vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, January 31, 2018

BALLAD - Marin Coresco {Romanian Poet] தமிழில் - வைதீஸ்வரன் ---------------------------------------------- BALLAD


Marin Coresco {Romanian Poet]                  

----------------------------------------------                  
BALLAD


When Lovers have caught fire all over
they hold hands
and throw themselves
into a wedding ring
with a little water in it.

It is an Important fall in their life
and they smile happily
and have their arms full of flowers
and they slide very tenderly
and they slide very majestically on foot
calling out each others name in the daytime
and hearing themselves in the night

After awhile
their days and nights get mixed up
In a sort of thick sadness.

The wedding ring answers
from the other world
Over there is a big beach
covered with bones
which embrace and sleep in their exhausted whiteness
Like beautifull shells
which loved each other all their sea.

***********


மேலெல்லாம் வெப்பம் சூழ்கையில்
காதலர்கள்
கைகளைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்
ஈரக் கசிவுள்ள
கல்யாண மோதிரத்துக்குள்
தங்களை எறிந்து கொள்ளுகிறார்கள்

அவர்கள் வாழ்க்கையின்
முக்கியமான வீழ்ச்சியது.
சந்தோஷமாகப் புன்சிரித்துக் கொள்ளுகிறார்கள்.

கைகள் நிறையப் பூக்களுடன்
மெள்ள நளினமாக ச்றுக்குகிறார்கள்
மிகப் பெருமிதமாக நகருகிறார்கள்

பகலில் மாற்றி மாற்றி அழைத்துக் கொள்ளுகிறார்கள்.
இரவில் தங்களுக்குள் செவிசாய்த்துக் கொள்ளுகிறாகள்

சில காலங் கழிந்து
இரவும் பகலும்
இனமற்ற அடர்த்தியான வருத்தமுடன்
குழம்பிக் கலந்து போகின்றன

திருமண மோதிரம்
மறு உலகத்திலிருந்து பதிலுரைக்கிறது

அங்கே ஒரு கடற்கரை
நிரம்பிய எலும்புகள்
சோகை நிறக் களைப்புடன்
கட்டித் தழுவித் துயில்கின்றன
கடலெங்கும் காதலித்துக் கிடக்கும்
பரஸ்பரக் கிளிஞ்சல்கள் போல
.


Tuesday, January 23, 2018

கல் - வைதீஸ்வரன்

கல்
வைதீஸ்வரன்


ஊமைக்குப் பேச்சு வந்தது போல்
இருட்டின் கூச்சல் இந்த விடியலில்---

எதுவும் நிகழாதது போல்
சூரியன் எழுந்து வருகிறான்
சகஜமாக
அங்கங்கே தேங்கி இருக்கும்
ரத்தக் குளத்தை அலட்சியப் படுத்தியவாறு.

ஆறு தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது
காடெங்கும் நாறிக் கிடக்கும்
பிணங்களின் இடைவெளிகளில்.

பூச்செடிகள் எழுந்து பூமிக்குப்
பூச்சூட்டிக் கொண்டிருக்கின்றறன.

விஷப்புகையும் வேட்டுகளும்
மண்டிப் பரவும் வெளிதாண்டி
நிலவும் நட்சத்திரங்களும்
நிர்த்தாட்சண்யமான ஜொலிப்புடன்..

கோடுகளற்ற பிரபஞ்சத்தின்
எல்லையற்ற ஆகர்ஷணத்தின்
எல்லை மீறாமல் சுழலுது
எண்ணற்ற கிரகங்கள்..

இயற்கையின் பிடிவாதமான பேரமைதி
மனிதனை எவ்விதமும் மனிதனாக்கவில்லை

விளக்கை எறிந்து விட்டுத்
தீயைப் பற்றிக் கொள்ளுகிறான்
விழியைப் பிடுங்கி விட்டு
வெறுப்பைப் பொருத்திக் கொள்ளுகிறான்

இந்த மனிதனை
எது எப்போது எவ்விதம்
பாதிக்கப் போகிறது?