பெட்டியின் மரணம்
A Poem by Vaidheeswaran
English Translation
by
Indira Parthasarathy
Indira Parthasarathy
VAIDHEESWARAN
[This Poem of mine translated down here by Shri Dr Indira Parthasara thy was a kind gesture of Greetings to me on my seventieth Birth Day. Sent by him from America where he was staying then. It was 2005.]
“Vaidheeswaran is one
of the major voices in contemporary Tamil poetry. His latest poem
entitled “The Death of a Railway Carriage" published in a Tamil
Journal is one of the best I have read in recent times. Best wishes
to Him. “
Indira Parthasarathy
__TR Indira
Parthasarathy Poem by Vaidheeswaran
(*"A liberal Translation would read like this" --- Indira Parthasarathi)
The rail
tracks broke reaching the dead end
And There the
weather beaten forlorn carriage stood
like an
animal wounded at a segregated corner
A region to
which the station claimed no kinship too!
There was a
time when the carriage jogged from place to place
full of mirth
and laugh and gaiety;
but lo!
Fallen on evil days;
it all but
shows a crazy face!
The carriage
was empty not unlike a mouth open;
and wanton
boys who ran much often
Found its use
with no tariff with none to catch;
A public
toilet it was beyond anyone's watch.
The carriage
gave shelter to bearded old wise men
who came
there at dusk with pockets of eats;
and place
dense with their beedi smoke and spit;
echo their
foul mouthed swearing against society.
The carriage
shivered and shook all through the nights
when the
fearsome devils met for their mating
And at the
break of dawn it gave one creep
to look at
condoms scattered deep
Once inside
the carriage floor
lay the body
of the virgin girl
Raped
impregnated and ravaged
and the
carriage roared!
That it
became a coffin ready
blood all
over its shattered body
It roared and
roared
along with
the people gathered there!
The carriage
was auctioned
its metallic
frame went for sale
And its body
made of wood
faced fire!
The spirit of
the carriage jumped and rejoiced
As death has
given it relief with resurrection;
And deep rom
the ashes it raised its voice
to scream “”
Not again this old age please! “”
பெட்டியின் மரணம்
------------------------------ -------
துண்டு பட்டு
முடிந்து போன
தண்டவாளத்தோரம்
ரயில் நிலையம்
தொலைத்த மூலையில்
அடிபட்ட மிருகமென
அனாதை ரயில்
பெட்டி!
ஊர் விட்டு
ஊர் போய்
உருண்டு சிரித்த
காலம்
உடைந்து உருக்
குலைந்த
பைத்தியத் தோற்றம்.
வாய் பிளந்து
நிற்கும் வாகனத்துக்குள்
வாண்டுப் பயல்கள்
கட்டணமின்றி
ஒண்ணுக்கடிக்கிறார்கள்......... .
கண்ட நேரத்தில்.
அந்தியிருட்டில்
பொட்டலத்தோடு வந்து
பீடிப்புகையோடு எச்சில்
கலந்து
சமூகத்தை நாறத்
திட்டுகின்றன
சில தாடிமுகங்கள்
பேய்களின் காட்டுக்
கலவியால்
இரவெல்லாம் வண்டியின்
உதறல்
விடிந்து கிடக்கும்
கிழிந்த ஆணுறைகள்.
ஒரு முறை
உள்ளே கிழிந்து
கிடந்தது
ஒரு கன்னிப்
பிணம்
கர்ப்பிணியாக்கப் பட்டு.
சவம் பெட்டியாகி
விட்ட
அவல விதியால்
பெட்டி ரத்த
ஓலமிட்டது....
சூழ்ந்து சத்தமிட்ட
மக்களோடு
சேர்ந்து கொண்டு'
பிறகு ஏலத்தில்
இரும்பு மட்டும்
போக மீதிக்
கட்டையோடு
முதுமையின் நரகமும்
எரிந்தது!
குதித்து மகிழ்ந்த
அதன் ஆவி
சாம்பலில் நின்று
கொதித்துக் கூவியது.......
“மரணம் தந்த மறுவாழ்வில்
முதுமை மட்டும்
வேண்டாமென்று "”
வைதீஸ்வரன்