நூல் நோக்கு: அரை நூற்றாண்டு கவிதைத் தொடர்ச்சி
Keywords
Published
: 02 Dec 2017 10:43 IST
நூல் நோக்கு: அரை நூற்றாண்டு கவிதைத் தொடர்ச்சி
விதைகள் வார்த்தைகளின் சப்தமாக இருக்கக் கூடாது; மனதில் ஒலியாக இருக்க
வேண்டும். அலங்கார வடிவங்களிலிருந்து நாம் மீட்டுவந்த கருத்துகளின் வீரியம்தான்
நாம் மேற்கொண்டிருக்கும் கவிதை முயற்சிகள்” என்று கவிதை பற்றிய தனது எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ளும் கவிஞர் வைதீஸ்வரன், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதை
கள் எழுதிவருபவர்.
1961-ல் ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியான முதல் கவிதையிலிருந்து தொடங்கிய
இவரது கவிதைப் பயணம், இந்த ஆறாவது கவிதை நூலிலும் அதே வீரியத்துடன்
தொடர்ந்துள்ளது. இத்தொகுப்பிலுள்ள 80 கவிதைகளையும் வாசிக்கையில், கவிஞருக்கு
மட்டுமல்ல வாசிப்பவர் களுக்கும் சில அபூர்வமான தருணங்கள் மீண்டும் உயிர்த்தெழவே
செய்கின்றன.
‘நேற்று / மழையை அனுப்பிவிட்டு /நீ எப்படி வராமல் இருந்தாய்?/ அது எப்படி
நீயாகும்?/ மழைக்குள் தீயிருக்கிறதா?’ என்பதான காதல் துளிகளிலும் கவிஞர்
ஒளிர்கிறார்.
- மு.முருகேஷ்
Keywords
No comments:
Post a Comment