vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, October 24, 2018

பழத்தை இழந்த தோல் - வைதீஸ்வரன்பழத்தை இழந்த தோல்


வைதீஸ்வரன்

அந்த வாழைப் பழத் தோல் நட்ட நடுச் சாலையில் எந்த வாகனச் சக்கரங்களுக்கும் இரையாகாமல் இன்னும் கிடந்தது என் கண்களை உறுத்தி மூளையைத் திருகிற்று.

தோலை மறந்து விட முயற்சித்த போது அதன் உள்ளே இல்லாமல் இருக்கும் பழத்தைத் தேடி ஆதங்கமாக ஊரெல்லாம் அலைந்தது உள் மனசு.

பழம் இப்போது எங்கே எப்படி இருக்கும்எப்படி அழிந்து போயிருக் கும்எப்படி என்னவாக மாறிக் கொண்டிருக்கும்?

மனிதனின் வாய்க்குள் போய் அது அவனை சிறிதளவாயினும் சாத்வீகப் படுத்தியிருக்குமாஅவன் கோபத்தை கொஞ்ச நேரம் ஆறப் போட்டிருக்குமா?
மாட்டின் வாய்க்குள் போயிருந்தால் அதன் பசியை மேலும் தீவிரப் படுத்தி தெருத் தெருவாய் தோலின் வாசனையைத் தேடி வெறி பிடித்து அலைய வைத்திருக்குமா?

பழத்தை இழந்த தோலின் வருத்தம் நேரத்துக்கு நேரம் வீங்கிக் கொண்டே வருகிறதுதன் வயிற்றில் வளர்த்த சிசுவை வாய்க்குள் போட்டுக் கொள்ளும் பிராணிகளின் கொடுமையை தடுக்க இயலாத பலஹீனத்தால் நைந்து சுருங்கி வதங்குகிறதுஅதுகடந்து போகும் ஒருத்தனையாவது சறுக்கி விட சாபத்துடன் காத்திருக்கிறது.

அது சறுக்கி விட்ட மனிதன் இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்தவனாக இருக்க வேண்டும்கையில் கூரான கத்தியை வீசிக்கொண்டு காதலிக்க மறுத்தவளின் கழுத்தை அறுக்கப் போனவனாக இருக்க வேண்டும்.

அது தான் என் பிரார்த்தனைமற்றபடி பழத்தை இழந்த தோலின் வருத்தம் மிகவும் தன்னலமான தியாக உணர்வற்ற புலம்பல் என்பது தான் என் முடிவான கருத்து.

Tuesday, October 2, 2018

Paul Gauguin painting

PAUL GAUGUIN PAINTING


பேத்தியின் ஓவியம் வைதீஸ்வரன்


பேத்தியின் ஓவியம்
வைதீஸ்வரன்
(அக்டோபர்  2018   அம்ருதாவில் வெளிவந்தது)

****************
     

விடிந்தவுடன் நான் எப்போதும் என் பேத்தியைத்தான்தேடு
வேன். அவள் படுக்கையை விட்டு எழாமல் தூக்கமும் விழிப்புமாக தனக்குள் பேசிக் கொண்டிருப்பாள்கனவின் மிச்சத்தை ஏதோ கதையைப்போல்சொல்லிக்கொண்டு சிரித்துக்கொண்டிருப்
பாள்.அதைநானும்கேட்க வேண்டுமென்று எனக்கு ஆவலாக இருக்கும். அவள் கதைகளில் சிலசமயம் மகாபாரத கடோத்கஜனும் டைனசோரும் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஆஞ்சனேய ரும் மிக்கிமௌஸும் ஓடிப்பிடித்துவிளையாடிக்கொண்டிருப்பார்கள் .

எப்படி கண்ணு...உனக்கு கனாவிலே இப்படியெல்லாம் வருதுன்னு கேப்பேன்.

அவள் கண்ணை சிமிட்டிக் கொண்டு இல்லே தாத்தா.. இதுலே பாதி கனா.... பாதி புருடா!...” என்று கண்ணை சிமிட்டிக்கொண்டு பலமாக சிரித்த வாறு படுக்கையிலிருந்து குதிப்பாள்.

ஆனால் இன்று அவள் படுக்கையில் காணவில்லைவீட்டின் பின்புறம் தோட்டத்துக்கு போகும் கதவுக்கருகில் இருந்த வாசற்படிகளில் உட்கார்ந்து கொண்டு உன்னிப்பாக தலையைக் கவிழ்த்துக்கொண்டு ஒரு வெள்ளைக் காகிதத்தில் என்னவோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

நான் அருகில் சென்று என்னவென்று பார்த்தேன்வெள்ளைக் காகிதம் முழுவ தும் கருப்புக்கலர் பென்சிலால் மேலும் கீழுமாகக் கிறுக்கிக் கொண்டிருந் தாள்அடிக்கடி முன்னே விழும் தலை மயிரை ஒதுக்கிவிட்டுக்கொண்டே கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

“ கண்ணூ.... என்ன பண்றேகாயிதம் பூரா...ஒரே கிறுக்கலா இருக்கேஎன்று கேட்டேன்.

அவள் கூந்தலை ஒதுக்கிக் கொண்டு தலை தூக்கி என்னை பார்த்து  டிராயிங்க்..வரையரேன்......தாத்தா!..” என்றாள்

டிராயிங்கா!..இதுவா..டிராயிங்க்!....என்ன சொல்றே..நீ? ….என்றேன்.

ஆமாம் தாத்தா....இது டிராயிங்க் தான்....இது என்னோட HAIR  டிராய்ங்க்என்று சொல்லி விட்டு பலமாக சிரித்தாள்.

அதை தமிழில் சொன்னால் ஒரு வேளை கொச்சையாக இருக்கும் என்று நினைத்தாளோ!.!!..

அவள் சொன்ன பதிலை என்னால் மறுக்க முடியவில்லை.

இதைப் போய் டிராய்ங்க வரையணுமா?....என்று இயல்பாக எழுந்த கேள்வியை நான் அடக்கிக்கொண்டேன்.

பெரிய ஓவியர்கள் இப்படி ஏதாவது வரைந்திருந்தால் இந்தக் கேள்வியை நான் கேட்க முடியுமாஎன்ற சிந்தனை எழுந்தது..

சில கலைஞர்கள் "fucks ...” என்று சொல்லி என்னை ஈனமாக பார்த்திருப் பார்கள். “ ஏன் இது உன் கண்ணைக் குத்துதா?” என்று கேட்டிருப்பார்கள்.

இந்தக் குழந்தைக்கு அப்படிக் கேட்கத் தெரியாதுஆனால் தன் சுதந்திரத்தை ஏன் தாத்தாவால் பாராட்ட முடியவில்லை...என்று அதன் உள்மனத்தில் ஏதோ உறுத்தல் நேர்ந்திருக்கலாம்.

நவீன ஓவிய வளர்ச்சியில் Dadaism “ என்று ஒரு வகை போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில ஆண்டுகள் அதிர்ச்சிகரமான சுதந்திரத்தை பிரகடனம் செய்ததுகலைகளில் உன்னதம் சாதாரணம் என்று எதுவுமே கிடையாது.  தனி மனித சுதந்திரத்துடன் இந்த உலகத்தை வாழ்க்கையை எந்தவித யதார்த்த ஒழுக்கத்துக்கும் கட்டுப்படாமல் விடுதலையாக வெளிப்படுத்து வது தான் இந்தக் குழுவின் நோக்கமாக இருந்தது.

மலத்தைக் கூட மனம் விரும்பினால் ஓவியமாக வரையலாம்!...

அறுபதுகளில் நான் சில மாதங்கள் மும்பையில் இருந்தேன். {அப்போது அது பம்பாய்!} அங்கே அப்போது progressive Artist association என்ற பெயரில் மிக முற்போக்கான ஓவியக் குழு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந் ததுபிற்காலத்தில் மிக முக்கியமான நவீன ஓவியக் கலைஞர்கள் அப்போது இளைஞர்களாக ஓவியம் வரைந்துகொண்டிருந்தார்கள் நானும் K.K. Hebbar அவர்களின் சிபார்சு மூலம் ஒன்றிரண்டு ஓவிய வகுப்புகளுக்குப் போயிருக்கிறேன்!

அப்போது அவர்கள் ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள்அதில் ஒரு ஓவியம் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது... கவர்ந்தது என்பதை விட மிகவும் உறுத்தியது என்று சொல்ல வேண்டும்.

அது ஒரு பெரிய படமாக மாட்டப் பட்டிருந்ததுஆனால் அதில் படம் எதுவும் இல்லைகேன்வாஸின் குறுக்கே கத்தியால் நறுக்கென்று கீறி விடப்பட்டிருந் ததுஅவ்வளவு தான் படம் அந்தப் படத்தை வரைந்தவர் அல்லது கீறியவர் பெயர் K. H. Ara...அப்போது ஓரளவு பிரபலமான நவீன ஓவியர்.

நான் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்து அருகில் இருந்த நண்பரிடம் "இது என்ன?“ என்று கேட்டேன் உனக்கு என்ன தோன்றுகிறதோ.. அது தான்!" என் றான்" "எனக்கு எதுவும் தோன்றவில்லையே!! .ஆனால் மிகவும் வேதனை யாக இருக்கிறது.......ஒரு நல்ல கேன்வாஸை ஏன் இப்படிக் கிழிக்க வேண் டும்மனதைக் கீறிய மாதிரி இருக்கிறது,,” ….. என்றேன்.

அது தான் இது...Heart of an Artist “ [ ஓவியனின் சோகம்என்றான்.

“Heart of That Artiste..” [ அந்த ஓவியனின் சோகம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்..


அவசரமாக நகர்ந்து போய் அந்தக் கண்காட்சிக் கூடத்தின் இன்னொரு பகுதியில் மாட்டியிருந்த பால் கொகானின் தஹிதி ஓவியங்களைப் பார்க்க சென்றேன் அவைகள் பிரதி எடுக்கப் பட்ட ஓவியங்கள் தான்இருந்தாலும் மிக நேர்த்தியான பிரதிகள்...


 தஹிதியின் பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த அதீதமான வாழ்க்கையை அது உன்னதமான அழகுடன் கனவுலகம் போல் சித்தரிக்கப் பட்டிருந்தது.

மனித வாழ்க்கையின் சந்தோஷத்துக்காக என்று எண்ணிக் கொண்டு நாம் இன்று உற்பத்தி செய்து கொண்டிருக்கும் அநேக சாதனங்கள் நமக்குத் தேவையே இல்லாதவைமிகவும் அற்பமானவை என்று தோன்ற வைக்கும் அந்தப் படம் என்னை நெகிழச் செய்தது.

நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்அப்போது பால் கோகினை நினைத்துக் கொண்டேன்.

இந்தப் படங்களை அவர் வரைந்து கொண்டிருந்தபோது அவனுக்கு கைகளில் விரல்களே குறைந்து போய் வளைந்து போயிருந்ததுகைகளில் துணி கட்டிக் கொண்டு வரைந்து கொண்டிருந்தான்!!!!

அந்தக் கலைஞனின் தனிப்பட்ட வேதனையை அந்தப் படங்கள் பிரதிபலிக் கவே இல்லை!! That was the Heart of a Great Artiste!


v