vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, May 4, 2015

தோன்றியது...

தோன்றியது...

வைதீஸ்வரன்


கந்தசாமி  சற்று  கவ லையாக  இருந்தார்.  அவர்  வியாபாரம்  சுமாராக  நடந்தாலும் பெரிய  முயற்சிகளில்  அவருக்குப்  பலன்  கிட்டவில்லை. இது  பற்றி  அவர் நண்பனி டம்  யோசனை  கேட் டார். நண்பர்  சொன் னார்.

எனக்குத்  தெரிந்தவர்... சித்தர்  மாதிரி ஒருவர்  இருக்கிறார்..... அவரு டைய  சொல்   சரியாக  இருப்பதாக  பலர்  சொல்லுகிறார் கள்... நீ  ஏன்  அவரிடம் ஆலோசனை  கேட்கக்  கூடாது?”.

கந்தசாமிக்கு  அது  சரியென்று  தோன்றியது.  அந்தப்  பெரியவரிடம்  பவ்யமாக  போய்  நின்று  அவரிடம்  பழத் தட்டில் ஒரு  பெரிய  தொகையை  வைத்து   விட்டுப் பலன்  கேட்டார்..  அவர்  சொன்ன  பலன் மிகவும்  நம்பிக்கை  ஊட்டுவதாக  சந்தோஷமாக  இருந்தது.   இன்னும்  இரண் டொரு  மாதங்களில்  மிகப்பெரிய  ஆதாயம்  கிடைக்கும் என்று  சொல்லியிருந்தார்.

 கந்தசாமி  பழையபடி  உற்சாகமாக  வியாபாரத்தை  நடத்தி 

னார். குலுக்கலில்  ஒரு  பெரிய  தொகை  கிடைக்கப்  போவ 

தாக  சொல்லியிருந்தார்.  வியாபாரம்  ஏறுமுகமாகப்  

போகும்  என்று  சொல்லியிருந்தார்.  .இரண்டு  மாதங்க 

ளுக்கு  மேலாகவே  கடந்து  போய்  விட்டது.

சித்தர்  வாக்குப் படி  எதுவும்  பெரிய  லாபமோ  அதிர்ஷ் டமோ  வாய்க்கவில்லை.  வியாபாரம்  பழையபடிக்கி   ஒரே  மாதிரி  தான்  போய்க்  கொண்டிருந்தது.. குலுக்கல்  போட்டி யிலும்  பணம் இரட்டிப்பாகவில்லை.  போட்டது  தான்  வந் தது. . அவருக்கு  பெரிய வர்  மேல்  ஆத்திரமாக வந்தது.

யோவ்.. ன்னாய்யா....ஜோஸியம்  சொல்றீங்கநீர்  அளந்த  மாதிரி  ஒரு  மண்ணும்  நடக்கலே! எல்லாம்  எப்ப வும்  போலத் தான்...நீரெல்லாம்  பெரிய  வாக்கு  சொல்ற வரா??  !..”

 பெரியவர்  அமைதியாக  பதில் சொன்னார்.

 அய்யா..  உண்மையில்  நான்  அப்படி நினைத்துக் கொள்ள வில்லை…நீங்கள்  கேட்கும் போது  எனக்குத்  தோன்றி யதை   தான்  ஏதோ   சொல்லிவருகிறேன்.. உங்கள்  கோபம்  சரி தான்..” 

இப்போதும்  ஏதோ  எனக்குத் தோன்றுகிறது.   சொல் லிவிடுகிறேன்.   உங்களுடைய  அடுத்ஆறு  மாதத்துப்  பலன் இது  .. நான்  சொல்லியபடி  நடக்கிறதா  என்று நானும்  பார்க்கப் போகிறேன் ..என்றார்  அந்தப் பெரியவர்.

 கந்தசாமி  அவர்  சொல்லுவதைக்  கேட்டார்.   அவர்  சொன் னதைக்  கேட்டு  பலமாக  சிரித்து விட்டார்..  அவர்  வாக்குத்  தான்   பலிப்பதில்லையே!...  என்று  அவருக்கு  நம்பிக்கை.

ஆனால்  அடுத்த  மாதம்   அவருடைய  சரக்கு  லாரி மரத்தில்  மோதி  அத்தனையும்  பாழாகிவிட்டது.  அதற்கு  அடுத்த  மாதம்  அவர்   மனைவிக்கு   பெரிய  வியாதி  வந்து  அந்த சிகிச்சை  ஆரம்பமாகியது.

அதற்கு  அடுத்த  மாதம்  வீட்டுப் பின்னறையில்  மின்கசிவு  ஏற்பட்டு  பாதி  வீடு  எரிந்து போய் விட்டது. கந்தசாமிக்கு  துக்கமும் ஆத்திரமும்     வேதனையும்  சொல்லி  முடியாமலி ருந்தது. எப்படி அந்தப்  பெரியவர்  சொன்னபடியே  எல் லாம்  நடந்தது!!

ஆனாலும்  அவரால்  பெரியவரைக்  குற்றம்  சொல்ல  முடிய வில்லை  போன முறை  பெரிய வரை  மரியாதையில்லாமல் பேசிவிட்டது  தவறோஅதனால்தான்  இப்படியோ?  அவரி டம்  மன்னிப்புக்  கேட்க  வேண்டுமோ? ‘ கந்தசாமி   குழப்பத் துடன்  யோசித்துக்  கொண்டிருந்தார்.

அப்போது  அந்தப்  பெரியவரே   அங்கே  வந்தார்.

“”கந்தசாமி, .உங்களுக்கு  நேர்ந்த  கஷ்டங்களையெல்லாம்  கேள்விப்பட்டேன்  மிகவும்  வருத்தமாக  இருந்தது    நேரில்  வந்து  என்  அனுதாபத்தைத் தெரிவித்துப்  போகலா மென்று  வந்தேன் “  என்றார்.

கந்தசாமி கலக்கத்துடன்  சொன்னார்: உங்கள்  வாக்கு உண் மையானது  தான்...ஸாமீ...   . என்னை  மன்னிச்சுடுங்கோ! என்றார்.

கந்தசாமி... மன்னிப்பெல்லாம்  பெரிய  வார்த்தை... நான்  எனக்குத் தோன்றியதைத் தான்  சொன்னேன்.... இந்த முறை  அது  பலித்திருக்கக்  கூடாது.. ஆனால் பலித்து விட் டது. எனக்கு  வருத்தமாக  இருக்கிறது.  இந்தாருங்கள் போன  தடவை  நீங்கள்  எனக்குக்  கொடுத்த  தொகை..   இப்போது  அது  உங்களூக்கு  மிக்க உதவியாக  இருக்கும்.

கந்தசாமியால் அதைத்  தட்ட  முடியவில்லை.. வாங் கிக் கொண் டார்.

போக  நினைத்த  பெரியவர்  மீண்டும்  திரும்பி  வந்து  ஒரு  காகிதத்தில் ஏதோ  எழுதிக்  கந்தசாமியிடம்  கொடுத்தார்.

என்ன..ஸாமி  இது ?”

இப்போது  எனக்குத் தோன்றியது.

அவர்  போய்விட்டார்.  கந்தசாமி  காகிதத்தைப் பிரித்துப்  படித்தார்.

“சம்பவங்கள்  எப்படி  நடக்கவேண்டுமோ  அப்படித்தான்  நடக்கும்.  இது  உங்களுக்கே   தோன்ற  வேண்டும்.  நான்  சொல்லித்  தோன்ற வேண்டியதில்லை.  

                  


இந்து  தமிழ் நாளிதழ்  30/4/15



                           
   





No comments:

Post a Comment