கவிதை
மொழியற்ற கணம்
_வைதீஸ்வரன்
_வைதீஸ்வரன்
வாசலில்
அமர்ந்திருக்கிறேன்.
எதிர்பாரா திக்கிலிருந்து விருட்டென்று
பாயும் அம்புக்குறிகள்....
கூட்டமாய்
மனதில்
வெடித்த ஆச்சரியங்கள் !!
அழகு துடிக்கும்
விசைத்துளியாக
மூலைக்கு
மூலை அதன்
ஊசலாட்டம்
கிரணங்கள்
படும் கணங்களில் தீப்பொறிகள்
அக்குருவிகள்
.
நோக்கமற்ற
என் மனதை காட்டும்
அதன்
அர்த்தமற்ற தேட்டம்.
சில
சமயம் அதன் குறுக்குவெட்டுகளால்
வானம்
திடம் பெற்று பார்வையைத் தொடுகிறது
எங்கோ
நீளுகின்ற எல்லையில்லாக்
கற்பனைக் கைகள்
எதிரே
நிகழ்த்தும் அசாத்தியமான
ஒழுங்கும் இயக்கமும்
அழகும்..உயிர்த்துடிப்பும் .....
உணர்வை மீட்டி
இசையாக்குகிறது இக்கணம்....
அதற்கு ஒரு அர்த்தம் எதற்காக?
No comments:
Post a Comment