கண்ணில் தெரிந்த வானம்
---------------------------------------------------
வைதீஸ்வரன்
காற்றுக் கலைக்காத கோலமடீ - இருள்
காட்டில் விளைந்த பூக்கூட்டமடீ!!
நேற்றும் இனியென்றும் தோணுமடீ – திசை
தேடும் கப்பல்துணைக் காகுமடீ!.
வானம் தினம்கட்டும் சேலையடீ – அதில்
வாலிபர் கண்பட்ட ஊனமடீ!
ஆக்கிப் படைப்பவன் சூளையடீ!
பாயத் தெரியாத மீன்களடீ - வானப்
கூடிச் சிரித்திடும் சேய்களடீ! – தெய்வம்
மோனம் நிறைந்தபல் வேதமடீ! – இன்ப
மோகக் கனல் வீசும் நீலமடீ!
*
*இந்தக் கவிதையை அல்லது பாடலை 55 களில் எழுதிய ஞாபகம். பாரதியாரின் பல கவிதைகள் இப்படிப்பட்ட பாடல் வடிவத்தில் இருக்கி ன்றன. அடிக்கடி அதை ஆர்வத்துடன் வாசிக்கும் போது அதே தொனியில் எழுத ஒருவர்
தூண்டப்படக் கூடும்.
ஆனால் வரிகள் வெற்று அலங்காரமாக சோடையாக இல்லாமல் இருப்பது முக்கியம். எதுகை
மோனைக்காக வலிந்து செயற்கையாக சொருகப்பட்ட வார்த்தையாக
அமைந்து விடக் கூடாது.
நவீன கவிதைக் கோட்பாடுகளின்படி இது கவிதை ஆகாது. பாரதி யாரின் கவிதைகளையும் அப்படித்தான். சொல்லுவார்கள்.
ஆனால் இங்கே ஒரு இயற்கையின் புதிரும் பிரும்மாண்டமும் அளப்பரிய சௌந்தர்யமும் பாந்தவ்யமும் ஒரு மனதை கவித்துவ மான மொழிகளில் சித்தரித்துப் பார்க்க
ஆசைப்படுகிறது. வானத்தின் அழகை மனித மொழிகளால் அள்ளிப் பருக
முயல்கிறது.
இதைக் கவிதை என்று சிலர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.
இந்த சித்திர மொழிகள் எனக்கு ஒரு
இசையின் மொழி வடிவமாக உவப்பாகவே இருக்கிறது .
இதைப் பள்ளிகளில் சிறுமிகள் பாடிக் கோலாட்டமாடினால்
சந்தோஷ மாக இருக்காதா!!
வைதீஸ்வரன்
No comments:
Post a Comment