vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Monday, March 28, 2016

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் ஓவியங்கள் ???

       
நாமக்கல்
 ராமலிங்கம்பிள்ளையின் 

ஓவியங்கள் ???

வைதீஸ்வரன் 



சின்ன வயதில்  கவிதைகளை  விரும்பி  ராகம் போட்டுப்  படிப்பது  எனக்கு பிடித்தமான  பொழுது  போக்கு

 அழ.வள்ளியப்பா   எளிமையாக   சிறுவர்களுக்குப்  பிடித்தமான  சங்கதிகளை  மொழி லயத்துடன்  சொல்லியிருக்கிற  பாப்பா பாட்டுக்களை  எப்போதுமே   என்  வாய்  முணுமுணுக்கும். 

ஓசையும்  தாளமும்  சப்த  ஒழுங்கும்  என்னை  எப்போதுமே ஆகர்ஷிக் கக்  கூடிய  அம்சங்கள். குதித்துக் குதித்துப்  பாடிக்கொண் டிருப்பேன்.

அதேபோல்  கவிமணி  தேசிக விநாயகம் பிள்ளை  கவிதைகள் பாரதி யார்  நாமக்கல் ராமலிங்கம்  பிள்ளை  நான்  வாசித்து  மகிழ்பவை. 

கவிதைகளின்  அர்த்தம்  எனக்கு  இரண்டாம்பட்சம்.  அந்த  வாசிப்பில்  எனக்குள்  எழும்பும்  உணர்வலைகள்  வாசித்து  முடிந்த பின்னும்  சுழன்று  கொண்டே  இருக்கும். 

அது  எனக்கு  பிறவி  இயல்பாக  வாய்த்த  இனிய நிலை  என்று  கூ சொல்லுவேன்.

 நாமக்கல்  ராமலிங்கம்  பிள்ளையின்  புகைப்படத்தை  முதலில்  பார்த்த போது  அவர்  ஒரு  உயர் காவல்  அதிகாரி  என்று நினைத்துக்  கொண்டிருந் தேன்.   நறுக்காக  வெட்டிய  மீசையும்  பளபளப்பாக  மொழுக்கென்று  வாரிய  முடியும்  கம்பீரமான  பார்வையும்  என்னை  அப்படி  நினைக்க வைத்தது.. 

எங்கள்  ஊருக்குப்  பக்கத்தில்  உள்ள  நாமக்கல்  தான்  அவர்  ஊர்  என்று  தெரிந்தபோது  அவரை  இன்னும்  நெருக்கமாக  உணர்ந்தேன்  ஆனால்  நானோ சிறுவன்  அவரை  நேரில்  பார்க்கப் போகும்  நம்பிக்கை  அப்போது  இருக்க வில்லை.

 நான்  சென்னைக்கு  குடி பெயர்ந்ததால்  நிகழ்ந்த  பல  நல்ல அனுபவங் களில்  அவரை  சந்தித்ததும்  ஒரு  நல்ல  நிகழ்வு  1950 ஆக  இருக்கலாம்.    

நாமக்கல்  ராமலிங்கம் பிள்ளை அவர்களை  நான்  சந்தித்தபோது   எனக்கு பதிமூணு  வயது.  மெரினா கடற்கரையில்  பார்த்தேன்..   அன்று  நான் கடற் கரையில் மற்ற சிறுவர்களோடு   விளையாடிக் கொண்டிருந்தேன்.

 அப்போது   அவர்  சின்ன அண்ணாமலையுடன் அமர்ந்துகொண்டு கடற்கரை கேண்டீனில்  காபி அருந்திக்கொண்டிருந்தார்.   ஏற்கனவே  நான்  அவரு டைய மலைக்கள்ளன் புத்தகத்தின்  பின்னட்டையில்  இருந்த அவருடைய கம்பீரமான  புகைப்படத்தையும்  பார்த்திருந்ததால்  அவரை  உடனே அடை யாளம் தெரிந்துவிட்டது.

சின்ன  அண்ணாமலை  அவர்கள்  ஏற்கனவே  என் மாமாவுக்கு அறிமுகமான வராக  இருந்ததால்  என்னை  அவருக்குத் தெரியும்.

 சின்ன  அண்ணாமலை  என்னைக் கூப்பிட்டார்  அருகில்  போனேன்.

இவர்  யாரென்று  தெரிகிறதா?  “ என்று  கேட்டார் பக்கத்தில் இருந்த கவிஞ ரைக் காட்டி.  “தெரியுமே!!  ...அரசுக் கவிஞர்  நாமக்கல்  ராமலிங்கம் பிள்ளை “  என்றேன்  தாமதிக்காமல்.

  “பார்த்த்தீர்களா..?   சிறுவர்களுக்குக் கூட  உங்களைத் தெரிகிறது.....

நாமக்கல் கவிஞர்  மெதுவாக சந்தோஷமாக  சிரித்துக்கொண்டார்.. அவருக்கு  அப்போது சற்று செவிப்புலன் குறை  உண்டு..என்று பின் னால்  அறிந்து  கொண்டேன்.

நாமக்கல் கவிஞரின்  ‘சுய சரிதமான  “ என் கதை “  தமிழ் உரை நடைக்கு ஒரு அற்புதமான  எடுத்துக் காட்டு.  அவர்  கவிதைகளை  விட  இந்த உரை நடைப்   புத்தகம்  இலக்கியத்துக்கு   என்றைக்குமே  சிறப்பான பங்களிப்பு  என்பது  என்  அபிப்ராயம்.

அவருடைய  வாழ்க்கை அனுபவங்கள்  மிக  ஸ்வாரஸ்யமானது.  ஒரு அருமையான புனைகதை போன்ற  வித்தியாசமான  பல அனுபவ அடுக்கு களைக்  கொண்ட மனித நாடகமாக  அவர் வாழ்க்கை  அமைந்திருப் பதை  பார்க்கலாம்  அவருடைய  பிறந்த நிகழ்வோடு  ஒரு  சித்தரின் வரவும் வாக்கும் எவ்வளவு தீர்க்கதரிசனமாக  செயல்பட்டிருக்கிறது  என்கிற  சம்ப வம்...அவருடைய  ஓவியர்  வாழ்க்கையில்  நேர்ந்த  அதிர்ச்சி தரும்  விஷயங் கள்  அவர்  திருமண  வாழ்வில்  அபத்தமான  அர்த்தமற்ற  மௌனப் பகை யால்  இழந்து  போன  இல்லற சுகங்கள்  இப்படி  எத்தனையோ  சம்பவங் கள்  அதை  ஒரு  உன்னத  சோக  நாடகமாக  தெரிவிக்கிறது.

அதே போல்  அவர்  தேர்ச்சி பெற்ற  தொழில்  ஓவியராக  ஆற்றிய  சேதி கள்  ஏனோ எங்குமே  அதிகம்  பதிவிடப்பட வில்லை.

அவர்  நிறைய  உருவப்படங்களை  வண்ணத்தில்  தீட்டி இருக்கிறார். ஆங்கில அதிகாரிகளின்  வேண்டுகோளுக்கு இணங்க  அவர்கள்  குடும்ப படங்களை  வரைந்து கொடுத்து  நிறைய  சன்மானமும்  விலை உயர்ந்த  வெகு மதிகளும்  பெற்றிருக்கிறார். அவர்  ஓவியங்கள்  மூலம் பெற்ற  வருவாய் இலக்கியத்தின்  மூலம் பெற்றதை  விட கணிசமானது  என்று  தெரிகிறது.  பிரிட்டீஷ்  மன்னரின் படத்தைக் கூட  வரைந்ததாக  கேள்விப் படுகிறேன்.

 ஏன்  அவருடைய  ஓவியங்கள்  எதுவுமே  பார்வைக்குப் படுவதில்லை. ஏன் ஒன்று கூட  ஆவணப்படுத்தப் படவில்லை.  என்று  தெரியவில்லை.

ஒருவேளை  ஒரு  பக்கம்  நாட்டு விடுதலை பற்றி  கவிதைகள்  எழுதிய அரசுக் கவிஞராக  கௌரப்படுத்தப்பட்ட  ஒரு கலைஞர்  பிரிட்டீஷ்  அதிகாரி களின்  உருவப்படங்களை  வரைந்து  சன்மானமும்  பெற்றுக்கொண்டார்  என் கிற  வாழ்க்கை  விவரங்கள்  பதிவு செய்யப்படக் கூடாத  முரணான  தகவல் களாக  இருந்திருக்கலாம்!! 

நான்  அவருடை  ஓவியங்கள்  ஒன்றைக்  கூடப் பார்த்ததில்லை     



Thursday, March 17, 2016

இன்றைய சூழலில்............


இன்றைய  சூழலில்............

வைதீஸ்வரன்



 
பலசமயங்களில்  நம்  கண்ணும்  காதுகளும்  மற்றவர்கள்  
வாய்களையே  பார்த்துக்  கொண்டிருக்கின்றன.  அதுவும்  
அவர்கள்  நம்மைப்  பற்றி ஏதாவது  கருத்துத்  தெரிவிக்கிறார்
களா  என்பதிலேயே  நம்  கவனம்  குவிந்திருக்கிறது.  நம்மைப்
புகழ்ந்து  பேசினாலும்  இகழ்ந்து  பேசினாலும்   நமது  மனம்  
அமைதி  இழந்து விடுகிறது....  

அவர்கள்அபிப்ராயம்  எப்படிப்பட்டதாயிருந்தாலும்   நாம்  
கட்டமைத்துக்  கொண்டுள்ள  பிம்பத்தைப்  பற்றிய    கவலை
யும் மேலும்  பாதுகாத்து  வளர்த்துக்  கொள்ளவேண்டுமென்ற  
எச்சரிக்கையும் நம் நடைமுறை வாழ்க்கையை நிலைகுலைய
வைக்கின்றன.
  
இப்படித்  தான்  ஒருவன்  தன்  வருத்தத்தைத்  தீர்த்துக்  கொள்ள நினைத்தான்....

அதற்கு  ரமணர்  சொன்ன  தீர்வு   அற்புதமானது.  ......................



            
  ரமணரின்  அருமையான  வாக்கு  ஒன்று
  ------------------------------------------------------------------------

 ஒரு  பக்தர்  கேட்டார்.  

அய்யா....உறவினர்கள்  பலர்  என்னிடம்  பகையாக இருக்கிறார்கள்.  என்னைப்  பார்க்கும்போதெல்லாம்  காரணமில்லாமல்  என்னைத்  திட்டுறார்கள்  என்னால்  வேதனையைத்தாங்கிக்கொள்ள  முடியவில்லை..

 ரமணர்  நிதானமாக  பதில்  சொன்னார்.

அதற்கென்ன  வேதனைஅவர்கள்  திட்டும்போது  அவர்களோடு 
சேர்ந்து நீயும்  உன்னைத்  திட்டிக்  கொள்!  அப்போது  அவர்கள் 
எதைத்  திட்டுகிறார்கள்  என்று உனக்கே  ஞானம்  வரலாம்!  “