vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Wednesday, January 1, 2020



கவிதைக்கும் விதி உண்டு 

- எஸ்.வைதீஸ்வரன்-

























காலையோ மாலையோ என்ற 
அக்கறையில்லாத இதமான மிதவெளிச்சத்தில் 
குளிரும் வியர்ப்புமற்ற காற்றோட்டத்தில் 
மௌனம் துயில்கின்ற மன வெளியில் 
பறந்து வந்த சிறகு போல்  
கையில் படிந்த காகிதமொன்றிலிருந்து 
கண்ணுக்குத் தாவும்போது 
கவிதையின் நன்மொழிகள் 
உணர்வில் படர்ந்து 
சுகம் சிலிர்க்கிறது நினைவெங்கும் 
நெடுநேரம் .
இரைந்த  சில்லறைகளைப் 
பங்கு பிரிக்கப் பாடுபடும் வெறிமூண்ட வேளைகளில் 
எனக்கும் உனக்குமுள்ள வித்தியாசங்களை 
விரித்து விரோதத்தைப் பெருக்கும்  மூர்க்கமான 
சமயங்களில் 
நிலத்தை மாற்றி மாற்றிப் பிடுங்கி விளையாடும் 
கபடி ஆட்டத்தின் மூச்சுப் பதற்றத்தில் 
கவிதைகள் கிழிந்து கந்தலாகி 
எழுத்துக்கள் சாக்கடைக்குள் 
இரண்டறக் கலந்து மீளாமல் 
மீண்டும் மாய்ந்து போகின்றன.

____________________________________________________________________________
(நன்றி: அம்ருதா , ஜனவரி  2020)