ஆத்மாநாம்
_வைதீஸ்வரன்
ஆத்மாநாமை நான் சந்தித்து அவ்வப்போது சில வார்த்தைகள் பேசிப் பிரிந்து போன சில வருஷங்களுக்குப் பிறகுதான்அவரைஒருஅருமையான தீவிரமான கவிஞனாக நான் வாசித்து அறிந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.!!
திருவெல்லிக்கேணியில் கவிஞர் ஞானக்கூத்தன் அறையில் ஒரு நாலைந்து
பேர்கள்
அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் ஸ்வாரஸ்யமான நாட்களில் தான் நான் முதன் முதலில் ஆத்மாநாமை பார்த்தேன்.அவர் அந்தமாதிரிக் கூட்ட ங்களில் அங்கே ஓரமாக பணிவாக உட்கார்ந்துகொண்டிருப்பார். அவர் பிரஸ ன் ன மே தெரியாத அடக்கத்துடன் உட்கார்ந் திருப்பார். பார்க்கும்போது மரியா தையுடன் புன்னகை செய்வார் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது
ஓரத்தில் ஆவலோடு
உட்கார்ந்து வேடிக்கைபார்த்துக் கொண்டி ருக்கும் சிறு வனைப் போலத்தான் எனக்கு ஆத்மாநாமைப் பற்றி நினைக்கத் தோன்றியது.
மௌனமாக ஆனால் மிக கவனத்துடன் சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண் டிருப்பார் .
அந்தப் பேச்சின் கருத்தை தனக்குள்ளேயே விவாதித்துப்பார்த்து தனக்கு சரியாகத் தோன்றுவதைமட்டும் ஏற்றுக்கொள்ளும்
கூர்மையான சிந்தனைப் போக்கு கொண்ட வராக அவர்
அப்போது இருந்திருக்கவேண்டும். பேச்சின் குறுக்கேஅதை வெட்டியோ ஒட்டியோ பேசியதை நான் பார்த்ததில்லை.
ஆனாலும் அவருக்குள் கவிஞன் என்ற ப்ரக்ஞை துளிர்விட்டு தளிர்த்துக் கொண்டிருப்பதை
உணர்ந்தவராகவும் அதுபற்றி தீவிரமாக சிந்திப்பவராகவும் அவர்
அந்தகாலகட்டத்தில் இருந்திருக்கவேண்டும். நான் அதிகப்படிஅவரை
ஒரு நாலைந்து தடவைக்குமேல் சந்தித்தி ருக்கமாட்டேன் என்று ஞாபகம். அப்போது அவருடைய மிகக் குறைந்த
கவிதை வரிகளைத் தான் பார்த்திருக் கிறேன். வரு டம் 1969/70 ஆக இருக்கலாம்.அதற்குப்பிறகு நானே தீவிரமான உடல் உபாதைக்கு ஆளாகநேர்ந்தது. வழக்கம்போல் ஓடியாடி
அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து போயிற்று. எழுத் தையே மூச்சாக்கிக் கொள்ள வேண்டும் என்ற லட்சியங்கள்
காற்றில் பறந்து போய் மூச்சு விடுவதே பெரும்பாடான நிலைமை யாகி கிடக்கவேண்டிய தாயிற்று.
அந்தஇடைவெளிவருஷங்களில்ஆத்மாநாம் தன்னை அறிந்துகொண்டு விட்டார். தன் வாழ்க்கையின் மூலைமுடுக்குகளிலெல்லாம்
அலையடித்து கொண்டிருந்த ஆத்ம வேதனைகளை கவிதைகளாக்க, அதுவும் மிக சுயமான தொனியில் கவிதைகளாக் கத்
தெரிந்துகொண்டுவிட்டார்.
“ழ” என்ற
தலைப்பில் கவிதைக்காகவே ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நல்ல தரத்துடன் நடத்தக்கூடிய இலக்கிய ஆளுமையையும் பெற்றுவிட்டார். இன்றையவாசிப்பில்கூட “ழ”பத்திரிகையில் வெளிவந்த பல கவிதைகள் நுண்மையான தற்காலத்தன்மையும் அவசி யமான எளிமையும் கொண்டதாக அனுபவ உண்மை சார்ந்த கருப்பொருளை கொண்டி ருப்பதைப்
பார்க்க முடி கிறது. ஒரு காலகட்டத்தின் சிறந்த கவிதைப்போக்கின் பிரதி
பலிப்பாக, ஆவணமாக ழ இன்றும்
நிலைக்கிறது.
ழ சமயத்தில்ஆத்மாநாம்பத்திரிகைக்கு என்னைக்
கவிதை அனுப்பும்படி இரண்டு மூன்று முறை தபால்கார்டு போட்டார். ஆனால்
ஏனோ அன்று எனக் கிருந்த சங்க டத்தில் கவிதைகள் எதுவும் எழுதவில்லை. அனுப்பமுடியவும்
இல்லை. அதனால் ழ பத்திரிகையில் என் கவிதைகள் எதுவும் வெளியாகாமல்
போனது எனக்கு இன் றும் வருத்தமாக பெரிய இழப்பாகவும் இருக்கிறது.
அதைவிட
பெரிய இழப்பு எவ்வளவோ சாதிக்கக்கூடிய உண்மை வேட்கையும் மனிதஅவலங்களை எண்ணி நெக்குருகும்பான்மையும்
கொண்ட நல்ல
கவிஞர் எனது நண்பர் ஆத்மாநாம் அத்தனை சின்ன வயதில் அகாலமாக தன்னை
மாய்த்துக்கொண்டார்.
அவருடைய
இழப்பு பல வருஷங்களாக எனக்குள் புதைந்துபோனதென்றாலும் இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த அதிர்ச்சியான சோகமான உண்மையை நான் சிலஆண்டுகளுக்குமுன்புதான் திடீரென்று தற்செயலாக உணர்ந்துகொண்டேன்
.
கீழே
தரப்பட்டிருக்கும் கவிதை திடீரென்று
எந்தவித பிரத்யேக முயற்சியும் இன்றி, ஆத்மாநாம் பற்றிய கவிதையாக அடிமனத்திலிருந்து நேராக வந்து
விழுந்தது _ மறு திருத்தத்திற்கு இடமே வைக்காமல் !
இது
மிகையான செய்தி அல்ல.
*ஆத்மாவின் குரல் [ 1993 ]
கிணற்றில்
என்றோ விழுந்த என் நிலவை
தேடிப் போனேன்,.......நள்ளிரவில்
நிலவு இன்னும்
தொலைந்து விடவில்லையெனத் தெரிந்தது.
நடுங்கிய நீர்..... பிம்பமாய்.......
குரல் கேட்டவுடன்
நிலவு போல் இல்லை
“நீ யார் முகம்?..... என்றேன்
“உன் முகத்திற்குள் பிறந்த முகம்....”
என வட்டமாய் ஒலித்தது
நீர் மட்டத்தின் மேல்.
“ சுற்றி வளைக்காதே....சொல்லு...
எனது ஆத்மாவா.....நீ? “ என்றேன்.
“ஆத்மா.......நாமே.......” என்றது.
வளைந்து.
“அடாய்..... அன்று
அலையில் தெறித்த மீன்களைப் போல்
அழகான சில கவிதைகளைத்
தமிழுக்குத் தந்து விட்டு
நழுவி விட்டாயே...
இருட்டின் ஈரமான ஆழத்திற்கு............
ஏன்?......” என்றேன்...
அது இன்னும்
எனக்கே...வெளிச்சமாக வில்லை.....
கவிதையின் விந்துகள் போல்...”
எனக் குறும்பொலி செய்தது......
.........ழழ் ழழ் ழா ழழ்ழ்ழா .................