vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, January 17, 2016

என் அம்மாவின் நினைவுகளில் அசோகமித்திரன்

என்  அம்மாவின்  நினைவுகளில் அசோகமித்திரன்

(அசோகமித்திரன்,  விருட்சம் 2009)
.   . 


வைதீஸ்வரனின் தாயார் இறந்த தினத்தினின்று அவர் வீட்டுக்
குச்சென்றபோது நிறைய ஐம்பதாண்டு நண்பர்களை சந்திக்க 
நேர்ந்தது.

எஸ்.வி ஸஹஸ்ரநாமம் என்பவர் போன்றோரின்விடாமுயற்சி
யில்தான்எம்கே தியாகராஜபாகவதர் என்.எஸ்.கிருஷ்ணன்ஆகி
யோரின் சிறைமீட்புக்கு வெற்றி கிடைத்தது.அப்போது இந்தியா 
சுதந்திரம் அடையவில்லை. கடைசி சரணாலயம் இங்கிலாந்தி
லுள்ள பிரிவீ கௌன்ஸில் என்பது... வி.. எத்திராஜ் என்பவர் 
தான் அதற்குரிய வக்கீல். ஏராளமான செலவு.

எஸ்.எஸ். வாஸனிடமிருந்து கைப்பட ஒருலட்சம்ரூபாய்க்கான 
காசோலை  சிறை மீட்பு நிதிக்காக  பெற்றார். என்று கூறுவார்
ரகள். என்.எஸ். கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது அவரு
டைய நாடகக்குழு செயலிழந்து போகக்கூடாது என்று எஸ்.வி.
ஸஹஸ்ரநாமம் அக்குழு நாடகங்களை தினசரி அரங்கேற்றம்
செய்தார். அப்படி நடிக்கப்பட்டதுதான் மனோகரா நாடகம்.

அதில் மனோகரனாக நடித்தது கே.ஆர். ராமசாமி. நாடகத்தில் 
வரும் செயின்ஸீன் மிகவும் புகழ் பெற்றது. இது திரைப்படத்
திலும் வரும். மேடையில் பொருந்திப்போவது திரைப்படத்தில் 
அபத்தமாகத் தோன்றும். சிறைப்பிடித்துவரும் காவலாளிகள் 
கைதியின் பேருரைக்கு வசதியாக  சங்கிலியோடு  காவலாளி
கள் முன்னும் பின்னுமாக  நகருவார்கள்.  எஸ், வி ஸகஸ்ரநாம
த்தின் பைத்தியக்காரன் நாடகமும் என்.எஸ் கிருஷ்ணன் சார்
பாக  நடத்தப்பட்டது. மேடையில் வெற்றிகரமாக  இருந்த 
நாடகம் திரையில் அதிகம் சோபிக்கவில்லை.

ஆனால் எஸ்.வி ஸஹஸ்ரநாமம் யாருக்கும் நிழல்தரும் ஆல
மரமாக வாழ்ந்தார். அவர் வீடு ஒரு சத்திரமாக இருந்தது. அவ
ருடைய சகோதரர்கள்; உறவினர்கள் நன்கு படித்து பண்பாளர்
களாக  இருந்தார்கள்.அவருடைய ஒரு  சகோதரி மகன் என்.வி
ராஜாமணி  இன்னொரு  சகோதரியின் மகன் வைதீஸ்வரன்.

ராமநரசு ஜெமினி ஸ்டுடியோவை பணிபுரிய ஏன்  தேர்ந்தெ
டுத்தார்? அவர் கணக்கில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். அப்போதே 
ஏதாவது கல்லூரி யில் சேர்ந்திருக்கலாம். ஆனால் எனக்காக
வென்றே  ஜெமினி ஸ்டுடி யோவைத் தேர்ந்தெடுத்தாரென்று
தோன்றுகிறது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  எனக்கு 21 
வயது முடிந்திருக்கவில்லை. என்னுடன் ராமநரசுவின் தந்தை
யும் இதர உறவினர்களும் உலகவிவகாரங்களை விவாதிப்பார்
கள்.

நானும்இன்னொரு நண்பரும் எஸ்.வி ஸஹஸ்ரநாமத்துக்கு 
ஒரு புனைபெயர் வைத்திருந்தோம். மௌனி” அவர் வீட்டில்
எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிக்க அவர்மட்டும் வாயே 
திறக்க மாட்டார்.

அவருடைய தூண்டுதலில்தான் புதியநாடக ஆசிரியர்கள் தோன்
றினார்கள். அவர் மூன்று மாத நாடகப்பயிற்சிப் பள்ளி  நடத்தி
னார். அதில் உருவானவர்தான் கோமல் சுவாமிநாதன். அவர் 
எழுதிய தயாரித்த நாடகங்கள் எல்லாம் காலப்போக்கில்
மறைந்துபோய்விட்டன. ஆனால் அவருடைய வாழ்க்கையின்
இறுதிநாட்களில் நடத்திய சுப மங்களாபத்திரிகை இன்னும் 
பலருக்கு ஆதரிசமாக இருக்கிறது. அவ ரும் எனக்கு நண்பரா
கத்தான் இருந்தார். நாம் முதலிலிருந்தே முற்போக்குதான்.
நாம் எதற்காக கட்சி கட்டும் கட்சிகளுடன் உறவு கொள்ள 
வேண்டும்என்பது  என் வாதம். ஆனால் கோமலுக்கு அது
வேண்டியிருந்தது.

ராஜாமணி எஸ்,வி. ஸஹஸ்ரநாமம் இருந்த வீட்டில்தான் 
வைதீஸ்வரன் சில வருஷங்கள் இருந்தார். பிறகு அவர் சில
மாதஙகள் திருவெல்லிக்கேணி   திருவட்டீஸ்வரன்பேட்டை 
யில் இருந்தார்அவர் வீட்டருகில் தான் சி.சு செல்லப்பாவோடு
அமரத்வம் அடைந்த அந்த 19a பிள்ளையார் கோயில் தெரு. 
க.நா.சுவும் பல ஆண்டுகள் வாலாஜா சாலையிலிருந்தார். 
அவர் வீடு விஷயத்திலும் பிரசுர விஷயத்திலும் செல்லப்பா 
அடைந்த வெற்றியை அவரால்  அடைய முடியவில்லை.

வைதீஸ்வரன் மூலம் நான் பரிச்சயம் பெற்ற உலகம் மிகவும்  
அகன்றது... எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது...எல்லாம் 21, 22
வயதுக்கு முன்பு. 

வைதீஸ்வரன் போலவே ஆர்.கே ராமசந்திரன் முவரும் அந்தக் 

குடும்பப் பரிவாரங்களாக  எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்
கள் வீட்டில் இருக்க வேண்டுமென்றே தேவையில்லை. அங்கே
இருப்பவர்களோடு பேசிக்கொண்டேயிருப்பேன். சாப்பிடச்சொல்
லுவார்கள்...சாப்பிடுவேன். ஐந்தாறு முறை நேரமாகிவிட்டுக் 
காலையில் போங்கள்என்று சொல்லுவார்கள். அப்படியே 
எந்த முன்னேற்பாடும் இல்லாமல்தான்  அவர்கள் வீட்டிலேயே
நிம்மதியாகத் தூங்கிவிட்டு காலையில் வீட்டுக்குப் போவேன். 
என் தாயாருக்கும் இதெல்லாம் பழக்கப்பட்டுவிட்டது. அப்போது
தேடுவது விசாரிப்பதென்றால் ஒருவர் நேரில் போகவேண்டும்.

இதெல்லாம் வைதீஸ்வரன் வீட்டுத் துக்கத்தைப்  பகிர்ந்துகொள்
ளச் சென்றபோது நினைக்கத்தோன்றியது. அவர்கள் குடும்பத்
தில் அநேகமாக எல்லோருக்கும் முகம் சதுர வடிவம். அவர்கள்
அறிமுகம்தான் என்னை எழுதத் தூண்டியது என்றால் அது தவ
றாகாது.

என்னுடையமுதல்இரு சிறுகதைத்தொகுப்புகளுக்கும்ஞானக்
கூத்தனும் வைதீஸ்வரனும் முன்னுரை எழுதினார்கள், அதன் 
பிறகு தான் நான் முன்னுரைகள் எழுத வற்புறுத்தப்பட்டு, 
இப்போது  நான் முன்னுரைகளைப் படிப்பதில்லை. நல்ல 
வாசகர்கள் முன்னுரைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள்.

இவ்வளவு நீண்ட வரலாற்றுக்கு சாட்சியாக நான் இருந்து
கொண்டிருக்கிறேன்.  இருமாதங்கள் முன்பு கூட நண்பர் 
மெலட்டூர் விஸ்வநாதன் நொடிப்போதில் காலமானார். 
வைதீஸ்வரனின் தாயார் போல் அவரும் மருத்துவமனை
க்குப் போகாமலே வீட்டிலேயே மரணமடைந்தார்.

கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லுவதற்கு சில
அடையாளங்கள்  உண்டு, அதில் ஒன்று மரணம். அது பக
லில் வீட்டில் நடக்கவேண்டும்.  உற்றார் உறவினர் 
இருக்கும்போது. நிகழ வேண்டும்.

மிக முக்கியமாக அவர்கள் நினைவுடன் உயிரை விட
வேண்டும். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. மஞ்ச்சி 
மனுஷீக்கு மரணமே சாட்சி   ”நல்லவனுக்கு அவன் 
மரணமே அடையாளம். வைதீஸ்வரன் ஒரு குறும்பு 
பார்வையுடன் இந்த உடம்பை வைத்துக்கொண்டு 
இரங் கல் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்!!!!!.......என்றார்.

அவர் குறிப்பிட்ட கூட்டம் கிருத்திகா- சுகந்தி சுப்ரமணிய
த்துக்காக  நடத்தப்பட்ட கூட்டம். அன்று பேசிய திரு சிட்டியின் 
மகன் திரு வேணு கோபாலன் கிருத்திகாவின் இரு நாவல்
களைப் படித்திருந்தார். நான் மூன்றாவது படித்திருந்தேன். 
அந்தக் கூட்டத்திற்கு வந்த பார்வையாளர்கள்..... எனக்கு
ஆச்சரியம் அளித்தது.  கூட்டத்திற்குச் சென்று வீடு திரும்பி 
யவுடன் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சஹஸ்ர 
நாமம்  எழுத்தாளர்களை நாடகம் எழுதச் சொன்னார். 
வேண்டாம்.. இரங்கல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று
கூறியிருந்தால்  போதுமானது..............




No comments:

Post a Comment