கவிதைகள்
சொல்ல நினைத்தேன் [இரண்டு]
இன்றைய வெளிச்சத்தில்
இசைந்து வாழ்
நாளை என்பது கற்பனை இருட்டு
நினைத்து மருகுவது பேதமை
இரண்டையும் இயக்குவது
ஏதோ ஒரு உண்மை
இன்னதென்று புரியாத
எண்ணங்களின் இயலாமை
இசைந்து வாழ்
நாளை என்பது கற்பனை இருட்டு
நினைத்து மருகுவது பேதமை
இரண்டையும் இயக்குவது
ஏதோ ஒரு உண்மை
இன்னதென்று புரியாத
எண்ணங்களின் இயலாமை
* * *
விழித்த போது
இரவின் மிச்சம் இன்னும்
இருக்கிறது
இருக்கிறது
காற்று இன்னும் தோட்டத்தைத்
வருடுகிறது.
இளங்காலை இலைகளில்
பளபளத்து வழிகிறது;
குஞ்சுக் கதிரின் மழலை ஈரம்.
நெஞ்சுக்குள் பஞ்சுப்பூவைப்
போல்
ஒரு புதுச் சொல்.
வருடுகிறது.
இளங்காலை இலைகளில்
பளபளத்து வழிகிறது;
குஞ்சுக் கதிரின் மழலை ஈரம்.
நெஞ்சுக்குள் பஞ்சுப்பூவைப்
போல்
ஒரு புதுச் சொல்.
* * *
வைதீஸ்வரன்



