எங்கிருந்தோ வந்தான்......
நான் அதை உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயங்கினேன். நான் நிர்க்கதியாக
நிற்பதைப் அவன் ஏற்கனவே ஊகித்துக்கொண்டுவிட்டானோ?...
‘நான் அவனைக் கத்திக் கூப்பிடலாமா?’ பதற்றமுடன் சுற்றிப் பார்த்தேன். அவன்
கண்ணுக் குத் தெரியவில்லை.
இருந்தாலும்,அந்த நள்ளிரவு வேளையில் வியர்வை சிந்தி நேர்மையாகஉழைத்து
சம்பாதித்த அந்த ஏழைப்பையனின் கூலிக் காசு அங்கே பறிபோகாமல் இருக்க
வேண்டுமேயென்று நான் மிகவும் கவலைப்பட்டேன்.....!!
[வைதீஸ்வரன் ]
இரவு ஒரு மணி இருக்கும். சென்னை கத்திப்பாரா நாற்சந்தி வளைவில் என்
ஸ்கூட்டர் திடீரென்று நின்றுபோய்விட்டது. இப்போது நின்றுபோயிருந்தால்
கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால். இது நின்றது1981ல்.!! அப்போது கத்திப்
பாரா ஒருஆளரவமற்ற அத்வானம். அதுவும் இரவு ஒரு மணிக்கு வெளிச்ச மில்லாத இருட்டில் அங்கே நடமாடுவது ஆபத்தானது தான்.…

சுற்றிலும் உயரமான மரங்கள் சூழ்ந்த கட்டிடங்களில்லாத பிரதேசம். இரவு
விமான சேவைகள்கூட அப்போது அதிகம் இல்லை. ஒன்றிரண்டு தான்..அத
னால்அந்த வழியாக விமான நிலையத்துக்கு போகும்...பயணிகளின் வண்டிப்
போக்குவ ரத்துக்கூட எப்போதாவது தான் நிகழும்...

நள்ளிரவில் இப்படிப்பட்ட இக்கட்டான இருண்டசூழலில் நான் நாற்சந்தியில்
நகராத ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு தவிப்புடன் நின்றுகொண்டிருந்தேன்.
அந்த வருஷங்களில் நான் விமானநிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன்
நான் வேலைக்கு ஸ்கூட்டரில் தான் போய்க்கொண்டிருந்தேன்.விமான நிலைய
த்திலேயே வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொள்ள எங்களுக்கு வசதி இருந்
தது. . .

அப்போது நிர்வாக சம்பந்தமாக இரண்டொரு மாதங்களுக்கு ஒரு முறை பெங்க
ளூரு ஹைத்ராபாத் விமானநிலையங்களுக்குநான் போய்வர நேரிடும்.ஆனால்
பொதுவாகஇந்தப் பயணங்கள்குறித்து எனக்கு சற்று முன்கூட்டியே தகவல்
தெரிந்துவிடுமாதலால் என்னை அழைத்துப்போக வீட்டுக்கு வாகனம் வந்து விடும். பிரச்னையில்லை. ஆனால் இந்த முறை நான் ஆபிஸில் பணி செய்துகொண்டிருக்கும்போதே ஹைத ராபாத்திலிருந்து அவசர அழைப்பு
வந்துவிட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் புறப்படும் ஹைதராபாத்
விமானத்தில் புறப்பட்டுப்போக வேண்டியதாயிற்று...

நல்ல வேளையாக ஹைதராபாத்தில் இரண்டுமூன்று மணி நேரத்துக்குள்
வேலைமுடிந்து விட்டதால் இரவு விமானத்திலேயே நான் சென்னைக்குத்
திரும்பிவிட விரும்பினேன்.. விமானம் இரவு ஒன்பது மணிக்கு சென்னை
க்கு வந்துசேர்ந்துவிடும். அதிகப்படியாக பத்து மணிக்கெல்லாம் நான் என்
ஸ்கூட்டரில் வீடுதிரும்பிவிடலாம்.அப்படித்தான் நானும் நம்பிக் கொண்டிருந்
தேன். புறப்பட ஆயத்தமாக இருந்த விமானத்தில் நானும் ஏறி உட்கார்ந்துவிட்
டேன்.
புறப்படுவதற்கு ஐந்து நிமிஷங்களுக்கு முன்பு திடீரென்று எங்களை கீழே
இறங்கச் சொல்லி விட்டார்கள்.. விமானத்தில் ஏதோ வெடிகுண்டு வைத்தி
ருப்பதாகத் தொலைபேசிச் செய்தி வந்ததாம்...

மிகுந்த ஏமாற்றத்துடன் சலிப்புடன் அத்தனை பேரும் இறங்கினோம்.வெடி
குண்டு சோதனைகள் முடிய அநேகமாக இரண்டு மணி நேரம் காத்திருக்க
வேண்டியிருந்தது. பிறகு காவல் துறையிலிருந்து வெடிகுண்டுப் பிரிவு
தலைமை அதிகாரிவந்து மீண்டும் மேற்பார்வை இட்டுக் கையெழுத்துப்
போடவேண்டும்.அவரும் ஊரில் இல்லை. ஒரு மணி நேரம் கழித்துத்தான் வந்து கையெழுத்துப் போட்டார்.

முடிவாக வெடிகுண்டு பற்றிய செய்தி புரளி என்று நிச்சயமாகி நாங்கள்
புறப்பட்ட போது விமானம் மூன்று மணி நேரம் தாமதம்...அந்த மூன்று
மணி நேரத்தில் நான் இரண்டு முறை ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் போய்வந்திருக்கலாம்!

சென்னையை அடைந்தபோது இரவு மணி ஒன்று. கையில் இரண்டு
பைகள்ஹைதராபாத்திலிருந்து வாங்கிவந்த திராட்சைக்குலைகளும் எனது ஆபீஸ் கோப்புகளும்.....

ஸ்கூட்டரிலேயே வீடுதிரும்பிவிடலாம் என்று தோன்றியது. சாலை காலி
யாகத்தான் இருக்கும். சற்று வேகமாகப் போனால் அரைமணியில் வீடு
போய் சேர்ந்துவிடலாம்!...அப்படித்தான் நானும் நம்பினேன்.
ஆனால் கத்திப் பாராவை நெருங்கியபோது ஸ்கூட்டர் முனகியது. விட்டு
விட்டு நகர்ந்தது.எஞ்சினில் ஏதோ அடைப்பு. மெள்ள மெள்ள வேகம் குறைந்து
தடைப்பட்டு நாற்சந்தியில் நேரு சிலைக்குப் பக்கத்தில் வந்தவுடன் மொத்த மாக நின்றுபோய்விட்டது.

பலமுறை உதைத்துப் பார்த்தேன் கால்வலிதான் மிச்சம் நாற்சந்தி வளைவுச்
சுவரில் உட்கார்ந்துவிட்டேன். இருட்டில் கடிகாரத்தைப் பார்த்தேன். ஒன்றரை
மணி.......உடம்பெல்லாம் வியர்த்தது. அடிமனதில் லேசாக பயமும் துளிர்க்க
ஆரம்பித்துவிட்டது. சுற்றுமுற்றும் பறவைகள்கூட தென்படவில்லை.நாக்கு
உலற ஆரம்பித்தது. நான் கவலையுடன் இருட்டைப் பார்த்துக் கொண்டிரு ந்தேன்..இப்போது என்ன செய்வது?

ஸ்கூட்டரைப் பழுது பார்க்க அந்த நடு ராத்திரியில் உதவிக்கு யாரைக் கூப்
பிட முடியும்? ஒரு வேளை அப்படி யாராவது தென்பட்டு அவனைக்கூப்பிட்
டால்கூடஅவன் வந்து நேர்மையாக உதவி செய்வானா? அல்லது என் பாது
காப்பற்ற நிலைமையைக் கணித்துக்கொண்டு என் கையிலுள்ள பொருட்களை
அபகரித்துக்கொண்டு என்னைக் காயப்படுத்திவிட்டு ஓடிவிடுவானா?

இப்போது யாராவது உதவிக்கு வந்தால் கூட ஆபத்தாக முடியுமோ என்று
திகிலாக இருந்தது.. இது போன்ற சமயங்களில்இந்தக் காலத்தில் கைப்பேசி
கள் எவ்வளவு சௌகரியமான ஆறுதலான துணையாக இருக்கிறது... உள்ளுக்
குள் மிஞ்சியிருந்த துணிவையெல்லாம் திரட்டிக்கொண்டு இறுக்கமாக கலக்க
முடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
“ஸார்.....” எனக்குப் பின்புறம் இருட்டிலிருந்து மெல்லிய குரல் கேட்டது.

நான் திடுக்கிட்டு என் கைப்பையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு
திரும்
பிப் பார்த்தேன்.
பரட்டைத் தலையுடன் கருப்பாக ஒடுங்கிய முகத்துடன் ஒல்லியாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான் இளைஞன் தான் ஒரு வேளை சிலைக்குப் பக்கத்தில்
தான் அவன் தூங்கிக்கொண்டிருந்திருந்தானோ!!

அவனை நான் சந்தேகமாக எச்சரிக்கையுடன் பார்த்தேன்.
“வண்டி நின்னு போயிடுச்சா...ஸார்...?”
“வண்டி நின்னு போயிடுச்சா...ஸார்...?”
நான் அதை உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயங்கினேன். நான் நிர்க்கதியாக
நிற்பதைப் அவன் ஏற்கனவே ஊகித்துக்கொண்டுவிட்டானோ?...
“அப்படி ஒண்ணும் இல்லே...எஞ்சின் சூடாயிருக்கும்னு நினைக்கிறேன்.
கொஞ்ச நாழிலே ஸ்டார்ட் ஆயிடும்...”
கொஞ்ச நாழிலே ஸ்டார்ட் ஆயிடும்...”
“இல்லே ஸார்...ப்ளக்குலே அடைப்பு இருந்தாக் கூட இப்படி..........”
நான் பேசாமலிருந்தேன். அதே சமயம் அவனைக் கணித்துக்கொண்டிருந்
தேன்.
“நான் வேணா பாக்கட்டுமா...ஸார்...”
தேன்.
“நான் வேணா பாக்கட்டுமா...ஸார்...”
அவன் குரல் சற்று நம்பக்கூடியதாக இருந்தது. எனக்கும் வேறு வழியும்
தெரியவில்லை.
தெரியவில்லை.
“ஒனக்கு இந்த வேலையெல்லாம் தெரியுமா?”
“தெரியும் ஸார்.......ஊர்லே மெக்கானிக் வேலைதான் செஞ்சுகிட்டிருந்தேன்...”
அவனை நம்பி எப்படி இதற்கு ஒப்புக்கொடுப்பது?
யோசித்துக்கொண்டே கேள்வி கேட்டேன்.
“ஊர்லேன்னா?...எந்த ஊர்...?”
“கருங்கலூர்...”
“அங்கேருந்து இங்கே ஏம்ப்பா வந்தே?...அதுவும் இந்த நடுராத்திரிலே இங்கே
எப்படி வந்தே?”
அவன் தலையைக் குனிந்துகொண்டு நின்றான் அவன் கைகள் வாயைப்
பொத்திக்கொண்டன. ஏதோ துக்கத்தை அடக்கிக் கொண்டிருந்த மாதிரி தெரிந்
தது.. கண்கள் கலங்கியிருந்தன.

”லாரிலே வந்தேன் ஸார்...இங்கே இறக்கி விட்டுட்டாங்க...குரல் எழும்பாமல் சொன்னான். “ஊருக்குள்ளே ரெண்டு தெருவுக்கு நடுவுலே பயங்கர கலவரம்
ஸார்..... எங்களை அடிச்சி விரட்ட வந்துட்டாங்க... நான் தப்பிச்சு வந்துட்டேன்
ஊர்ல இனிமே ஒண்ணு மில்லே...இங்கே வந்துதான் இனிமே பொழப்பைத்
தேடணும்...”அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

நான் பேசாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ஸார்....ஒண்ணும் பெரிய கோளாறு இல்லே
ஸார்.. ஸ்கூட்டரை பாத்துக் கொடுக்கி
றேன்..”
றேன்..”
என் பதிலுக்குக் காத்திருக்காமலே அவன் வேலையில் இறங்கிவிட்டான்..ஸ்கூட்டர்
மூடி யைக் கழட்டி தலையைக் குனிந்து கொண்டு பழுது பார்த்துக்கொண்டிருந்தான்.
வேலைதெரிந் தவன் போல்தான் தோன்றியது.. அவனிடம் பழுது பார்ப்பதற்கு வேண்டிய சில ஆயுதங்கள் அவன் கைப்பையிலேயே இருந்ததைப் பார்த்த போது எனக்கு அவன்
மேல் சற்று நம்பிக்கை வந்தது. அவன் ஏமாற்ற மாட்டான்.

சற்று நேரம் கழித்து ஸ்கூட்டர் மூடியை மூடிவிட்டு
எழுந்து உதைத்துப்பார்த்தான்.
எஞ்சின் பேசாமல் இருந்தது. ஆன மட்டும் உதைத்துப் பார்த்தான். தான் அது மசிய
வில்லை. அவன். வழிந்த வியர்வை வெள்ளத்தை துடைத்துக் கொண்டு நின்றான்.

’வேலை தெரியாத ஆளோ?’
ஸ்டாண்டை அகற்றி ஸ்கூட்டரை சற்று
உருட்டி இங்குமங்கும் சாய்த்துப்பார்த்தான்.
பிறகு திடீரென்று அதை வேகமாகத் தள்ளிக்கொண்டு ஓடினான்......

நான் திகைத்து நின்றேன். இருட்டில்
அவன் ஸ்கூட்டரைத் தள்ளிக்கொண்டு எங்கோ
வேக மாக ஓடிக்கொண்டிருந்தான். என் பார்வையிலிருந்து அநேகமாக மறைந்து
விட்டான்.
வேக மாக ஓடிக்கொண்டிருந்தான். என் பார்வையிலிருந்து அநேகமாக மறைந்து
விட்டான்.
‘நான் அவனைக் கத்திக் கூப்பிடலாமா?’ பதற்றமுடன் சுற்றிப் பார்த்தேன். அவன்
கண்ணுக் குத் தெரியவில்லை.
“டேய்...டேய்....”அவனை
எப்படிக் கூப்பிடுவது? அவன் பெயரைக் கூட கேட்டுக்
கொள்ள மறந்துபோய் விட்டேன்.
கொள்ள மறந்துபோய் விட்டேன்.
எங்கோ தூரத்தில் ஸ்கூட்டர் எஞ்சினுக்கு உயிர் வந்த
மாதிரி சத்தம் கேட்டது.
ஆனால் அந்த சத்தம் மெள்ள மறைந்து மொத்தமாக ஸ்கூட்டர் என் பார்வையி
லிருந்து மொத்தமாக காணாமல் போய்விட்டது. என்ன முட்டாள்தனம்!!

இப்போது என்ன செய்வது?.... அவன் வருவானா? ஒரு வேளை வராவிட்டால்…
வரா விட்டாலும் என்னால் அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும்? நடந்த
விவரத்தை யாரிடம் சொன்னாலும் அவர்கள் என்னைத் தா ன் முட்டாள் என்று
சொல்லுவார்கள்.

ஆனால் நான் சந்தேகப்பட்ட படி நடக்கவில்லை. சற்றுநேரத்தில்
ஸ்கூட்டர்
மெள்ள நெருங்கி வந்துகொண்டிருந் தது. என்னருகில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு
“நல்லா ஆயிடுச்சி ஸார்... பெட்ரோல் உள்ளே flood ஆயிடுச்சி.. அதான் கொஞ்சம்
ரன் பண்ணிப் பார்த்தேன். பிரச்னை யில்ல ஸார், போய்ட்டு வாங்க ஸார்”,என்றான்
பணிவாகக் கையைக் கட்டிக்கொண்டு நின்றபடி.. எனக்கு படபடப்பு நிற்க சில
கணங்கள் பிடித்தது.

நன்றிப் பெருக்கோடு அவனைப் பார்த்தேன். என் பையிலிருந்த ஐம்பது ரூபாயை
எடுத்துக்கொடுத் தேன் அந்தக் காலத்தில் ஐம்பது ரூபாய் அதிகமான கூலி தான்.

“பரவாயில்லே...ஸார்...வேண்டாம் ஸார்...என்று சற்று தயக்கமாகச் சொன்னான்.
இருந்தாலும் அவனுக்கு அப்போது அது மிகப் பெரிய ஆறுதலைக் கொடுக்கும்.
அவனும் வாங்கிக் கொள்ள மறுக்கவில்லை.

“ரொம்ப தேங்க்ஸ் “ஸார் என்றான். அவனுக்குள் பெரிய சந்தோஷமும்
நிம்மதியும்
துளிர்ப்பதை என்னால் உணர முடிந்தது. அழுக்காக இருந்த ஸீட்டை துடைத்து
என்னை ஏறிக் கொள்ளச் சொன்னான். ஒரு பெரிய இக்கட்டிலிருந்து விடுபட்ட நிம்ம
திப் பெருமூச்சுடன் அவனுக்கு மீண்டும் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

சற்று தூரம் சென்றவுடன் தோளில் இடைஞ்சலாகத் தொங்கிக் கொண்டிருந்த பையை
ஸ்கூட்டரில் மாட்டிக்கொள்ளலாமே என்று தோன்றியது. வண்டியை ஓரமாக நிறுத்தி
இறங்கி தோள் பையை வண்டியில் மாட்டி விட்டு திரும்பிப் பார்த்தேன்.

தூரத்தில் பார்த்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது .
இரவில் ரோந்து வருகிற ஒரு போலீஸ் வேன் ஒன்று நாற்சந்தியில்
நின்று கொண்டி
ருந்தது. அந்த இளைஞனை ஒரு போலீஸ்காரர் முதுகைப் பிடித்துத்தள்ளி வண்டிக்குள்
ஏற்றிக்கொண்டிருந்தார்.அவன் கைகளைக் கூப்பிக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருந்த
மாதிரி தெரிந்தது.ஆனால் அது ஒன்றும் பலனளிக்கவில்லை அவனைத் தள்ளி ஏற்றிக்கொண்டு வேன் வேகமாக எதிர் திசையில் சென்றது.

எனக்கு உடனே அங்கே விரைந்துபோய் அந்த இளைஞனைவிடுவிக்க வேண்டு
மென்று பரபரத்தது ஆனால் அதற்குள் வேன் எதிர் திசையில் வேகமாய் ஓடி மறைந்து
போய்விட்டது.

வழியெல்லாம் எனக்கு .அந்த இளைஞன் நினைவாகவே
இருந்தது. மனசில் வருத்த
மும் வேதனையும் ஆறாமல் பொங்கிப் பொங்கி அடங்கிக் கொண்டிருந்தது. அந்த நல்ல
வனுக்கு ஏன் இப்படி நேரவேண்டும்?திரும்பத்திரும்ப மனதுக்குள் கேள்வி சுழன்று
கொண்டேயிருந்தது.

ரோந்து வந்த போலீஸ்
இன்ஸ்பெக்டர் ராத்திரியில் தனியாக போக்கிடமற்று
நிற்கும்அந்தப் பையனை விசாரித்திருப்பார். நான் கேட்ட கேள்விகளைத் தான்
கேட்டிருப்பார். ஆனால் கொஞ்சம் கடுமையாக அதட்டிக் கேட்டிருப்பார்.

அவனும் என்னிடம் சொன்ன அதே ஊர்
விவரங்களைத் தான் சற்று பயத்துடன்
நடுக்கத்துடன் அவரிடமும் சொல்லியிருப்பான். ஆனாலும் அந்த நள்ளிரவில் விலாஸ
மற்ற நாதியற்ற ஒரு எளியவனை சந்தேகப்படுவதற்கு காவல்துறைக்கு இந்தமாதிரி
விவரங்களே போதுமானது !!!!

ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டுபோய் இரவுமுழுவதும்
அவனை விசாரிப்பார்கள்.
துன்புறுத்தினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் முடிவில் சந்தேகப்படும்படியாக எதுவும்
இருக்காது. அந்தப்...பையன் நல்லவன் உழைக்கக்கூடியவன்... அவனை நாளைக் காலை
யில் போகச் சொல்லி விட்டுவிடலாம்.......
துன்புறுத்தினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் முடிவில் சந்தேகப்படும்படியாக எதுவும்
இருக்காது. அந்தப்...பையன் நல்லவன் உழைக்கக்கூடியவன்... அவனை நாளைக் காலை
யில் போகச் சொல்லி விட்டுவிடலாம்.......
இருந்தாலும்,அந்த நள்ளிரவு வேளையில் வியர்வை சிந்தி நேர்மையாகஉழைத்து
சம்பாதித்த அந்த ஏழைப்பையனின் கூலிக் காசு அங்கே பறிபோகாமல் இருக்க
வேண்டுமேயென்று நான் மிகவும் கவலைப்பட்டேன்.....!!
அம்ருதா மார்ச் 14
.
No comments:
Post a Comment