- ஒரு கவிதை
*மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக
மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?
என்று பாடிய மகா கவியின் கேள்விக்கு “உண்டு உண்டு..”
என்று தான் மனித வரலாறு பதில் சொல்லுகிறது...
ருவாண்டா
வைதீஸ்வரன்
இருட்டும் வெளிச்சமும் கலந்த
இரண்டும் கெட்ட வேளை
வீதிகள் விஷ நாகமாய் வளைந்து
சந்துகளாய் மெலிந்த குருட்டு மூலையில்
ஒரு மனிதன் தெரிந்தான்.
அவன் கைகளில் இறுக்கி
பலமுடன் இழுத்துக் கொண்டிருந்த
கயிறு தெரிகிறது....
இடைப்பட்ட மதில் ஒன்றால்
இழுபடும் கயிற்றின் மறு முனை
இன்னும் தெரிய வரவில்லை
கயிற்றின் மறுமுனையில்
எந்த மிருகக் கழுத்து
இருக்கும்?
மாடு...கழுதை.......நாய்...
இழுபடப் பிறந்தவைகள்....----------------
கயிற்றை அவன்
இன்னும்
இழுத்து முடியவில்லை..
மதில் இன்னும் விடுபடவில்லை.
அவன் முகம் மட்டும்
கா
ரணமின்றி....
அசிங்கமாகி
வருகின்றது
முடிச்சின்
முடிவில் இருப்பது
மனிதக்
கழுத்தாய் இருக்கலாம்
என்ற
பீதி
எனக்குள் பரவுகிறது
இரண்டுங்
கெட்ட வேளை..