தவம்
- வைதீஸ்வரன் -
சொல்லின் சூழ்ச்சியிலே
சோர்வடைந்து நான் விழித்தேன்
உள்ளத்துள் பேரொளியை
உற்று நோக்க நான் விழைந்தேன்
நினைவின் விளிம்பினிலே
நெடுங்காலம் குழம்பி நின்றேன்
நிலவைக் காணாத
இருள்வானைப் போல் மருண்டேன்...
உணர்வின் தூரலிலே
உனைத் தேடித் தவித்திருந்தேன்..
உலகில் வழிதொலைந்த
குருடரைப் போல் நான் உழன்றேன்
மனதின் ஆழ்பரப்பில்
மறைந்துநிற்கும் பேரொளியே
எனையே நான் இழந்தேன்
எதிரே நீ இருந்தாய்!!
____________________________________________________________________________________
21- 12 1961

No comments:
Post a Comment