vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, February 26, 2016

ஒருவினோதமானகலாசாரம் [Umberto Eco] -- வைதீஸ்வரன்

ஒரு 
வினோதமான கலாசாரம்
[Umberto Eco]
-----------------------------------------
வைதீஸ்வரன்



    
{ உம்பர்ட்டோ ஈகோவின் 
Bongo  பழங்குடிகளின் 
ஊரைப் பற்றிய ட்டுரை 
என்னை மிகவுமே கவர்ந் 
தது. அதை சற்று மேலும் 
நெருக்கமாகஸ்வாரஸ் யமாக செய்வதற்காக 
ஓரிரு இடங்களில் 
அர்த்தம்  கெட்டுப்போகாமல் 
அதே சமயம் ரஸனைக்கு நெருக்கமாக இணை யான நம் ஊர்  பேச்சுவழக்கை உபயோகித்திருக்கிறேன். அன்பால் செய்த  இந்த ஒட்டுதலை   உம்பர்ட்டோ   மன்னிக்கவேண்டும் }  

**********************

சில வருஷங்களுக்குமுன்பு  எனக்கு svalbard  தீவுகளில் மிக 
ஸ்வாரஸ்யமான அனுபவங்கள்  ஏற்பட்டன. அங்கே உள்ள 
உள்ளூர் விஞ்ஞானிகள் சங்கம் ” போங்கா “  [BONGA] நாட்டின் 
சமூகக் கலாசார  வழக்கங்களை  நேரில் கண்டறிந்து உணர்ந்து
ஆய்வதற்காக என்னை அழைத்தது. அங்கே நான் சில வருஷங்கள்  
தங்குவதற்கும்  ஏற்பாடு செய்திருந்தது..

Bonga நாடு Terra Incognitia; Blest தீவுகள் இவற்றின் இடையில் உள்ள
ஒரு சிறிய பிரதேசம்.  

 Bonga  மக்களின்அன்றாடவாழ்க்கை ஏறக்குறைய நம்முடையதைப்
போலத்தான்.இருந்தாலும் அவர்களிடம் தொன்று தொட்டு ஊறிப்
போன சில சுபாவங்கள் வித்யாசமானவை. 

அவர்கள் பேச்சு முறை சுத்தமாக ஒளிவு மறைவு இல்லாதவை.  
ஒரு துளிகூட கேட்பவனின் ஊகத்திற்கு விட்டுவிடாமல் " விவர
மாகப் பேசுவது”  அவர்களின் வினோதமான வழக்கம்.

 உதாரணமாக நாம் பேசும்போது  நேரடியாக விஷயத்தைப் பேசு
கிறோம் Bonga மக்களோ பேசஆரம்பிப்பதற்குமுன்பு "கவனிக்கவும் 
நான் இப்போது  சில வார்த்தைகளைக்கொண்டு பேசப்போகிறேன் " 
என்று ஆரம்பிப்பார்கள்.!!

நாம் வீடுகளைக் கட்டி அதற்கு இலக்கமிட்டுதெருவிற்கு பெயர் 
வைக்கிறோம். அவர்களோ வீடுகளைக் கட்டி வாசலில் இது வீடு “ 
என்று பெயர்ப்பலகை  எழுதித் தொங்கவிடுவார்கள்.  

அது மட்டுமல்ல...உள்ளே ” இது கதவு.. இது...நாற்காலி..இது 
மேஜை என்று ஒவ்வொன்றுக்கும் பெயரெழுதி தொங்கவிடுவார்
கள் நாம் தப்பித் தவறி  கதவை நாற்காலியாக  புரிந்துகொண்டு
விடுவோமோ என்ற பயத்தில்!!

நீங்கள் நாற்காலியில்அமர்ந்தவுடன் டீக்கோப்பையோடு  ஒருவள் வருவாள். "இவள்தான் பணிப்பெண்  அவள் உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்பாள் . நீங்கள்  உங்களுக்கு வேண்டிய தின்பண்டங்களை அவளிடம் சொல்லவேண்டும்"  என்று 
விவரமான அறிவிப்புடன் பயப்படுத்துவார்கள்!!

 அவர்கள் நாடகங்களிலும்  இதே கூத்துதான். ஒவ்வொரு 
நடிகனும் மேடைக்கு வந்தவுடன் அவனுடைய  அப்பா பெயர்
தன் பெயர்,  வீட்டு விலாஸம் குலம் கோத்திரம் எல்லாவற்றை
யும் அறிவிக்க வேண்டும்.  முடித்தபிறகு  தன் பாத்திரத்தின் 
பெயரைக் குறிப்பிடுவான்.

பிறகு "இப்போது கொஞ்சம்  மௌனம்" என்பான். சற்று  இடை
வெளிக்குப் பிறகு அடுத்த நடிகன்  அறிவிப்பை ஆரம்பிப்
பான்.!!!!!!!!!!!

இதேபோல் ஹாஸ்யக்காட்சிகளையும் தீர விவரித்துவிட்டுத்
தான் ஆரம்பிப்பார்கள் கௌண்டமணி- செந்தில்  ஜோடிகளைப்
போல் இரண்டுபேர் வந்து "வணக்கம் " என்று கூறிவிட்டு  
"இப்போது சிரிப்புக் காட்சி.. நீங்கள் இப்போது சிரிக்கவேண்
டும் " என்று அறிவித்துவிட்டு தங்கள் கோமாளித்தனத்தைத் 
தொடருவார்கள்.  

நாடகங்களுக்கு இடையில் விளம்பரங்கள்  வரும். அதையும் 
பார்வையாளர் புரிந்துகொள்வதை முந்திக்கொண்டு "இப்போது விளம்பரங்கள்” என்று  உரத்துக் கூவுவார்கள்.

 இதைவிட  பழங்கால bongo  மக்களின் கலாசாரத்தில் கரகோ
ஷம் என்பது  ஒரு முக்கியமான  உடல் மொழி.   நாடகங்களில் 
நல்ல காட்சிக்கும் சிறந்த  நடிகருக்கும் நிச்சயமாக  கரகோஷங்
கள் உண்டு. 

ஆனால்  காட்சிகளின் தரத்திற்கு ஏற்ப கரகோஷங்களின்  நீளம்  
மாறுபடும். சில நல்ல காட்சிகள் முடிந்தவுடன் கரகோஷங்கள்  
ஒலித்து அடங்கி ஓய்வதற்குள் உள்ளே நடிகர்கள்  வீட்டுக்குப்
போய் சாப்பிட்டு விட்டு வந்துவிடலாம்.!!!!!!!!

 யுக்தியுள்ள சில தயாரிப்பாளர்கள்  கரகோஷத்திற்கு  கைக்கூலி
ளையும் ஏற்பாடு செய்வதுண்டு. சில வணிக ஊடகத் தயாரிப்
பாளர்கள் விதவிதமான கரகோஷங்களை காட்சியிடையில் 
பயன்படுத்துவதற்காக ஆர்வலர்களைத் தேர்வு செய்து கரகோ
ஷப் பயிற்சிகளும் கொடுப்பதுண்டாம்.
 

இந்த கரகோஷக் குழுவில் பங்கெடுத்துக் கொள்வதில் bonga  
மக்களுக்கு அளவுகடந்த ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது.  கூட்
டங்கூட்டமாக அவர்கள்  தொலை காட்சி நிறுவனத்தின் வாச
லில் நின்றுகொண்டு கரகோஷிக்கும்  வாய்ப்புக்காக  கால்கடுக்க 
நின்று கொண்டிருப்பார்கள்!..

 ஊடக இயக்குனர்  "கரகோஷிப்பாளர்களை " வட்டமாக உட்கார
வைத்து இப்போ பயங்கரமான தமாஷ் காட்சி முடிந்தது........
எங்கே உங்கள் கையொலி வரிசையைக் காட்டுங்கள் பார்க்க
லாம் " என்று ஒத்திகை பார்ப்பார்.. அந்த ஒலியைக் கூட்டவும் 
ஓசையை ஒழுங்கு படுத்தவும் சில  ஆலோசனைகளை வழங்கு
வார்.

 மாதிரிக்காக  கூட்டத்தில்  ஒருவனைப் பார்த்து " அய்யா... நீங்கள் 
என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ?“ என்று கேட்டுவிட்டு மைக்கை அவரிடம் கொடுப்பார். அந்த நேயர் எழுந்திருந்து  “நானு கூடுவா
ஞ்சேரி ஸ்கூ லுலெ  மதிய உணவுக் கூடத்துக்கு கோழிமுட்டை  
சப்ளை பண்றேங்க.. என்று பதிலளிப்பார். 

உடனே கூட்டத்திலிருந்து கரகோஷம் காதைப் பிளக்கும்! 

ஊடக இயக்குனர்  “ சபாஷ் " என்று எல்லோரையும் பாராட்டிக் 
கைதட்டுவார்.


 வணிக ஊடக விளம்பரக் காட்சிகளில் விற்பனயாளர்  “ எனது 
இனிய நண்பர்களே!  உங்கள் சுகமான காலைப் போக்கிற்காக   
இதோ எங்கள் விசேஷத் தயாரிப்பு .. சுலபசஞ்சீவினி  அற்புத
மான  மலச்சிக்கல் மாத் திரை " என்று கூறி முடிப்பார். உடனே   
எங்கிருந்தோ ஒரு  மூலை யிலிருந்து கரகோஷம்  இடி இடிக்கும்.

  இது சில  சமயம் ஸ்டுடியோவில் வெறும் ஒத்திகையாகக் கூட
 இருக்கலாம்.. 

 Bonga  மக்களுக்கு  கரகோஷங்களைப் பற்றி ஒரு தீர்மானமான கலாசாரப் பற்று இருந்தது. அவர்கள் நினைக்கிறார்கள்..  மேடை
யில் நடிப்பது என்பது ஒரு போலிக் கற்பனைதான்  ஆனால் கைத் 
தட்டல் என்பது பார்வையாளனின் உண்மையான  உயிரோட்ட
மான உடல் மொழி. கைத் தட்டல்களைப் பொறுத்தவரையில் 
சம்பவங்கள் இரண்டாம்பட்சம்தான்... கைத்தட்டுவதால் அங்கே ஒருவனுடைய இருப்பு நிரூபணமாகிறது.

 இந்த மாதிரி அபிப்ராயங்களால் அவர்கள் இழவுவீட்டில்கூட 
கைத்தட்டுவதற்கு தயங்குவதில்லை. இறந்தவன் சடலத்தை 
சுற்றி நின்று கைத்தட்டுவதால் இறந்தவனுக்கும்  தங்களுக்கு 
உள்ள வித்யாசத்தை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவதின் 
அடையாளமாக அதை எண்ணுகிறார்கள். !!!!.

ஒரு நாள் நான் ஒரு bonga  வீட்டின் வாசல் திண்ணையில் 
உட்கார்ந்திருந்தேன். அப்போது  அங்கே ஒருவன் ஓடிவந்து 
வீட்டு சொந்தக்காரனி டம்  பரபரப்புடன் கூறினான்.. அய்யா...  
உங்க பாட்டிஅடுத்த தெருவுலே லாரிலெ அடி பட்டு செத்துப் போயிட்டாங்கய்யா!!   “”

கேட்டவுடன் என்கூட இருந்தவர்கள் திண்ணையிலிருந்து 
சடாரென்று  குதித்து  ஆசை தீர  கைத்தட்டித் தீர்த்துவிட்டார்
கள்!

ஆனாலும் bonga மக்கள் அவ்வளவு ஒன்றும் பின்தங்கியவர்க
ளல்ல என்று நினைக்கிறேன்.

அவர்கள்  சீக்கிரமே உலகத்தை ஆளப்போவதாக அடிக்கடி 
மேடையில் வீரமாகப் பேசி கைத்தட்டிக்கொள்ளுகிறார்கள்.

 ஒரு சமயம் இரண்டு அரசியல்வாதிகள்  மேடையில் தங்கள் கொள்கைகளைப் பற்றி காரசாரமாக நீண்ட நேரம் விவாதித்
துக்கொண்டிருந்தார்கள்.  

ஒருவழியாய் விவாதம் முடிந்தவுடன்   இருவரில் ஒருவர் 
இப்போது விளம்பரக் காட்சி தொடங்கும் " என்று அறிவித்
தார்..

அப்போது வானை பிளந்த கரகோஷம்  மிகவும் விவரமுள்ள
வர்களுக்கு  அர்த்தமுள்ளதாக ஒலித்திருக்கும்!!

இவர்கள் கலாசார வினோதங்கள் நடைமுறைக்கு  ஒத்து
வராத விபரீதமாக இருக்கிறதே என்ற  நினைப்புடன்  நடந்த
வாறே ஒரு சிற்றுண்டிசாலைக்கு சென்றேன்.
  
அது ஒரு நவீனமான உணவகம்.

 உட்கார்ந்திருந்தபோது  பணியாள் ஒருவன் என்னிடம் 
வந்து மூன்று வறுத்த முள்ளங்கி இலைகளை மேஜையில் 
வைத்தான்..

 “அய்யா... இது எங்கள்  உணவுத்தயாரிப்புகளில் மிகப் புதுமை
யான   அயிட்டம்.. விசேஷ உரம் போட்டு எங்கள் தோட்டத்தில் 
பயிர் செய்த இயற்கைத் தாவரம்.  .இதை பலநாள் வெய்யிலில் 
உலர்த்தி பதமாக நறுக்கி கடலுப்பை பொடியாக்கி தூளை 
லேசாகப்  பரவலாகத் தூவி இலைகளை வினிகரில் முக்கி 
இரண்டுநாள் நன்றாக ஊறவைத்து முறுவலாக வறுத்துப் பின் 
ஆலிவ் எண்ணை தெளித்து  வாசனைக்காகத் எங்கள் விசேஷ 
ரக்குகளை அரைத்து அதில்முக்கி எடுத்தது .சாப்பிட்டுப் பாருங்கள் "என்றான்.!!!

 சாப்பிடுவதற்கு  முன்பே  என்  பசியை  ஆற்றி விட்டான்!


****************

இது புகழ் பெற்ற இத்தாலிய எழுத்தாளர்  Umberto 
Ecoவின் ஒரு  கட்டுரை  ஓரளவு சரியான  மொழிபெயர்ப்பு.

இன்றைய நமது அரசியல் கூட்டங்களையும் 
மற்றும் தொலைக்காட்சி ஊடக விளம்பர நிகழ்ச்சி
களயும் பார்க்கும் போது நாமும்  bongo  மக்களும்  
கரகோஷ கலாசார விஷயத்தில் மிகவும்  
நெருக்கமாக இருக்கிறோம்  என்று தோன்றுகிறது

      Reference  How  to  travel with a salmon
and  other  essays    UMBERTO  ECO

Publisher  SEEKER and  Warburg   London
Translayed  from Italian  William Weaver

Homebush Library s 0142020