ஓலையும்
மாலையும்
வைதீஸ்வரன்
வைதீஸ்வரன்
என் விமான சேவைத் தொழிலில் ஒரு
சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
என் சக ஊழியர் ஒருவன் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்கள் இருந்தன. அவன் என்னுடன் டியூட்டியில் இருந்தான்.
அப்போது விமானம் தரை இறங்கி விமானஓட்டி
உள்ளே வந்தவுடன் மறு நாளை க்கு எந்த FLIGHT பறக்க
வேண்டும் என்கிற தகவல் உள்ள கடிதத்தை அவனி டம் கொடுக்க வேண்டும்.
என் வயதான சக ஊழியன் ஆர்வமாத்தால்
"நானே இந்தக் கடிதத்தை அந்த பைலட்டிடம் கொடுத்து விடுகிறேன்.
ஏனென்றால் அவன் என் நல்ல நண்பன். அவனிடம் சந்தித்துப்
பேசி விடை பெற்று விட்டு நானே கொடுத்து விடுகிறேன்" என்று
வாங்கிக் கொண்டு வெளியே அந்த விமான ஓட்டியை சந்திக்கப்
போனான்
மறுநாள் அந்த ஓய்வு பெறும் ஊழியனுக்காக சின்ன பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.
மறுநாள் அந்த ஓய்வு பெறும் ஊழியனுக்காக சின்ன பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.
அப்போது இரண்டு மூன்று பேர் ஓடி வந்தார்கள் .
”விமானம் PILOT வராமல்
நின்றுகொண்டிருக்கிறது. அந்த விமானஓட்டி வீட்டில் இல்லையாம்.
அவருக்கு இந்த FLIGHT பற்றி
யாரும் தகவல் கொடுக்கவில்லையாம்" என்றார்கள்
சக ஊழியன் கழுத்தில் மாலையைப் போட்டுக்கொண்டு மேடையில் பேந்தப் பேந்த விழித்தான் அவன் அந்தக் கடுதாசியை விமான ஓட்டிக்கு கொடுக்க மறந்து போயிருந்தான்!!!!!!!!!!
சக ஊழியன் கழுத்தில் மாலையைப் போட்டுக்கொண்டு மேடையில் பேந்தப் பேந்த விழித்தான் அவன் அந்தக் கடுதாசியை விமான ஓட்டிக்கு கொடுக்க மறந்து போயிருந்தான்!!!!!!!!!!
பிரிவுபசாரத்தின் இடையில் அவனை எப்படி திட்டுவது ? அதுவும் அந்த சமயம்
அவனுடைய இத்தனை ஆண்டுகளான திறமையான சேவையைப்
பற்றி . யாரோ மேடையில் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்
என்ன செய்வது??
‘பைலட்டுக்கு வயித்தாலை அதனால் வரவில்லை’,
என்று வேறு ஏதோ காரண த்தை சொல்லி சமாளித்தோம்
அன்று FLIGHT ஒரு மணி நேரம் தாமதமாக
புறப்பட்டது"
ஊழியன் தொழிலில் இவ்வளவு ஸீரியஸான தப்பை செய்து விட்டு மாலையும்
ஊழியன் தொழிலில் இவ்வளவு ஸீரியஸான தப்பை செய்து விட்டு மாலையும்
சால்வையுமாக வீட்டுக்குப் போனான்!! அவனுடைய
ராசி!!
No comments:
Post a Comment