vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Saturday, June 10, 2017

ஒரு பகிர்தல் வைதீஸ்வரன்

      ஒரு பகிர்தல்      

வைதீஸ்வரன்



 இன்றைய  பத்திரிகைகளில்  கவிதைகள்  கணிசமாக பார்க்கக் கிடைக்கின்றனபல  கவிதைகள்  பிரமாதமான  முயற்சியாக மிகவும் சுதந்திரமான  வீச்சுடன்  வெளிப்படுகின்றனநான்  படித்து ரஸித்த பல கவிதைகளில்  இந்தக் கவிதையை  உங்களுடன் பகிர்ந்து  கொள்ள  விரும்புகிறேன் . 
இந்தக் கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்



      இருத்தலின் அழகு  
கார்த்திக் திலகன்

 நீயும் நானும் அமர்ந்திருக்கிறோம்
என் பக்கமாக  இருக்கும்  மௌனத்தை
உன் பக்கமாக  நகர்த்தி வைக்கிறேன்.
நீயோ சிரித்துக்  கொண்டே
என் பக்கமாக அதை நகர்த்தி வைக்கிறாய்
மொழியின் விளையாட்டை விட
மௌனத்தின் விளையாட்டு
நமக்கு  பிடித்து  விடுகிறது.
தேவதச்சன் வருகிறான்
நமக்காக ஒரு ஜன்னலை  இழைத்துக் கொடுக்கிறான்
மரத்தையும்  கம்பிகளையும்  கொண்டு
துண்டு துண்டு வானத்தை  அதில் பொருத்துகிறான்
இருத்தலின்  அழகை  இன்மையின் அழகு பூரணமாக்கி விடுகிறது
கவிதை ஒன்றை எழுதி உன்னிடம் நீட்டுகிறேன்
நீ கவிதையை எடுத்துக் கொள்ளுகிறாய்.
நான் வெற்றுக் காகிதத்தை  திரும்ப  எடுத்து  செல்கிறேன்
இருத்தலின் பாரத்தை
இன்மை சமப்படுத்தி விட்டது.
லாவோட்சு சொல்லுகிறான்
பாண்டத்தின் பலன் அதன்  உட்குழிந்த வெற்றுப் பகுதியில் தான் இருக்கிறது   நண்பா!!”
நானந்த  பாண்டத்தை எடுத்துக் கொள்ளுகிறேன்
நீயதில்  நிரம்பியிருக்கும்  வெற்றுப் பகுதியை  எடுத்துக் கொள்ளேன்!!


                               *விகடன் தடம்

No comments:

Post a Comment