ஒரு விண்ணப்பம்
- வைதீஸ்வரன்-
தீயென மின்னல் தோன்றிக்
கணத்தில் மறைந்து போகிறது இருட்டுக்குள்.
எனைக் கடந்து செல்லும் வேளையில்
உன் சிரிப்பும் அப்படித் தான்….
எனக்கு மட்டும் மழை பெய்ய வேண்டுமென்று
ஏங்கும் மாலைகளில்
எல்லோருக்கும் பெய்கிறது மழை.
சுயநலமற்ற காதலுக்கு
நான் இன்னும் அருகதையற்றவன்..
அது வரை அன்பே…நீ என்னை
அனாதையாக்கி விடாதே!..
______________________________________________________