அபத்தமான அனுபவங்கள்
வைதீஸ்வரன்
நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கை ஐம்பத்தைந்து முதல்
சில வருஷங்கள் எனக்குள் வாழ்க்கை பற்றிய வினோதமான குழப்பங்கள் அல்லல்படுத்திக்கொண்டிருந்ததாகத் தோன்று
கிறது.
எதைப்பார்த்தாலும் குதர்க்கமாக கேள்விகள் கேட்பது…
சில வருஷங்கள் எனக்குள் வாழ்க்கை பற்றிய வினோதமான குழப்பங்கள் அல்லல்படுத்திக்கொண்டிருந்ததாகத் தோன்று
கிறது.
எதைப்பார்த்தாலும் குதர்க்கமாக கேள்விகள் கேட்பது…
நிதர்சனமான விஷயங்களையும்ஒப்புக்கொள்ள மறுப்பது!
எதை வாசித்தாலும் உன்னதமான விஷயங்களாக இருந்
எதை வாசித்தாலும் உன்னதமான விஷயங்களாக இருந்
தால்கூடஅதை ஏற்றுக்கொள்ளாமல் “இதுமாதிரி நானே
யோசிக்க முடியாதா? ”நான் கூட
செய்வேனே இப்படி.. என்று அந்தகருத்துக்களுக்கு உரியமதிப்பைக்கொடுக்காமல்
தான்தோன்றியாகநடந்துகொள்வது....
நானே எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவேண்டும்” ..
என்றுபுறவிஷயங்களை புரிந்துகொள்ளமறுப்பது!.. இப்படி
ஒரு மனப்போக்கு!!
இந்த வீறாப்பினால் நான் பெரியவர்கள் மத்தியில் எதையா
வதுபேசி நியாயமாக அவமானப்பட்டதும் உண்டு!
ஒரு முறை என் அண்ணாவிடம் [My
Cousin very learned
person]போய்“அண்ணா...இவர்கள் எல்லாம் என்ன பெரிய
பாட்டு எழுத றாங்க? வெறுமே ராமா....ராமா.... முருகா....
முருகா..ன்னுவேறஉலகத்தைப் பத்தியே உணர்வில்லாம
இழுத்துப்
பாடறாங்களே ...
தியாகராஜர்..பாபநாசம் சிவன் இவங்கள்ளாம்..இதுஎன்ன பாட்டு? ன்னு கையாட்டி
கேட்டேன்.
அடுத்த நிமிஷம் என் கன்னத்தில் பளாரென்று அறை
விழுந்தது!
“உன் முட்டாள்தனத்தை நீ புரிஞ்சிக்கிறதுக்கு பல வரு
ஷங்கள் ஆகும்! போடா...எதாவது உருப்படியாபண்ணு!”
என்று எழுந்து போனார் அண்ணா!...
அந்த சமயத்தில் எனக்கு எதைப்பார்த்தாலும் விவரம் இல்
லாமல் யதார்த்தநியாயமில்லாமல் பக்குவமற்றவனின்
துணிச்சலுடன்கோபம் வரும்...இரக்கம் வரும்... வெறுப்பு
வரும்.
ஒருசமயம் சாக்கடையில் மொய்க்கும் கொசுக்களும்
என்னைப்போல் ஒரு ஜீவன் தானே! என்று பச்சாத்தாபத்
துடன் அதைஅனு தாபத்துடன் பார்த்துக்கொண்டே அங்கே
நின்றேன் வெகுநேரம்..
கொசுக்கள் ஏராளமாக என் கால்களைக்கடிப்பதையும்
பொருட்படுத்தவில்லை. தாய்ப்பசு கன்றுக்குபால் ஊட்டு வதைப்போல்என்னை நினைத்துக்கொண்டுஎன் ரத்தத்தை
தானமாக அவைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தேன்!!!!!!!
அந்தக் கொசுக்களும் ஆசையாக ரத்தத்தைக் குடித்துவிட்டு
மிகவும் நன்றியுடன்எனக்கு கைம்மாறு செய்தது. அடுத்த
மூன்றுவாரங்கள் நான் கடுமையான ஜுரம் கண்டு உச்ச
நிலையில்உளறிப் புரண்டுபிதற்றி கால்கள் வீங்கிப்போய்
“அய்யோ..அய்யோ.. என்று கிடந்தேன்.
என் இரக்கம் அபத்தமான ஆபத்தான அறிவில்லாதவ
னின்இரக்கம் என்று
கடுமையான அனுபவத்தின் மூலம்
தான் புரிந்து கொண்டேன்.
அப்படிப்பட்ட அபத்த இரக்க உணர்வு அப்போது நான்
எழுதிய கவிதை ஒன்றிலும் இருக்கிறதாக இப்போது
கண்ணில்பட்டது.
இயற்கையின் அபார சிருஷ்டியான சமுத்திரத்தைப்
பார்த்து செத்துப்போவென்று எழுதிருக்கிறேன்!
உங்களுக்கும் வேடிக்கையாக இருக்கும் இந்த
அபத்தக் கவிதை!!!!!!!
----------------------------------------
காலமெல்லாம் கரையேறத் தவித்தலைந்து
கண்ணிழந்த புலிகளைப் போல் புரண்டுமோதி
ஓலமிட்டு உருக்குலையும் கடலே உன்னை
ஓடிவந்து காப்பாற்ற யாரேவருவார்?
வானத்துப் பாழ்வெளியில் சுழலுமிந்த
வட்டஉருக் கோளத்தின் தோலைப்பற்றி
நீலத்துகில் குலைய நித்தநித்தம்
நெஞ்சுடையப் பதறுவதில் பயன்களென்ன?
மீன்களுக்குயிர் கொடுத்தாய்! மணிகள் கோர்த்தாய்!
மேகங்கள் கூட்டியின்ப மழைகள் பூத்தாய்!
வானத்துப் பெண்ணவளைக் காதலித்தாய்!
வாழ்க்கைக்கு வேறென்ன? வாழ்ந்து விட்டாய்!!
No comments:
Post a Comment