vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, December 11, 2017

கார்டுகள் எதையும் மறைப்பதில்லை - வைதீஸ்வரன்

  கார்டுகள்  எதையும் மறைப்பதில்லை    
       வைதீஸ்வரன்




எனக்கு  எட்டு வயது  ஆன போது   என் பிறந்த  ஊர் சிங்நல்லூருக்குப விடுமுறைக்குப்  போனேன்அப்போது   எனக்கு  குப்புசாமி  மிகப் பிரியமான  சிநேகிதனானான். எப்போதும் நாங்கள்  அரட்டையடித்துக் கொண்டே  இருப்போம்சினிமா வசனங்களைப்  பற்றி  ரஸித்துப் பேசுவதும் எங்களுக்கு பிடித்த  பொழுது  போக்கு.
   ஒரு  மாதம்  கழித்து  திரும்பி நான் சேலத்துக்கு புறப்பட்ட போது  அவன்  விக்கி விக்கி  அழுதான்நானும் அழுதேன்.   சேலத்துக்கு வந்த  மூன்றாம்   நாள்  எனக்கு  ஒரு  கார்டு வந்தது
 “நண்பா!   காலம்  நம்மைப் பிரித்து விட்டது. இப்போது  கடிதக் கப்பலை  அனுப்பியுள்ளேன்கப்பலை அனுப்புவதற்குள்  எவ்வளவோ தடங்கல்கள்புயல் [என் அப்பாதிமிங்கிலம் [என் அக்கா]   எப்படியோ  காப்பாற்றி அனுப்பி விட்டேன்.    தவறாமல்  கப்பலை  திருப்பி அனுப்பு. நான்  அன்புடன்  கொடுத்த  கோலிகுண்டுகளைத்  தொலைக்காமல் வைத்திருக்கிறாயா? பதில் அனுப்புஇப்படிக்கு  அன்பு  நண்பன்  குப்புசாமி.”
  நான்  உடனே  அவனுக்கு சுலபமாக பதில் எழுதினேன்ஏனென்றால்  அவன்  எனக்கு  reply card   அனுப்பி இருந்தான்.

 [அப்போதெல்லாம்  reply card  இருந்தது இரண்டு கார்டுகள் சேர்த்து ஒட்டப்பட்டிருக்கும் ஒன்றில் அவன் கடிதம் எழுதி  இன்னொன்றில் அவ்ன்  விலாஸத்தை மட்டும் எழுதினால அந்தக் கார்டில்  செலவில்லாமல் பதில் எழுதி விடலாம்]

  “ "" அன்புள்ள  குப்பு  உன்  கடிதக்கப்பல்  சேதிகளை  படித்து  கலங்கிவிட்டேன்கோலிகுண்டுகளில்  ஒன்று  தொலைந்துவிட்டது. பக்கத்து  வீட்டுப் பையன் தான்  எடுத்திருப்பானென்று சந்தேகப்படுகிறேன்இப்போதெல்லாம்  நான்  கில்லி தாண்டு  ஆடுகிறேன். உன்னைப் பார்க்க  உடனே  வர வேண்டுமென்று  ஆசைப் படுகிறேன்  பிள்ளையாரை வேண்டிக்கொள்ளுகிறேன்  நீ அனுப்பிய கடிதக் கப்பலில்  என் அன்பை நிரப்பி அனுப்பி இருக்கிறேன். அப்பாவுக்குத் தெரியாமல் தான் எழுதுகிறேன்அன்புள்ள  வைதீஸு”  
இரண்டு  நாட்களுக்கு  பிறகு  மீண்டும்  ஒரு  reply card  வந்ததுநான்  பதில்  எழுத  எழுத  reply cardகள்  வந்து கொண்டே இருந்தன.

 என்  அம்மா  ஒரு நாள்  இதை பார்த்துவிட்டாள். ஆச்சரியம்  தாங்கவில்லை.

அப்போதெல்லாம் பையன்களுக்கு எங்கே கார்டு வரும்? அதுவும்  Reply card!!
அப்பாவிடம்  போய்  சொன்னார்.  [ கோள் மூட்டி விட்டாள்  என்றுதான் எனக்கு அப்போது  தோன்றியது ].

 “யார்ரா  அந்தப் பையன்விடாமெ  reply card   அனுப்பிக்கிட்டிருக்கானாமே!  அது என்னா  விலை  தெரியுமா?   எஙகளுக்கே அப்படி எவனும்  தபால்   அனுப்பறதில்லே!   உனக்கு ! யார்ரா அனுப்பறான்....பணக்காரப் பையனா?  ?   குடுரா  அதை” “  என்று  பிடுங்கிப் பார்த்தார்.

 “ “”அய்ய்ய்யோ  இது   குப்பன்  நம்ம ஊர்   போஸ்ட் மாஸ்டர்  வெங்கிட்டு  பையன்னா... இவன்? ! இவனுக்கு எப்படி கார்டு கிடைக்கறது?   அப்பாவுக்குத் தெரியாம  கார்டைத் திருடி திருடி  எழுதி  அனுப்பறான் போல.....  இல்லாம  போனா  வார வாரம்   இந்த சின்ன பையன் இப்படி  எழுத முடியுமா?  “ 

  எனக்கு சரியாக  புரியவில்லை  ஆனால்  ஏதோ தப்பு  என்று  தெரிந்ததுஅடுத்த முறை  கார்டு  வந்தபோது  என்  அப்பா  காத்திருந்து  அதைப்  பிடுங்கிக்கொண்டார்.

 பதில் கார்டை  எடுத்து  “அன்புள்ள  குப்பு  அடுத்தமுறை  இந்த  மாதிரி  கார்டைத்  திருடி  கடிதம்  எழுதினால்  நேராக  உங்க  அப்பாவிடம்  சொல்லிவிடுவேன்.  அவர்  உன்னை  போலீஸில்  பிடித்துக் கொடுத்து விடுவார்.  ஜாக்கிரதை!    இப்படிக்கு  அன்புள்ள  வைதீஸின் அப்பா”  என்று  எழுதி  அனுப்பினார்.

 அதற்குப் பிறகு  கடிதக் கப்பல்  போக்குவரத்து  சுத்தமாக  நின்றுபோயிற்று.

எனக்கு  ரொம்ப  வருத்தம்குப்புவும்  அதை விட  வருத்தப்   படுவான்அதற்குப் பிறகு  ஞாபகம்  வரும்போதெல்லாம்  குப்பு கொடுத்த   கோலிகுண்டை மட்டும்  எடுத்து  உருட்டிப்  பார்த்துக் கொண்டிருந்தேன்.

 அப்பா  தடுக்காமல்  எங்கள்  கடிதக்கப்பல்  சுமுகமாகத் தொடர்ந்திருந்தால்  எங்கள்  தமிழ் நடை  மேலும் நன்றாக  வளர்ந்திருக்கும். ஆனால்  குப்புவின்  அப்பாவுக்கு  போஸ்ட் ஆபீஸில் என்ன  விபரீதம்  நடந்திருக்குமோ!!

                           



No comments:

Post a Comment