vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Friday, January 3, 2014


விஸ்வாம்பரம்

_வைதீஸ்வரன்












    

மாட்டுவண்டியில்  போய்க்கொண்டிருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை.  அப்பா வழக்கம் போல்  என்னையும் தோட்டத்திற்குக்  கூட்டிக்கொண்டு போய்க்கொண்டி ருந்தார்.   பள்ளிச் சிறுவன் மாதிரி  உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்தது சிவப்புக் காளை.  அந்த மாதிரி சமயங்களில் எனக்குக் கதை கேட்க  ஆவலாக இருக்கும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கதையை  அவரிடம்  கேட்பேன்.  இந்தமுறை அவருடையஅக்கா  கண்ணம்மாள்  வாழ்க்கையில்  நடந்த சம்பவங்கள்  அவருக்குஞாபகம் வந்தது.    தன் சின்ன  வயது நினைவுகளை  மெல்ல சொல்ல ஆரம்பித்தார்.......

.இதெல்லாம் சொன்னா  நீ இப்ப நம்பமாட்டே! என்று சொல்லிக் கொண்டே கதையை ஆரம்பித்தார்!  எனக்கு  கதை கேட்கும் ஸ்வாரஸ்யம்  கூடி விட்டது..
                    ***********
கண்ணம்மமா  நல்ல  இடத்தில் வாக்கப்பட்டிருந்தாள்  ஆனால்அவ ளுக்கு கல்யாணமான போது அது அப்படி ஒரு நல்ல இடமாக அது இருந்திருக் காது.அவளைக்கல் யாணம்  செய்துகொடுத்த போது  அத் தானுக்கு [அத்தை புருஷன்] உருப்படியான வேலையில்லை. ந்தக் காலத்தில் பெண் ணைக்  கொடுக்கும்போது மாப்பிள்ளையின்  உத் யோகத்தைப்  பற்றி  பெரிதாக  யோசிக்க மாட்டார்கள்.  ஜீவனம் எப்படி யாவது  நடக்கும் என்ற  நம்பிக்கை..

அவர் பெயர்  விஸ்வநாதன்.  நல்ல திடகாத்திரராக  இருப்பார் தின மும்  காலை எழுந்தவுடன்  நூறு பஸ்கி எடுப்பார்.. ஊரில் யாராவது ஏதாவது பந்தயம் வைத்தால் ஜெயித்துக் கொண்டு வந்து விடுவார். கிணற்றில்   அண்டை வீட்டார்கள் குடத்தைப் போட்டு விட்டு  எடுப் பதற்கு முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தால் அவர்கள் விஸ்வ நாதனைத் தான்  கூப்பிடுவார்கள். “குடத்தை எடுத்தா  என்ன  காசு தருவேஎன்று  பேசி முடிவு செய்துகொண்டு  தடாலென்று  கிணற் றுக் குள்  குதித்து விடுவார். நாலைந்து  நிமிசங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு அவரால் தண்ணீருக்குள் இருக்க  முடியும்.  கடைசியில் குடத்தோடு  தான் வெளியே வருவார்.   

அதே  போல்  அண்டை வீடுகளின் கொல்லைப் புறத்தில்  தென்னை மரமேறி  தேங்காய்கள்  பறிப்பதுஇவர் வேலை தான் .  யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால்  அவரை வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போய் .காட்டுவது.....  யாராவது  மரணம் அடைந்து விட்டால்  அவர்கள் வீட்டுக்குப்  போய் எல்லா  உதவிகளையும்  செய்து கொடுப்பது  இப்படி தினமும் ஏகப்பட்ட  வேலை அவருக்கு... ஒரு வகை யில் அந்தத் தெரு வுக்கே  விஸ்வநாதன் நிரந்தர வேலையில் லாமல்  இருப்பது ஒரு  பெரிய சௌகரியமென்று கூட சொல்லாம்யாருக் காவது ஏதாவது பிரச்னை என்றால்  “ விஸ்வநாதனைக் கூப்பிடு” என்பார் கள். ஆனால்  அப்போது  ஊருக்குள் நடந்த  ஒரு சம்பவம் அவருக்கு ஒரு உத்யோகத்தையே   தந்து விட்டது..  

  1910ல்   மின்சாரம்  தெருவுக்குவராத  காலம்.   தெருவோரங்களில்  அங்கங்கே   பெரிய சிம்ணி  விளக்குக் கம்பத்தை  நட்டு வைத்திருப்பார்கள். விளக்கு டைமண்ட் வடிவத்திலிருக்கும்.  பெரிய திரி  இருக்கும்.  ஏணி வைத்து  ஏறி அதை தினமும் துடைத்து திரியேற்றி பராமரிப்பதற் கும் மண்ணெண்ணை  நிரப்பிமாலையில் இருட்டியவுடன்  விளக்கேற்றுவதற்கும்  முனிஸிபாலிடியில்   ஆட்கள் வைத்திருப்பார்கள்.  அவன் பெரிய  மண் ணெண்ணை  டின்னை  வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருவான்.

 ஒரு சமயம்  ஊருக்குள்  சில  விளக்குகள் சீக்கிரமே அணைந்து போய்க் கொண்டிருந்தது.  மாலை  இருட்டியவுடன்  தெருக்களில்  வெளியே நடப்பதற்கே பயமாக இருந்தது.  ஆனால் பணியாள் தினமும் எண்ணை ஊற்றி விளக்கேற்றிக் கொண்டு தான் இருந்தான். இரவில் எல்லோரும் விஸ்வநாதனைத் தான் துணைக்கு அழைத்தார்கள். விஸ்வநாத னுக்கு விளக்குகள் ஏன்  எரிவதில்லை என்று கண்டு பிடிக்க வேண்டு மென்று தோன்றியது. 

  ஒரு மாலை   அந்தப் பணியாள்  வந்து வேலையை முடித்து விட்டுப் போன பின் விளக்குக்குப் பின்புறம்  இருந்த வேலாமரத்துக்குப் பின்னால்  ஒளிந்து கொண்டான்.. சிறிது நேரத்தில்  கருப்பாக வாட்ட சாட்டமாக  ஒரு வன்  சைக்கிளில்  வந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு விளக்கடியில் நின்றான்  ஒரு ரப்பர் குழாயும்  தகர குவளையும் கொண்டு வந்திருந் தான்.  எப்படியோ சைக்கிளின் மேல் நின்று கொண்டு சிம்ணி விளக்கின் குப்பியைத் திறந்து  குழாயைப் பொருத்தி ஏதோ சூட்சமத்தில் அதிலிருந்து மண்ணெண்ணையை  குவளையில் இறக்கிக் கொண்டு  கீழே இறங்கினான் .மறைந்திருந்த   விஸ்வநாதன் தாவிப் போய் அவனை குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொண் டான்  இடுப்பிலிருந்த   துண்டை அவிழ்த்து  அவனை விளக் குக் கம்பத்தோடு  கட்டி வைத்து   நாலு அறைகள் விட்டான்.  “எல்லா ரும் வாங்க “ன்னு ஓவென்று கத்தி ஊரைக்கூட்டினான்.  எல் லோரும்  அந்த எண்ணைத் திருடனை பார்க்க கூடிவிட்டார் கள்.  விஸ்வநாத னின்  ஸாக சத்தைக்கண்டு. வாயடைத்துப்போனார்கள். வியந்து   பாராட்டினார் கள்.  போலீஸ்ஸ்டேஷனுக்கு சொல்லி அனுப்பி னார்கள்.  போலீஸ் இன்ஸ்பெக்டர்  ஆஷ்துரை வந்து பார்த்தார். Brave fellow Brave  fell ow  Viswanathan ..”   என்று  அவன்  முதுகைத் தட்டி  பாராட்டினார்.

  “நீ என்ன தொழில் செய்யறே?” என்று கேட்டார்.  விஸ்வ நாதன்  தலையை  இப்படியும் அப்படியுமாக  ஆட்டினான்.

“ நீ  ஏன் போலீஸுலெ  சேரக்கூடாது? “  என்று வாயிலிருந்து சுருட்டை எடுத்து விட்டு ஆஷ் கேட்டார். கூடியிருந்தவர்கள்  மிகுந்த உற்சாகத் துடன்  அதை வரவேற்றார்கள்.

“ விஸ்வம்...போலீஸுலே  சேந்துக்கோ...போலீஸுலே  சேந்துக்கோ! “ என்று ஆரவாரம் செய்தார்கள்.

 அடுத்த நாளிலிலிருந்து  விஸ்வநாதன் என்கிற விஸ்வாம் பரம்  போலிஸ் கான்ஸ்டேபிளாக  மாறிவிட்டான்  விஸ்வாம்பரம் அவன் தாத்தா வைத்த பெயர்.. அக்காவுக்குக் புருஷனைக்  கண்டு அத்தனை பெருமிதம்...ஆசை அன்பு எல்லாம் வந்துவிட்டது. 

அவர்களுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது. தினந் தோறும்  விஸ்வ நாதன்  பழுப்புக் காக்கி நிறத்தில்  பெரிய பொத்தான்கள் வைத்த சட்டையும்  முழங்கால் நீளத்துக்கு அரை டிராயரும் தலையில்   பக்க வாட்டில் குதிரைவால்  தொங்கிய உயரமான ஒரு தொப்பியை யும்  போட்டுக் கொண்டு   கையில்  நீளத் தடியுடன் அவன் வேலைக்கு போகிற அழகை கண்ணம்மா  மட்டுமல்ல  அந்த்த் தெருவே பார்த்து  மகிழ்வார்கள்.

விஸ்வநாதன் வேலையில் ரொம்ப சுறுசுறுப்பாக இருந்தான்.  துரை அவனை மெச்சிக் கொண்டே இருந்தார்.  ஊருக்குள்  அவன் அடிக்கடி ராத்திரிகளில் கூட  “பாரா உஷார்..” என்று கத்திக்கொண்டு போவதுண்டு.
  அப்போது  பக்கத்து  ஊர்களில் அடிக்கடி திருட்டு நடப்பது அதிகமாகிக் கொண்டு வந்தது.  ஊரைச் சுற்றி சின்ன   குன்றுகள்  உண்டு. அங்கே  கூளாங்காளர்கள் என்கிற கள்ளக் கூட்டம்  குன்றுகளில்   பதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது..

அவர்கள்  மாதத்திலே ஏதாவது  ஒரு அம்மாவாசையில்  ஏதாவது ஊருக்குள் புகுந்து   ஏற்கனவே  நோட்டம் விட்ட சில வீட்டுக்குள் கன்னம் வைத்துக் கொள்ளை அடித்து விடுவார்கள்.  ஆனால் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் துன்புறுத்த மாட்டார்கள். மற்றபடி யாராவது  விழித்துக் கொண்டு அவர்களை துரத்தி ஓடி வந்தால் ஒரு விதமான மூலிகைப்பொடி களை  அவர்கள் முகத்தில் வீசிவிட்டு ஓடி விடுவார்கள்..  விரட்டி வந்தவர்கள் மூர்ச்சையாகி விடுவார்கள்.

ஆஷ் துரைக்கு இந்தக் கும்பலை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்துவிட்டது.  அவர்  விஸ்வநாதனை அழைத்தார்  “”நீ ரொம்பதுணிச்சல் காரன்னு......எனக்குத் தெரியும்..    இந்தக் கள்ளப் பசங்களை ஒன்னால  கண்டுபுடிச்சி கொண்டாற முடியாதாஎன்னஎன்னா.... சொல்றேஎன்று கேட்டான்.

  விஸ்வநாதன்  கேட்டுக்கொண்டிருந்தான்.

 துரை மேலும்சொன்னான்...நான் ஒரு யோசனை சொல்றேன்  நான் உனக்கு  குதிரை சவாரி பண்றதுக்கு  கத்துக் கொடுக்கறேன்  ஒரு வாரத் துலே நீ கத்துக்குவே!  குதிரை யிலே ஏறி   பக்கத் துல கொல்லி மலைக்குப் போய்  ரோந்து பாத்துகிட்டு வா.  அங்கே தான் அவங்க குடும்பத் தோட  இருக்கறதா  சொல்றாங்க.  அங்கே  அவங்க இருக்கற இடத்தை. கண்டு புடிச்சுட்டா .அப்பறம் நம்ப கும்பலா போயி அவங்களை வளைச்சிப்போட்டுடலாம்... சரியா?  அதிகப்படியா  பேட்டா எல்லாம் உண்டு  சரியா?” என்றார்.

 சற்றுத் தயக்கமாக இருந்தாலும் விஸ்வநாத னுக்கு   இந்த   சாகஸ மான சவாலை ஏற்றுக் கொள்ள உற்சாகமாக இருந்தது.

ஒரு வாரத்தில் அவன்  தயாராகி விட்டான்  கண்ணம்மாவிடம்  துரை அவனுக்குக் கொடுத்த  அபாயமான  வேலையைப் பற்றி சொன்ன போது அவள் அழுது விட்டாள்.

 “வேண்டாங்க... அந்தக் கள்ளப் பசங்க கண்ணுலே  பட்டுட்டா ஒங்களைக் கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுடுவாங்க...

 விஸ்வநாதன் அவளைக்கட்டிக் கொண்டு கண்ணீரைத் துடைத் தான்...” என்னைப் பத்தி ஒனக்கு தெரியாதா? .நான்  போன மாதிரியே  வருவேன் பயப்படாதே! “ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

  தினமும்  ரோந்து போய் அவன் திரும்பி வந்ததும் ஆஷ் துரை  ஏதாவது மனித நடமாட்டம் ஆடு மாடு  பேச்சுக் குரல்  சமைக் கிற  வாடை புகை நெருப்பு  இப்படி ஏதாவது   தென்படுகிறதா என்று  கேட்டுக்கொண்டே இருந்தார்.  விஸ்வ நாதன் இன்னும் சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்றான்.  அவனுக்கு இந்த  மலைப் பக்கம் ரோந்து போவதில் நாளுக்கு நாள்  ஆர்வம்  அதிகமாக இருப்பதை  ஆஷ் துரை கவனித் தார். மலைக் குப்  போக  சீக்கிரமே      வந்து விடுவான்.  புறப்பட்டுப் போவ தில் அவசரமும் ஆர்வமும்  தெரிந்தது.   அவன் கடமையில் கருத்தாக இருப்பதைக் கண்டு துரை உள்ளூர ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். .

 ஆனால் நாளுக்கு நாள்  அவன்  ரோந்து  போய் விட்டு  வெகு நேரம் கழித்துத் தான் திரும்பி வந்து கொண்டிருந்தான்.  வீட்டில் கண்ண ம்மா அவனுக்காக  வெகு நேரம்  காத்திருக்க வேண்டியிருந்தது. சில நாட்களில் அவன்  நள்ளிரவில்கூட வருவதுண்டு.  கண்ணம்மா  ரொம்பக் கவலைப்பட்டாள் நாளுக்கு நாள்  அவனிடம் ஏதோமாற்றம்  தெரிந்தது.

அவன் வந்ததும்  அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு சாப்பிடச் சொல்லுவாள்  அவன்  “வேண்டாம்”  என்று  ஒருவார்த்தையில் பதில் சொல்லி விட்டு சுவற்றில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து விடுவான்.

 “என்னாங்க...உடம்பு சரியா இல்லையா?  தலை வலிக் கிறதா?  டூட்டி லே ஏதாவது ஆயிடுத்தா?”   என்று பரிவுடன்  தோளைத் தொட் டுக்கேட்பாள். 

விஸ்வநாதன் அதைப் பொருட்படுத்தாமல் அவளை மெல்ல விலக்கி விட்டு  ஏதோ  சில அட்சரங்களை முனகு வான்.  கண்கள் மேலே சொருக  சுவற்று வெளியைப் பார்த்த வாறு உட்கார்ந்திருப்பான். அவள் அழுகை விசும்பலாகி  அவன் காலடி யிலேயே  படுத்துக் கொண்டு  தூங்கி விடுவாள்.

  விழித்துப் பார்க்கும்போது அவன் அங்கே  இருக்க மாட் டான். கிணற் றடியில்  ஏதோ சில இலைகளைப் பறித்துத் தின்று கொண்டி ருப்பான்.. திசை மூலைகளைப்  பார்த்துப் பார்த்து  கைகளை உயர்த்தி யவாறு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பான். எதற்கோ சிரிப்பான்.

கண்ணம்மாவுக்கு  நாளுக்கு நாள்  இவனுடைய வினோதமான நடத்தையை பார்க்கப் பார்க்க  பயமாக இருந்தது.  அவள்  போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்  ஆஷ் துரையைப்  பார்த்து விஷயத்தை சொன்னாள். 

அவரும் இவன்  விப ரீத நடத்தையை கொஞ்ச நாட்களாக   கவனித்து வருவதாகவும்   அதன் காரணத் தைக் கண்டு பிடிக்க ஏற்பாடு செய்வதா கவும்  சொன் னான்  அடுத்த நாள்  துரை  அவ னைக்கூப்பிட்டு  “நீ இனிமே  கொல்லிமலைப் பக்கம்  ரோந்து பாக்க  போக வேண்டாம்“ என்று சொன்னார்.

 விஸ்வநாதன்  அவர் சொலவதைக் கேட்டு சிறிது நேரம் மௌனமாக நின்றான். பிறகு திடீரென்று பலமாக  சிரித்து விட்டு போலீஸ் தொப்பி யைக் கழற்றிவைத்து விட்டு  வெளியே நடந்து விட்டான்.

கண்ணம்மாவுக்கு இந்த செய்தி கிடைத்தது.  “என்னங்க?......வேலையை விட்டுட்டேளா?  என்ன  ஆச்சு  உங்களுக்கு?  ஏன் இப்படி செஞ் சேள்ஏதாவது சொல்லுங்கோ?  என்று  அவன் சட்டையை பிடித்து உலுக்கி  தேம்பி அழுதாள்.

 விஸ்வநாதன்  அவளைத் தூக்கி நிறுத்தி  மிகுந்த பரிவுடன் அவளைப் பார்த்தான். அவளை  மெல்லக் கூட்டிக் கொண்டு கிணற்றுப்  பக்கம் போய் கைகளை உயர்த்தி நீட்டி  “ஹாஜா முல்லா..... ஹாஜா.. முல்லா...”  என்று சொன்னான்.  புரியாமல் அவள் அவன் கை காட்டிய  திசையைப் பார்த் தாள்...  அங்கே கொல்லிமலை தெரிந்தது!

நாளுக்கு நாள்  விஸ்வநாதன் பரதேசியைப்போலவே  மாறி விட்டான் எப்போதாவது ஒரு நாள்  இரவிலோ பகலிலோ  குளிப்பான். எங்கே யாவது போவான் வருவான். அவனுக்கு சோர்வென்பதே   இல்லாமல் இருந் ததுபாரபட்சமில்லாமல் இலை  தழை  சாதம்  எதை வேண்டு மானாலும் யார் கொடுத்தாலும் சாப்பிடு வான் வீட்டில்  சாமி படங் களுக்கு  முதுகுப் புறமாக திரும்பி மண்டியிட்டுக் கொண்டு வெள்ளை சுவரைப்  பார்த்து வெகுநேரம் உட்கார்ந்து கொண்டிருப்பான். அவன் உதடுகள் திடீரென்று தன்னிச்சையாக  வேகமாக நடுங்கும் வாயி லிருந்து வெளிப்படும் வார்த் தைகளில் எந்த மொழியடையாள மும்  தொனிக்காது. ஆனால் அது மின்ன லைகளைப்போல வெளியில்   அதிர்வுகளை  ஏற்படுத்தும்.

கண்ணம்மா  பயத்திலும்  வேதனையிலும்  நொந்து மெலிந்து தூக்கமற்றுப் போனாள். அண்டை வீடுகளில்   இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு வருத் தப்பட்டார்கள்.  விஸ்வம் கொல்லிமலைக்குப் போன போது ஏதோ தாந்த்ரீகமாக என்னமோ நேர்ந்திருக்கிறது என்று மட்டும் நிச்சய மாக  தெரிந்தது  . ஒரு பெரியவர் சொன்னார்  ...ஒரு வேளை விஸ்வம்  யாராவது  ஒரு பெரிய சித்தரை  சந்தித்து தீட்சை பெற்றி ருக் கலாம்.. நல்ல ஆத்மாக்களுக்குத் தான் இந்த  அனுபவம் வசப்படும் ” என்றார்.

அவர் பெரிய ஆத்மாவாக  இருப்பதைப்பற்றி  கண்ம்மாளுக்கு வருத்தமில்லை. ஆனால் அவன் உத்யோகத்துக்குப் போகாத தால்  வீட்டில் அன்றாடச் செலவுக்கு  காசு இல்லை. அரிசி வாங்கக் காசு இல்லை குழந்தைக்கு  பால் வேண்டும்.. புருஷனிடம் கேட்பதற்கே பயமாக இருந்தது.   

ஒரு நாள் விசு அத்தான்  தன் போக்குல  வீட்டை விட்டுக் கெளம்பிட் டார் அப்போ அங்கே வாசலில்  நின்று கொண்டிருந்த  என்னைக் கூப்பிட்டு கண்ணம்மா அக்கா  “ சுந்தரம்...சுந்தரம்...[கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பாவின் பெயர்]. ... .நீ  ஓடிப்போய் அத்தான் கிட்ட வீட்டுச்செலவுக்கு பணமில்லே  என்ன செய்யறதுன்னு அக்கா கேக்கறான்னு “”  கேளு .அவர் என்ன் சொல்றார் பார்க்கலாம். நான் இங்கெயெ நிக்கறேன், என்று என்னை அனுப்பினாள்  எனக்கு அப்போ பத்து வயது.

 நான்  ஓடிப்போய்  “ அத்தான்..அத்தான்..” என்றேன்.

அப்போது யாரோ ஒருவர் குதிரைவண்டியில் வந்து இறங்கி அத்தானைக் கூட்டிக் கொண்டு போவதற் காக  வந்து  இறங்கி னார்  வண்டியி லேறப்போன அத்தான் திரும்பி என்னைப் பார்த்து  அன்புடன்  தலையைத் தடவிஎன்ன  கோந்தை ,... ” என்றார்.

வீட்டுச் செலவுக்கு பணமில்லையாம்......அக்கா  பணம் கேக்கறா......

விஸ்வம்  கண்ணை  உருட்டி  மேலே பார்த்தார்.  பிறகு வண்டியில் ஏறிக் கொண்டு ஏதோ  கண்ணை மூடிக்கொண்டு ஏதோ சொல்லி விட்டு வண்டி யின் பக்க வாட்டைக் கையில் அடித்தார்   பொல பொலவென்று கத்தை கத்தையாக பணம் தரையில் கொட்டியது.  
   
போடா..”  என்றார்  வண்டிக்காரனைப் பார்த்து.   “இதுக்கு மேலே  கேக்க வேண்டாம்னு சொல்லு” என்று  சொல்லி தலையைத்  திருப்பிக் கொண்டார்.   வண்டி சந்து திரும்பி மறைந்தது.

அடுத்த சில மாதங்களில்  இரண்டு மூன்று முறை நள்ளிரவில் அவர் எழுந்து ஓடியதை  கண்ணம்மா  பார்த்திருக்கிறாள். அந்த மாதிரி சமயங் களில்  அவர்  ஏதோ வேறு உலகத்தை சேர்ந்தவராக  ஆவேசம் வந்தது போல் நடந்து கொண்டதால் அக்காவால்  அவரைக் கேள்வி கேட்கவோ தடுத்து நிறுத்தவோ  முடியவில்லை. ஆனால்  மறு நாள் விஷயம் தெரிந்துவிடும்.

  ஊரில்  யாராவது  ஒரு  வீட்டிலிருந்து  ஒரு தாயோ தகப்பனோ வருவார் கள். கைநிறைய  பழங்கள் புஷ்பங்கள்  பணம் எல்லாம்  எடுத்துக்கொண்டு வந்து  கண்ணம்மா அக்காவிடம் கொடுப்பார்கள்.

 “அம்மா...உங்க  புருஷன்  ஒரு  சித்த புருஷனம்மா...  எங் குழந்தையை ராத்திரி பாம்பு கடிச்சு  வாயிலே  நுரை வழிய செத்துப்போக இருந்தது. நடு ராத்திரிலே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போக வழியில்லாம  “ விஸ்வாம் பரம்  விஸ்வாம்பரம்னு   கூவினோம்.  திடீர்னு  கண்ணு முன்னே வந்து நின்னாரு.  கொழந்தையை  கையில் எடுத்துகிட்டு உடம்பு முழுக்க  ஊதினார்  மூன்று நான்கு தடவை ஊதி னார்.   நீலம்  பாரிச்சிருந்த கொழந்தை சில நிமிசத்துலெ மறுப டியும்  நல்ல  ரத்தம் ஊறி  நிதான மாகி   கண்ணை முழிச்சி  அவரைப் பாத்து சிரிச்சிது.அவரு சந்தோ ஷமா  எல்லார் மேல யும் விபூதி தெளிச்சுட்டு மாயமாய்ட் டார்.” என்பார்கள்.

ஆனால் விஸ்வநாதன்  வீட்டுக்கு  வரும்போது   அவர் செய்த லீலை கள்  எதுவும் அவருக்கு நினைவிருப்பதாகவே  நடந்து கொள்ள மாட்டார்.

கண்ணம்மாவுக்கு  அவரைப் பார்த்தாலெ  அன்னியமாக பயமாக  ஒரு விதத்தில் வெறுப்பாகக் கூட இருந்தது. அவள்  மூலையிலுட்கார்ந் து தனக் குள் மறுகிக் கொண்டாள்.

இவர் ஏன் சாதாரணமாக  எல்லோரையும் போல் ஒரு மனுஷ னாக  எனக்கு வாய்த்திருக்கக் கூடாதுகொஞ்சிக் குலாவி கோபித்து குழந்தையுடன் விளையாடி ஊர் உறவுகளுடன் சகஜமாக பழகற புருஷனாக  இவர் இருந்தால் என் வாழ்க்கை  எவ்வளவு நிம்மதியா சந்தோஷமா   இருந்திருக்கும்.. இது  எனக்கு  கடவுள் கொடுத்த சாபமாவரமா?    இப்படி ஒரு மகா சித்தன் புருஷ னாக  வாய்ப்பதற்கு நான்  பூர்வ ஜன்மப் புண்ணியம்  செய்திருக்க வேண்டு மென்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். பொறாமை  கூடப் படறாங்க...... நான் படற வேதனை   யாருக்குத் தெரியும்? !!

இன்று கண்ணம்மா  அக்காவுக்கு  ஏதோ ஆத்திரமும் துணிச்சலும் வந்தது.. அவளுக்கு   தன் கணவனின்  ’சித்தர்  பிம்பத்தைக் கலைத்துப் போடவேண் டுமென்று  ஒரு  வெறி   பொங்கி எழுந்தது.

 அப்போது   விஸ்வநாதன்  படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.அவள்  ஒரு  தீர்மானத் தோடு   குழந் தையைத் தூக்கிக் கொண்டுபோய் அவர்  மடியில்  தடா லென்று வைத் தாள்.  விஸ்வநாதன்  மெதுவாக தலையைத் தூக்கி வியப்புடன் அவளைப் பார்த்தார்..

  “என்ன  பாக்கறேள் ?  இது ஒங்க  குழந்தை  ஊரார் குழந்தை இல்லை. இதை ப் பாத்துக்கறதுக்கு ஒங்களுக்கும் பொறுப்பு உண்டு..”  கோபமாக பேசினாள்  அக்கா.

 விஸ்வம்  மெதுவாக  குழந்தையைக்  கீழே கிடத்தினார். அது  தாவிக் கொண்டு அம்மாவிடம் பாய்ந்தது..... அவர் மெள்ள எழுந்தார். நிதானமாக அன்பாக ஆனால் அழுத்தமாக பேசினார்.

 “கண்ணம்மா....இந்தக் குழந்தை  இனிமே  ஒன்னோடது  தான்.. ஆனா என் னோட அன்பும் ஆசியும்  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக் கி றது  போல ஒங் கொழந்தைக்கும் கிடைக்கும்  நீ  கஷ்டப்பட மாட்டே! இதை பாத்துப்பே...!! நான்  போக வேண்டி இருக்கு ..   நேரம்  வந்தாச்சுவராத  போனாலும்  வருத்தப்பட வேண்டாம்  ஏன்னா..... அது  அப்படித்  தான். .... உத்தரவு....” 

 விஸ்வநாதன்  சடாரென்று  நகர்ந்து   இரண்டு  தடவை சுவற்றைத் தட்டி விட்டு திரும்பிப்பார்க்காமல்  வெளியே நடந்து போய்விட்டார். கண்ணம்மா ஏதோ தவறு செய்து விட்டது போல் பதறி   “என்னங்க  என்னங்க...”  என்று பின்னா லேயே தொடர்ந் தாள்  அதற்குள் அவர் வாசலைத் தாண்டி  தெருவுக்குத்  திரும்பி விட்டார். ஓடிப்போய்  தெருவை எட்டிப்பார்த்தாள் .அவர்  போன  சுவடே தெரிய வில்லை  திரும்பி உள்ளே  வந்தபோது சுவற் றோரம் கொஞ்சம் பணம் கொட்டிக் கிடந்தது.

 இரண்டு மூன்று நாட்கள் கழித்து  வாசல்  கதவை யாரோ தட்டுவது கேட் டது. கண்ணம்மா  கதவைத் திறந்தாள்.

  இரண்டு முஸ்லிம் கனவான்கள்  நின்று கொண்டிருந்தார்கள்.  ஒருவர் கையில் ஏதோ காகிதக்கட்டு இருந்தது. கண்ணம்மாவைப் பார்த்த வுடன்  அவர்கள் இருவரும்  மிகுந்த  மரியாதையும் உருக்கமும் கொண்டு  கைகூப்பி வணங்கினார்கள்.

  “அம்மா... வணக்கம் அம்மா... நீங்க  ரொம்ப புண்ணியம் செஞ்ச வங்கம்மா! “  என்று கூப்பிய கைகளை  விலக்காமல் நின்றார்கள்

  “நீங்க  என்ன  சொல்றேள்?”  எதுவும்விளங்காமல் அவர்கள்  காட்டிய அதீத மரியாதையால்  சற்று குறுகி நின்றாள்.

  நாங்க  துலுக்கத் தெருவுலேருந்து வரோம்மா...  எம்பேரு காஜாமொய் தீன் தர்காவுலே  ஓதறவன்..  இவரு பேரு  ஸலீம்பாய்.. பஜார்லெ மரக் கடை வச்சிருக்கார்”.

 கண்ணம்மாளுக்கு இந்த விவரமெல்லாம்  தேவையற்றதாக  இருந்தது. அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஸலீம்பாயிக்கி ஒரே மவன்   இருபத்தி அஞ்சு வயசுலே  ரத்தப் புற்று நோய் வந்துடிச்சி.  செய்யாத வைத்தியமில்லெ  இவருக்கு வசதி இருக்  றதாலே  பணத்தை வாரிவாரி செலவழிச்சு வைத்தியம் பாத்தாரு. ஆனா எல்லா  டாக்டர்களும்  கையை விரிச்சுட் டாங்க..  அப்போ  ஊர்லே  எல் லாரும் பேசிக்கிட்டாங்க.... சித்த ரய்யா விஸ்வாம்பரத்தை நெனைச்சுகிடுங் கன்னு..   ஆனா ஸலீம் பாய்  ரொம்ப யோசனை பண்ணினார்.. என்ன  இருந்தாலும் நாங்க வேறெ அவுங்க வேறெ  இல்லையா?....ஆனா ஒரு நாளைக்கு  திடீர்னு விஸ்வாம்பரம் அய்யா  மசூதிக்கு வந்து மண்டி போட்டுத் தொழுகி றதை  பாத்ததாக  யாரோ சொன்னாங்க..ஆனா யாருன்னு தெரியலே!கேட்டவுடனே  ஸலீம் பாய்  மனசு உருகி வாய் விட்டு அழுது   “ விஸ்வாம்பரம்.. விஸ்வாம்பரம்னு  மகனுக்காக  ப்ரார்த்தனை பண்ண ஆரம்பிச்சாரு.. மறு நாளே அங்கே  அவர்  வந்து நின் னார்.  ஸலீம் பாய்  வீட்டுக் கூட்த்துலே  சாவுக் களையோட படுத்துக் கிடந்த  ஸலீம்பாய் பையன் ரஹீமைப்  பாத்தாரு...

 அவருக்குள்ளே என்ன  தோணிச்சோ  தெரியலெ! அவர்  உடம் பெல்லாம்  பதறி நடுங்கியது.. கண் ரப்பையெல்லாம் துடிச்சுது .உதட்டி லேருந்து  ஏதோ உச்சாடனங் கள்  ஏதோ  வந்துக் கிட்டே இருந்தது   கை விரல்களில்  ‘சுடக்கு  ’போட்டுக் கொண்டேஅவர் கட்டிலை சுத்தி சுத்தி நடந்து கிட்டே இருந் தாரு..கொஞ்சநேரம் பொறுத்து“ ஸலீம் பாய்...என்று உரக்க  கத்தினாரு குரலைக்கேட்டு அங்கே நின்ற எல்லோருமே பதறிவிட்டார்கள்.

 ஸலீம்பாய்  கைகட்டிக் கொண்டு  பக்தியோட அவரு கிட்டெ போய் கை கூப்பிநின்னாரு.

ஸலீம்.... ஒன்னோட  பையன் விதியை  நான் ஏத்துக்கணும்னு  உத்தரவு வந்திருக்கு.   என் தலையிலே  உன் கையை வையி..”  என்றார்.

ஸலீம்பாய் தயங்கி தயங்கி  எல்லோரையும் பாத்தார்  சித்தர் மறுபடி யும் கத்தினார்.  ஸலீம் தலையிலே கையை வைச்சார்.  அடுத்த  நிமி ஷம்  “ டேய் ரஹீம் எழுந்திருடா.......எழுந்திருடா..”  என்று  கட்டிலில் கிடந்த பையனைக் கை தட்டிக் கூப்பிட்டார்  விஸ்வாம்பரம்.

தூங்கி  எழுந்த மாதிரி  ஸலீம்பாய் பையன்  வெடுக்குனு  எழுந்து நின்னுட்டான்.

ஒடனே  சித்தரய்யா என்ன  பண்ணார் தெரியுமா.?.. அந்த நோயாளிக் கட்டில்லே தடால்னு படுத்துகிட்டார்..  அஞ்சி நிமிஷம்தான்  அஞ்சி நிமிஷம் கண்ணை மூடித் தூங்கறாப்புலே  கிடந்தார் உடம்பெல் லாம்  நிறம் மாறி  கருத்துகிட்டே வந்துது.   அப்பறம்  மூச்சு வரலே! “

  “அய்யய்யோ...அய்ய்ய்யோ...”  என்று  பதறிக் கத்தினாள் கண்ண ம்மா அக்கா.

  “அம்மா  அழாதீங்கம்மா அவர் செஞ்ச இந்த விபரீதமான  பேருத வியை எங்களாலெ  தடுக்கக்  கூட  முடியாம  செஞ்சுட்டாரு.  அந்த மகா ஞானிக்கு   என்ன கைம்மாறு செய்யப்போறோம்..”  ஸலீம் விக்கிவிக்கி அழுதார்.

 காஜாமொய்தீன் தொடர்ந்தார்.  “அம்மா....அந்த  மகா சித்தருக்கு நாங்க  செய்யற மரியாதையை  நீங்க  தயவு செஞ்சி  ஏத்துக்கணும்
எங்க தெரு மொனையிலே  காலி மனை ஒண்ணு இருக்கு.... அதை  ஒங்க பேருக்கு  பதிவு பண்ணி  இந்தப் பத்திரங்களை கொண்டு வந்திருக்கோம்.  அவரு ஞாபகார்த்தமா  நீங்க  அதை  என்ன  செய்யணுமோ அது மாதிரி  செய்யுங்கோ... தயவு செஞ்சி மறுக்காதீங்க..என்று சொல்லி அந்தப் பத்திரங்களை  கண்ணம்மாவின் காலடியில் சமர்ப்பித்து  வணங்கி விட்டு இரண்டு பேரும் போய்விட்டார்கள்.

 கண்ணம்மா  திக்பிரமையுடன்  வெகு  நேரம்  குழந்தையை வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந் தாள்.  பல  உணர் வுகள்  அவள்  ப்ரக்ஞைக் குள் மின்னலடித்து  மறைந்து  கொண்டே இருந்தன.. துக்கம் குறைந்துகொண்டே வந்தது.

  “விஸ்வநாத அத்தானை எனக்கு மட்டும்  சொந்தம்னு  நினைத் துக் கொண்டது எவ்வளவு அறியாமை “ என்று  நினைத்துக் கொண்டாள்.

 “விஸ்வம்பரம்”  என்று  தன்னிச்சையாக  உதடுகள்  முணுமுணுத்துக் கொண்டன.                        
                   ****************************
மாட்டு வண்டியை  ஒரு மர நிழலில் நிறுத்தி விட்டு  அப்பா  என் னைத் திரும்பிப் பார்த்தார்.

 “ஏண்டா....கதை  கேட்டயா?  தூங்கிட்டயா?.....கதை எப்படி இருக்கு? “

எனக்கு  கேட்ட கதையின் சம்பவங்களிலிருந்து  விடுபட  சில நிமிஷங் கள் ஆயிற்று.. 

 “ஏம்ப்பா,இதெல்லாம்  நெஜமா  நடந்ததா?  இல்லே  கதையா?” என்றேன்    சோம்பல் முறித்துக் கொண்டே.

 .அதனாலெ  தான்  ஆரம்பத்துலெயே சொன்னேன். ..நீ இதெல்லாம் 
 நம்ப மாட்டேன்னு!....கீழே எறங்கு! என்று   வண்டியை விட்டுக் கீழே குதித்தார்.
                *******************************************


      


No comments:

Post a Comment