vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, December 12, 2014

தெய்வத்துக்கு என்ன தெரியும்?

 தெய்வத்துக்கு  என்ன  தெரியும்?                 

வைதீஸ்வரன்


வயதான  பிறகு  எல்லோரும்  கோவில்  குளம்  என்று  போகிறார்கள்.. நீங்கள்  எப்பொ ழுதாவது  என்னைக்  கூட்டிக்  கொண்டு  போகிறீர்களா? “  என்று  என்  மனைவி ஆதங் கத்துடன்  போன வருடம் கேட்டாள்.

.”வயதான  பிறகு தானேஎனக்கு  இன்னும்  வயதாகவில்லையே!” என்றேன்  சிரித்த வாறு
வாயில் சொல்லிக்  கொண்டால்  வயது குறைந்து விடுமாஉங்கள்  ஆபீஸில்  அப் படி  நினைக்கவில்லையே... வயது கெடுமுடிந்த வுடன்  வீட்டுக்கு  அனுப்பி  விட்டார் களேஅவர்கள்  பொய்  சொல்லுகிறார்களா?”

  நான்  பேச்சை  மாற்ற  முயன்றேன்.  “சரி  இப்போது  கோவிலுக்குத்  தானே  போகவேண்டும்  அதற்கும்  வயசுக்கும்  ஏன்  முடிச்சுப்  போட வேண்டும்  அடுத்த  வாரமே  நாம் போகலாம்எனக்கு  மங்களூரில் உடுப்பி கிருஷ்ணனைப்  பார்க்க  வேண்டுமென்று வெகு  நாட்களாக  ஒரு  ஆவல்.. கிளம்பு“  என்றேன்.

”ஆனால் அந்த  உடுப்பி  அனுபவம்  ஒரு  பேரனுபவமாக  இருக்கும்  என்று  சற்றும் எதிர்பார்க்கவில்லை.  அங்கேஸாமி  எனக்கு  ஒரு  அதிர்ச்சி  வைத்தியம் கொடுத்தார்
  
  
உள்ளே  சன்னிதிக்குள் சுமாரான  வரிசைநானும்  தோளில்  பையை  மாட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்  மனைவி  கால்  வலியினால்  தூரத்தில் ஒரு பெஞ்சியில்  உட்கார்ந்து  கொண்டி ருந்தாள்.

  யாரோ  ஒரு  மாதுகையில்  குழந்தையுடன்  என்னிடம்  பணிவாக  சிரித்து  விட்டு  என் பின் னால் நின்றுகொண்டாள் க்யூவுக்கு  வெளியே  இரண்டு அழகான பெண்கள் கேரளா உடையில்  மங்களமாக நின்றுகொண்டிருந்தார்கள் 

 ஸ்வாமி தரிசனம் வரிசை  முடிந்து  நான்  சற்று  முன்னே  நகர்ந்தவுடன்  பின்னிருந்த  மாது  என் மேல்  ஒட்டியவாறு  கைகுழந்தையை  என்  முன்  பக்கமாக நீட்டி பக்கத்து  சுவரில் பதித்திருந்த சாமியைத் தொட்டுத்  தொட்டு  அதன்  கண்ணைப்  பொத்திக்கொண்டிருந்தாள்என்னால்  நகர  முடிய வில்லை  {அந்த  சமயம்  என்  தோள்பைக்குள் என்ன கஇருக்கிறது  என்று சோதித்திருக்கிறாள்}  நான்  சற்று  பலமாக  முன் நகர்ந்து  இடப்பக்கமாக 
நகர்ந்து  வெளியே  நின்றதும் அந்த இரண்டு  அழ கான  பெண்கள்  ஒருத்தி  பின்னாலும்  இன்னொ ருத்தி  முன்னாலும் வந்து  நின்று  கொண்டார்கள்  நகராமல்  நட்டு வைத்த  மாதிரி நின்றார்கள்  எனக் குக் குழப்பமாக  அசூயையாக இருந்தது  அவர்களை  விலகச்  சொன்னாலும்  ஏதோ  கன்னடத்தில்  பதில்  சொல்லி  சிரிக்கிறார்கள்  நான்  அசையவே முடியவில்லை. 

என்னால் அவர்களைத்  தொட்டு  தள்ள  சங்கடமாக  இருந்தது. ஏன்  இப்படி  செய்கிறார் கள் என்று புரியவில்லை. இரண்டு  நிமிஷங்களுக்கு பிறகு திடீரென்று இரண்டு பேரும்
சிரித்துக்  கொண்டே  என்னை  விட்டு  அகன்று  விட்டார்கள்.
 
நான் என்  மனைவியிடம்  சென்று  இந்த  பெண்களின்  கேவலமான  நடத்தையைப் பற்றி  சொன்னேன்  கோவிலுக்குள்  இப்படி  ஒரு  வெட்கங்கெட்ட  செயல்  நடக்கிறதே  என்று  சொன்னேன்.பிறகு  கோவிலுக்கு  வெளியே  வந்து  ஏதோ  வாங்குவதற்காக       என்  தோள்  பையிலிருந்து  பர்ஸை  எடுக்க  முயன்றேன்.

  என்  மனைவி தான் பார்த்தாள்  "அய்யயோ  பை  திறந்திருக்கிறதே!...”

 
தோள் பைக்குள்  இருந்த  மனைவியின்  பர்ஸ்  தனியாக கட்டாக  வைத்திருந்த  10000/  ரேஷன்  Card    Voters  cards  for  Identification  எல்லாம்  பறி போய்விட்டது  அப்போது  தான்  புரிந்தது  அந்த  மூன்று  பெண்களின்  கேவலமான  நடத்தை.

 
மூச்சிரைக்க  ஓடமுடியாமல்  ஓடி  உதவி கேட்டு இங்குமங்கும்  பதைப்புடன் அலைந் தோம்இரண்டு மூன்று பேர் எங்களை"அங்கே  போய்  சொல்லு,  இங்கேபோய் சொல்லு  என்று  அலைக்கழித்துக்  கொண்டிருந்தார்கள்அதுவும்  கன்னடத்தில்

கடைசியில்  ஒருத்தன் CTCV  Camera  உள்ள  இடத்தில்போய்  சொல்லுங்கள்” என்றான்.
அங்கே போனபோது  உடனே  அக்கறையுடன்  கவனிக்க  யாருமில்லை  கடைசியில் ஒரு தமிழ் தெரிந்த  அபிமானி  யாரோ  நிர்வாகியைக் கூட்டிவந்து  என்னிடம் சம்பவ நேரத்தைக்  கேட்டுCTCV  காமிராவை  முடுக்கிப்  பார்க்கும்போது  ஒரு  மகா  திருட்டுத் திட்டமே விரிந்தது.


முதலில்  குழந்தையுடன்  நின்ற  மாது  என் தோள் பையை  அமிழ்த்திப்  பார்த்து உள்ளே ஒரு  பர்ஸ்  இருப்பதை  ஊகித்துக் கொள்கிறாள்அருகே  பார்த்துக்  கொண்டு நின்ற  அழகான  பெண்களுக்கு  சமிக்ஞை செய்கிறாள்  உடனே அந்தப்  பெண்கள் என்னை  நகராமல்  இறுக்கிக்கொள்கிறார்கள்  அச்சமயம்  குழந்தையுடைய  மாது  பின்புறம்  என்  தோள் பையில்  கை  விட்டு  உள்ளே இருந்த  தடித்தபையை எடுத்து  தன்இடுப்புக்குள்  சொருகிக்  கொண்டு மாராப்பை  மறைத்துக் கொள்கிறாள்  உடனே  பெண் கள்  மூவரும்  சற்றும்  பதற்றமில்லாமல்  நடந்து  மெதுவாக  கோவிலுக்கு  வெளியே  போகிறார்கள்  போகும்போது  கூட  முகத்தில்  எந்த விதமான  பாவத்தையும் காட்டா மல்  பசு  மாடுகள்போல்  போகிறார்கள்.

 
நிர்வாகி  பார்த்து  சொன்னான்  "    இந்தப்  பொம்பளைகளா!...இதுங்க  பழுத்த  போக்கிரீங்க.திருவிழா...பூஜை  கோவில்லே எது  நடந்தாலும்  இதுங்களைப்  பார்க்கலாம்"

 
பின்  ஏன்  இவர்களைப் பிடிக்கவில்லை? என்ற  என்  கேள்விக்கு  பதில்  இல்லை.

 "
நீங்க  பேசாம  போலீஸ்  ஸ்டேஷனுக்குப்  போய்  ஒரு  F I R  கொடுத்திடுங்கோ" என்று  பயணத்தில்  நாம்  எடுத்துக்  கொள்ள  வேண்டிய  எச்சரிக்கைகளைப்  பற்றி      விலாவரியாக  பேசிக் கொண்டிருந்தான்  பிறகு  தான்  புரிகிறது...அந்த  திருட்டுப்  பெண்கள்  வெகுதூரம்  போய்  மறைந்து  போவதற்கு  அவன்  ஒத்தாசை  செய்கிறான்  என்று...பைக்குள்ளே  எவ்வளவு  பணம் இருந்தது  என்பதை  மட்டும் மறக்காமல் கேட்டுக் கொண்டான்

 
போலீஸ்  ஸ்டேஷனில் அன்பாக  பேசினான் இன்ஸ்பெக்டர்.  தமிழ் தெரியாது, கொஞ்சம்  ஆங்கிலம்தெரியும்”, என்றான்  பேப்பரைக்  கொடுத்து  நடந்த  சம்பவத்தை   எழுதி  கொடுக்கும்படி  சொன்னான்  CCTV  காமிரா  படமும்தனக்கு  வந்துவிட்டது          என்று  சொன்னான்.

நான் கொடுத்த பிராதை  நிதானமாக  படித்து  விட்டு  FIR  போட்டு  விடட்டுமா? என்று  கேட்டான்.

"அதில்  என்ன்  கஷ்டம் ? என்றேன்"உங்களுக்குத்தான் கஷ்டம்...நான்  இரண்டு  வார த்து ஒரு முறை யாரை யாவது  பிடித்து  வைத்துக்கொண்டு உங்களுக்கு  தக வல்  கொடுப்பேன்  ஒவ்வொரு  முறையும்  நீங்கள்  தான்  சென்னையிலிருந்து  வந்து  அடையாளம் காட்டவேண்டும்

பிறகு  கோர்ட்டில்  கேஸ்  நடக்கும் போது  வர வேண்டும்  அதுவும்  இரண்டு மூன்று வாய்தா  நிச்சயம்  நேரிடும்...என்ன  சொல்கிறீர்கள்?அதுவும்  தண்டனை  நிச்சயமாகுமா என்றுசொல்லமுடியாது..நீங்கள் தொலைத்த  பணத்துக்கு  இந்த  தொந்தரவுகள்  ஈடா குமா?" என்று  கேட்டான்

 
நான்  கோபமாக கேட்டேன்  "குற்றவாளி  பிடிபட்டு தண்டனை  கொடுக்கும்போது  இத னால் எங்களுக்கு  ஆன  செலவையும்  சேர்த்துத் தானே  கொடுப்பார்கள்?"

 "
நியாயமான  எதிர்பார்ப்புத்  தான்...ஆனால்  உங்கள்  வயது  சூழ்நிலை  தவிர  உத்தரவாதமில்லாத  நிரூபணம்  இவற்றை  கணக்கில்வைத்துக்  கொள்ளுங்கள்..முக்கியமாக
உங்கள்  பணம்  நிரூபணம்  ஆகாது..நீங்கள்  10000/என்று  சொல்லுவீர்கள்  குற்றவாளி  "பணமே அதில்  இல்லை  என்று  சொல்லுவான்  நிரூபிக்க முடியாதல்லவா?”

 
எனக்கு  அப்போது  தான்  என்  பரிதாப  நிலைமை உறைத்தது. ..நான்  மிகவும்  வருத் தத்துடன் அவன்  முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தேன்

"ஏன்  ஸார்  ஸாமி  முன்னாலயே  இவ்வளவு  அக்கிரமத்தை துணிச்சலா பண்றா ங்கஅவங்களுக்கு  ஸாமியைப்  பத்தி  பயமே  கிடையாதா?" நம்பிக்கையோட கோவி லுக்கு  வர்ரதுக்கெ  எனக்கு  இப்ப பிடிக்காம  போச்சே..."

 "
யார்  கண்டார்கள்?முதலில்  பயமாக  இருந்திருக்கலாம். யாரோ  இவர்களை  இப்படி இந்தத்தொழிலுக்கு  விரட்டுகிறார்கள்?யாரோ  இவர்களுக்கான    வசதியான  பாதுகாப்பு வியூகத்தை  கோவிலில்  ஏற்படுத்துகிறார்கள்யாரோ  இவர்களுக்கு  இதனால்  ஏற்படுகிற    சுலபமான  ஜீவனத்தைப்  பற்றிய  சௌகரியத்தில்  உள்ள  பிடிப்பை  ஊன்றி விடு கிறார்கள்.. பிறகு  பிடிபடாவிட்டாலும்  பிடிபட்டுவெளியே  வந்தாலும் இவர்கள் இந்தத் தொழிலை  விட்டு  வெளியே  வர  மாட்டார்கள்!..."

 "
நல்ல சமூகம்  நல்ல  கோவில்  தரிசனம்... நீங்கள்  சொல்வது  சரிதான்  ஸாமிக்கே இக்காலத்தில்  பாதுகாப்பில்லாத  போது  ஸாமியைப்  பற்றி  யார்  பயப்படப் போகிறார்கள்?என்  பிராதைக்  கிழிதெறியுங்கள்" என்றேன்.

அவர்  தயக்கத்துடன் ஆனால் நிம்மதியடைந்தவராக சிரித்தார்.


நான்  சொன்னேன்.....

 "ஆனால்  ஒன்று  ..கண்ணுக்குத்  தெரிகிற  இந்தத்  திருட்டுப்  பெண்கள்     மன்னிக்கப்பட வேண்டியவர்கள்.  அவர்களுக்குப்  பின்னால்  ஒரு ஒட்டு மொத்த  அதிகார  கும்பலே     இந்த  திருட்டுக்கு  உடந்தையாக  பிடிபடாத  வளையத்தில்  பதுங்கிக் கொண்டு  நடிக்கிறார்களே......அவர்களை எல்லாம்  சுட்டுப்  பொசுக்க  வேண்டும்" என்றேன்

இன்ஸ்பெக்டர்  முகத்தில்    லேசாக  ஒரு  குற்றவாளியின்  சாயல்  மின்னி மறைந்தது.
சிலவினாடிகள்  மட்டும் ...
  
"
நான்  உங்களுக்கு என்னால்  ஆன  உதவிகளை  செய்யலாம். .ஆனால்  நாளைக்கு நான்  காச்ர்கோடுக்கு  மாற்றலாகிப்  போகிறேன்.." என்றான்  .

 
அதோடு  இந்த  சம்பவம்  மொத்தமாக  மறக்கப்பட வேண்டிய ஒன்று  என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.


பி.கு  நல்ல வேளை  தோள்  பையின்  இன்னொரு  பகுதியில் இருந்த  என்  பர்ஸை அவள்  எடுக்கவில்லை  அதில்  கொஞ்சம்  பணமும்  A T M  கார்டும் இருந்ததுநாங்கள் ஊர்திரும்பினோம்.
  
  









No comments:

Post a Comment