vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, March 9, 2017

விலை மதிப்பற்றவன் கவிஞன்!

                  விலை மதிப்பற்றவன்  கவிஞன்!
வைதீஸ்வரன்









































பதினேழாம் நூற்றாண்டில்  நாதேர் ஷா  என்ற  திறமையான  பெர்ஸிய மன்னன்  தன்  சாதுர்யமான  வியூகத்தினால்  குறைந்த  ஆயுத சேனைகளை  வைத்துக்கொண்டு  ஆப்கனிஸ்தானை  வென்று  அப்போது  தில்லியை  ஆட்சி செய்து கொண்டிருந்த  பலஹீனமான  அரசன்  முகமது  ஷாவை  வென்று  வட இந்தியாவில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினான்.

  இவ்வளவு திறமையான  சக்கரவர்த்திக்கு  கலை  இலக்கியம்  சங்கீதம் இவற்றில்  நாட்டம்  கிடையாதுஅப்போது   இவனுடைய  அபாரமான  கீர்த்தியை  பரணி பாடி  புகழ்ந்து  இவனிடம்  பரிசுகள்  பெற விழைந்து  ஒரு  கவிஞன்  இவன்  சபைக்கு வந்து  அறிமுகப்படுத்திக்கொண்டான்தளபதி  சபையில் அவனை கவி பாடச் சொன்னார் 

கவிஞன்  மிகுந்த ஆவலுடன்  மன்னனின் அருமை பெருமைகளை  அலங்காரமாகப் பாடிக் கொண்டிருந்தான்.

 நாதெர் ஷாவுக்கு  அதில் கொஞ்சமும்  ஸ்வாரஸ்யமில்லைவிருப்பமுமில்லை. அவன்  அங்கிருந்த  வைரவியாபாரிகளிடம்  பேசிக் கொண்டிருந்தான்  கவி  பாடி முடித்துவிட்டு  கவிஞன்  கைகட்டி எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்

  நாதேர்  ஷா  அங்கிருந்த  சேவகனைக்  கூப்பிட்டு  “ இந்தக்  கவிஞனை நம்  தெருக்களில்  கொண்டு  போய்  ஏலம்  விட்டு  எதாவது  பொருள்  கிடைக்குமா..”   என்று  அறிந்து வரச் சொன்னான் 

  சற்று  நேரம்  கழித்து  சேவகன்  கவிஞனோடு  திரும்பி  வந்து  “  மன்னரேஇவரை  யாரும்  வாங்கத்  தயாராயில்லை..” என்றான்.

  நாதேர்  ஷா  சற்று  மோவாயை சொறிந்து  யோசித்தான். கோபமாகவும் இருந்தது.

கவிஞரேநீங்கள்  எப்படி  இந்த  ஊருக்கு  வந்தீர்கள்?  “  என்று  கேட்டான்.

 “ கவிஞர்  நடுக்கத்துடன்  “  கழுதையின்  மேல்  சவாரி  செய்து  வந்தேன்  மன்னா!  “  என்றான்.

நாதேர்  ஷா  உடனே  சேவகனைப்  பார்த்து  “  அப்படியா!  டேய்...நீ  இவருக்கு  பதிலாக  இவர்  கழுதையை  ஏலம்  விட்டு  விட்டு  வா!..”  என்று  அனுப்பினான்.

  சேவகன்  போய்  சில  நிமிடங்களுக்குள்  வந்து விட்டான்.

மன்னா!...  கழுதைக்கு  நிறைய  போட்டி   வந்தது  ..மன்னரேஉடனே  நல்ல  விலைக்கு  போய்  விட்ட்து.”  என்றான்.

   “கவிஞரேநீர்   கால்நடையாக  உங்கள்   ஊருக்குப்  போய்  சேருங்கள்....கழுதைதான்  இப்போது  லாபம்....சேவகனே...இவருக்கு  வழி காட்டு!..  .சபை  கலைந்தது ...!   என்றான்.


                            ***************