வளவு பத்திரமா  இதை  வைச்சிருக்கீங்க...ஆச்சரியமா 
இருக்குங்க...! அப்பா இருந்தா  இப்போ எவ்வளவு சந்தோ ஷப்படுவாரு..

அதெல்லாம் ஒரு தொழில் விசுவாசம்தான் தம்பி... இங்கே  
ரிப்பேருக்குக்  கொடுத்தா எதுவும்  இங்கெயே தான்  இருக்
கும்..போகாது.!!..

அவன் ஷூவை காகிதத்தில் பொதிந்து கட்டிக்கொடுப்பான் என்று சங்கரன் காத்துக்கொண்டிருந்தான்.

சங்கரன் நிற்பதைப் பார்த்து கிழவன் உத்தரவாதத்துடன் சொன்
னான்.

தம்பீ....பிரச்னையில்லே!..அடுத்தசெவ்வாக்கிழமை இதே 
டயத்து க்கு வாங்க .......... ரெடியாயிடும் !!!!!!!

சங்கரனுக்கு கீழே இறங்கப் படி தேவை இருக்கவில்லை!



No comments:

Post a Comment