vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Thursday, April 3, 2014


                                முத்தம்மா 

வைதீஸ்வரன்


தீபாவளிப்  பண்டிகை...பொழுது முழுதாக  விடிந்துவிடவில்லை.  எங்கள் தெரு இன்னும் இருட்டாகத் தான்  இருந்தது.  ஊருக்குள்   மின்சாரம்  இன்னும் அறிமுகமாகாத காலம்சுமார்  எழுபத்து ஐந்து வருஷங்களுக்கு  முந்தி தெரு இது.

ஆனாலும்வீடுகளெல்லாம்  மத்தாப்பு  வாணங்களால்  ஜொலித்துக்கொண்டிருந்தனவாசல் திண்ணையில் அகல் விளக்குகள்  பூக்களைப்  போல் அலங்கார வரிசையில்  பிரகாசித்துக்கொண்டிருந்தன.தெருக்களே அடையாளம் இழந்து  ஏதோஅந்தரத்தில்  தொங்குவதுபோல்   மாறிப் போயிருந்தது.  நடப்பதே மிதப்பதுபோல் தோன்றியது.

தெருக்களைஇவ்வளவு அற்புதமாக  மாற்றிக்காட்டுவது  விளக்குகளின் வெளிச்சம் மட்டுமல்ல...அதற்குமிகப் பொருத்தமாக பின்னணியில் திரையிட்டிருக் கும்  இருட்டும்தான் என்று அப்போது யாரால் ஊகிக்கமுடிகிறது?.

வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே  எழுந்து  எண்ணைக்குளி குளித்துவிட்டு புத்தாடைகளைத்தாறுமாறாகப் போட்டுக்கொண்டு சிறுவர்கள் நாங்கள்  மண்  கூடத்தில் மத்தாப்புகளைக் கொளுத் திக் கொண்டிருந்தோம்.....

அம்மாஅடுக்களையில்  அடுக்குகளில்  பட்சணங்களை  பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள்.  கொல்லைப் பக்கம் எண்ணைத்  தலையுடன்  அப்பா வென்னீர்   அண்டாவுக்கடியில் ஓலைகளைதிணித்துக்  கண்ணை மூடிக்கொண்டு புகை   ஊதிக்கொண்டிருந்தார்..

என் பாட்டி மட்டும் மண்கூடத்தின்  இடதுபக்கத்துஅறையில் காலை  நீட்டி உட்கார்ந்தவாறுநாங்கள்  மத்தாப்புகளைக் கொளுத்திப்  போடுவதை ஆசையுடன் ரஸித்துக்கொண்டிருந்தாள்சந்தோஷத்தில்அடிக்கடி சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்அவளுக்கு ஒரு கை ஸ்வாதீனமில்லை அது தன்னந் தனியாக ஆடிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறுமியாக இருந்தபோது தான்  சந் தோஷமாக இருந்த ஞாபகங்கள் அவளுக்குள் புரண்டுகொண்டிருக்கலாம்.மத்தாப்பு வெளிச்சத்தில் பொக்கைவாய் திறந்து சிரிக்கும்போது பாட்டி ரொம்ப  அழகாக  இருந்தாள்.

பாட்டி  ரஸிப்பதோடு  மட்டும் நின்று விடவில்லை..எங்களை சற்று எச்சரிக் கையுடன் கவனித்துக்  கொண்டிருந்தார்.  நாங்கள்  நெருப்புடன் விளையா டிக்கொண்டிருக்கிறோம்! நெருப்பு நம்மி டம்  எப்போதும் தோழமையுடன் இருப்பதில்லைகொஞ்சம் அத்துமீறி னால்  பாம்பைப்போல் சீறிக்  கொத்தி விடுகிறது.
அப்போதும் அப்படித்தான்ஆகிவிட்டது.நான் குனிந்து  வாணத்தைக்கொளுத்திக்கொண்டிருக்கும்போதே என்  சித்தி  பையன் ராமு  நெருக்கமாக இன்னொன்றை வைத்துக் கொளுத்திவிட்டான்.

நெருப்பு‘ புஸ்ஸென்று’ மேலே சீறி என் கைகளை சுட்டுவிட்டது.நான் “அய்யோவென்று  கத்திக்கொண்டு சூடு  பொறுக்கமுடியாமல்கைகளை உதறிக்கொண்டு கூடமெங்கும்குதித்தேன் சூடுதோலெங்கும் பரவி படர்ந்து கருக்கிவிட்டது. 

பாட்டி  வயதை மறந்து எழுந்து  தள்ளாடி  ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.என்னடா. .கண்ணு...எப்படி  ஆச்சுடாஅய்ய்யோ தோலெல்லாம் சுட்டுக் கன்னிப்போச்சே... ஏண்டா. .கழுதை  ராமு.....வாணம்  விடும் போது  பக்கத்து லே பாத்து விடக்  கூடாதா?"என்று   அதட்டினாள். 

கூட  விளையாடிக்கொண்டிருந்த  பையன்களெல்லாம்  ஓடிவிட்டார்கள்.பாட்டி என்னைபடியில்  உட்கார  வைத்துவிட்டு  தள்ளாடி  உள்ளே போனாள்.அவள்    திரும்பிவந்தபோது அவள்  கையில்வெண்ணையும் விளக்கெண்ணையும் இருந்தது. 

என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டு சூடு பட்டஇடத்தை வாயாலூதிக்கொண்டே..கோந்தே  ஒண்ணும்  இல்லெடா...சரியாயிடும்  எங்கெ இப்படிக்     காட்டு.என்று வெண்ணையையும்   விளக்கெண்ணையையும்  மாறி மாறி      லேசாகத் தடவினாள்.    

எரிச்சல் தாங்காமல் நான் கத்திக்கொண்டிருந்தேன் பாட்டி  வாயால் வெந்தஇடத்தை ஊதிக்கொண்டேகண்ணைமூடிக் கொண்டு “முத்தம்மா… முத்தம்மா..”      என்று  முனகிக்கொண்டிருந்தாள். . அவள் முனகிக்கொண்டிருந்தாளா.... ஜபித் துக்கொண்டிருந்தாளா....

ஒரு  வாரத்தில்  என்  கைகளில்  தீக்காயம்வெகுவாகக் குறைந்துஆறத்தொடங்கிவிட்டது. தீக்காயம்  ஒரு பக்கம் இருந்தாலும்  நான் மீண்டும்  பையன்களுடன் சேர்ந்து வாணங்கள் விடுவதையும் வெடிப்பதையும் தவிர்க்கவில்லை பாட்டி என்னை வாஞ்சையுடன் கவனித்து  மருந்து போட்டதும் அவள் முத்தம்மா….. முத்தம்மா..” என்று  முனகியதும் நினைவில்  திரும்பிக் கொண் டே இருந்தது . 

நான்  எப்போதும்  இரவில்  பாட்டியுடன்  தான்  தூங்குவேன். கொட்டாவிகளுக்கிடையில் அவள் சொல்லும் கதைகளும் தூங்கிக் கொண்டே நான் கேட்ட ஞாபகங்களும் என்  மனசோடு மனசாக இன்னும் பசுமையாக வளமாக இருப்பதாக எனக்குள் ஒரு  உணர்வு.

அன்று  இரவு  படுத்துக்கொண்டபோது  பாட்டி  அதிகம்  பேசவில்லை.கொட்டாவி விட்டுக்கொ ண்டிருந்தாள். கதை சொல்லுவாள் என்று  எதிர்பார்த்தேன்கொட்டாவி விட்டுக்கொண்டேஎங்கே....ஒன்  கையைக்  காட்டு...” என்றாள்.... நான் காட்டினேன்.

தேவலையே...நன்னா....ஆறிப்போயிடுத்தே!....முத்தம்மா...முத்தம்மா...என்று கண்ணை மூடிக் கொண்டு இரண்டு  தடவை  சொல்லிக்  கொண்டாள்..

 “பாட்டி...அது  என்ன  மந்திரம்  ஜபிக்கிறே?...முத்தம்மா..முத்தம்மா.......

ஆமாங்  கோந்தே!..அது மந்திரம் தான்...முத்தம்மா  பாட்டி   நமக்கெல்லாம் குலதெய்வம்மாதிரி..தாவது  நெருப்பு சுட்டு காயமாச்சுன்னா...முத்தம்மா...  முத்தம்மான்னு  சொல்லு சரியாயிடும்...

 “அது  யாரு பாட்டி?....முத்தம்மா  யாரு? என்று  நான்  இரண்டு மூன்றுமுறை   கேட்டேன். பதில்  இல்லைபதிலாக  பாட்டியிடம்குறட்டைதான் வந்தது.அதற்குள் அவள்தூங்கிப் போய் விட்டாள்..

அடுத்த  சில  மாதங்களில் அக்கம்பக்க வீடுகளில்  யாருக்காவது ஏதாவது தீக்காயம் பட்டால் உடனே என் பாட்டியைத் தான்  அழைப்பார்கள். நானும் கூடப் போவேன்..ப்போதும் பாட்டி வெண்ணையைத் தடவி  ஊதி  விட்டு முத்தம் மா... முத்த ம்மா..”  என்பார்கள். 

எப்படியும் பாட்டியிடம் இந்த விவரத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று தீர்மானமுடன் காத்திருந்தேன்.  ஒரு  நாள்  பாட்டி என்னை  சிவன் கோவிலு க்கு கூட்டிக்கொண்டு போனாள். பிராகாரமெல்லாம் சுற்றிவந்த பிறகு மண்டபத் தில் ஓரத்தில் ஆசுவாஸமாக உட்கார்ந்தாள்..

நானும்  பக்கத்தில்உட்கார்ந்துகொண்டேன்அதுதான்  சரியான  நேரம்..

பாட்டி...இப்போ  நீ  சொல்லு  அந்த  முத்தம்மா...யாரு..?

பாட்டி  என்  கேள்வியை  எதிர்பார்க்கவில்லை.

கோந்தே...ஒனக்குரொம்ப  சூட்சமம் ஜாஸ்தி..என்று  என்னைக் கட்டிக்  கொண்டாள். சற்று நீண்ட யோசனைக்குப்  பின் மெதுவாக  சொல்ல
ஆரம்பித்தாள்..

முத்தம்மா  வேறெயாருமில்லே...என்னோடபாட்டி தான்  அதாவது  ஒங்க
 அப்பாவோடகொள்ளுப்பாட்டி...அவளை..ஆனா நானே  பாத்ததில்லெ….
எங்கஅம்மா சொல்லித்தான் எனக்கு அவளைப்த்தி  தெரியும்.....

இப்போ நெனைச்சிப்  பாத்தா  எதோ  புராணக்  கதையாட்டம்  இருக்கு ஆனா.. 
நெஜமா நடந்ததுன் னு  எங்கஅம்மா  சொன்னா...முத்தம்மா  பாட்டி நமக்கு
சாமி மாதிரி தான்...

 பாட்டி..அப்படி  என்ன  நடந்தது...முத்தம்மா  பாட்டிக்கு..?”

சொல்றேன்....அந்தக்  காலத்துல முத்தம்மா  பாட்டியும்  பரமேஸ்வர  
தாத்தாவும் ரொம்பப்  பிரியமா இருந்தாளாம்சொல்லிக்கிறா...... ரொம்ப அபூர்வ  தம் ப தி களாம்அந்தக்  காலத்துலே வழக்கமா ஆம்படையான் பொண்டாட்டியைகொடுமைப்படுத்தறது  தான்  சகஜம்…  நானே ஒங்  தாத்தாவுக்கு பயந்துபயந்துதான் நாளைக்கடத்திண்டிருந்தேன்ஆம்படை யான்  உள்ளே  வந்தாலே ஒடம்பெல்லாம்  நடுங்கும்...பரபரக்கும்....ஆனா அதிசயமா பரமேஸ்வரய்யரும் முத்தம் மாவும் அவ்வளவுஅந்நியோன்ய மாம்...எங்க அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்ரெண்டு பேரும் ண்ணா ஒக்காந்து சாப்பிடுவாளாம்சாதாரணமா சகஜமா நாலு பேரு  முன்னால சிரிச் சிப் பேசிப்பாளாம்...வெளிலே கூட தாத்தா பாட்டியை கூட்டிண்டு போவாராம்..

பாக்கறவாள்ளாம் இவாளைப்பின்னாலெபோய் பரிகாசம் பண்ணுவாளாம்.. இதெல்லாம்  அந்தகாலத்துலே  குடும்பத்துலே பாக்கற  விஷயமா?....  தெருவே அதைப்பேசுமாம்...

அப்போ  பரமேஸ்வரய்யருக்கு  வயசுஒண்ணும் அதிகம் ஆகலே...நாப்பது தான்இருக்கும்.... கடையிலே கணக்கு உத்யோகம்... மாசத்துக்கு  ஒரு   தடவைஅவருக்கு வபனம் பண்ணு வதற்கு நாசுவன் ஒத்தன் வருவானாம்...  ....

  “வபனம்னா  என்ன  பாட்டி?...”

 “இப்போ  நீங்க  ஷவரம்னு  சொல்றது  தான்...அது......அப்போ பண்ணும் போது கத்தி தவறுதலா கழுத்துப்பக்கம்  கொஞ்சம்  கீறி  ரத்தம் வந்துடுத்து...  அந்தக் கத்தி துருப்பிடிச்ச கத்தியோ என் எழவோ?

 “ஐய்யய்யோ....

அந்தக் காயம் ஆறாம பத்து நாளைக்குள்ளே பெருசாவீங்கிப்போய் கன்ன  மெல்லாம்  உப்பிப் போச்சு.பெரிய  ஆஸ்பத்திரிக்குப்  போனா  அங்கே   ஏதோ மருத்துவம் பாத்து  கட்டியை ஆபரே ஷன்பண்ணிப்  பாத்தா...  எல்லாம் முத்திப்போயிடுத்து…கண்டது மூச்சு மேலெயும் வாங்கி தாத்தா பாவம் போய்ட்டார்.வைத்தியர்அதற்கு  ராஜபிளவைன்னு ஏதோ    பேர்  சொன்னாராம்.

  “அய்ய்ய்யோ..அப்பறம்.?.” 

அப்பறம் என்ன?...முத்தம்மாபாட்டி புரண்டு புரண்டு அழுதா.... இவ்வளவு அந்யோன்யமான உறவு  யாருக்குமே  அமைஞ்சதில்லே...பகவான்  இத்த னை  சீக்கிரமா   தாத்தாவைப் பிரிச்சுக்கொண்டுபோய்ட்டானே!  முத்தம்மா   வுக்கு   மனசு  ஆறவேயில்லை

  “பாவம்  பாட்டி...

ஆமாண்டா......நான் நெஜமாவே சொல்றேன் அப்பொவெல்லாம் ஆம்படை யான்  போய்ட்டா மொட்டை அடிப்பா.....வெள்ளைப்பொடவையைக் கொடு ப்பா.......தூக்கிவைப்பா.ஆனா இந் வேதனைகள் ஒரு சம்பிரதாயமா எல்லா ருக்கும்  நடக்கறதா அதுக்கு மனசு கெட்டிப்பட்டு சமாதானமாயிடும்…ஆனாஅதுக்கும்மேலே சில பொண்களுக்கு மனசுலே ஏதோ ஒரு நிம்மதியும்   ஏற்பட்டது. அதுதான் ஆம்படையானோடகொடுமையிலேருந்துவிடுபட்ட   நிம்மதி.!!..

ஆனா  முத்தம்மா  பாட்டிக்குஅப்படியில்லே!...தன் உயிரே  பிரிஞ்ச மாதிரி            துக்கம் நெஞ்சை அடைச்சுண்டு  வாயை  விட்டு  ழக்கூட  முடியலை
யாம் ..ஆம்படையான்  முகத்தையும்  நெஞ்சையும்  தடவிக்  கொடுத்து
ண்டே பக்கத்துலெயே  ஒக்காந்துண்டிருந்தாளாம்..” ...........

  பாட்டி  கொஞ்சம்  பேச்சை  நிறுத்தினாள்.

 “என்ன  பாட்டி...ஏன்  நிறுத்திட்டேள்? “

 ........கோந்தே...நீ ஏதோ என்  வாயைக்  கிளறிவிட்டுட்டே!   என்னென்
மோ  ஒங்கிட்டே சொல் லிண்டிருக்கேன்....உன்  வயசுக்குஇதெல்லாம்
புரியறதோ புரியலையோஆனா  எனக்கு  இப்போநிறுத்த  முடியாது..
இதையெல்லாம்  என் வாரிசுக்குசொல்லணும்னு  மனசுக்குள்ளெ  இப்போ
ஆதங்கம்  வந்துடுத்து.. சொன்னாத்தான் எனக்கு நிம்மதி..

  “சொல்லுங்கோ  பாட்டி....

 “அந்திமகாரியமெல்லாம் ஆயி பிரேதத்தை காட்டுக்குத் தூக்கிண்டு போகப்
புறப்பட்டபோது முத்தம்மா  பாட்டி தானும் கூடவே கிளம்பிட்டா...

கூட இருந்தவா எல்லாரும் “அய்யோ...அய்யோ..ன்னு கத்தினா...வேண்டா
ண்டி....அந்த     வழக்கமெல்லாம்  நமக்குஇல்லேன்னு  தடுத்துப் பாத்தா..
பாட்டி  எதுக்கும் யார் பேச்சுக்கும்  மசியலே ஏதோ  ஆவேசம்  வந்த மாதிரி
நெத்தி நிறைய  குங்குமத்தை  அப்பிண்டு  கூடவே  நடந்து போயிருக்கா.......

மசானத்துலே ஸாஸ்திரிகள்ளாம் எதோஅனாசாரம் நடந்துடுத்தேன்னு
குழம்பிப்போய்  நின்னா..அப்போமுத்தம்மா  பாட்டி  அடிவயத்துலேருந்து
 பேசினா... எல்லாரும் கேட்டுக்கோங்கோ..நான் அவாளைப் பிரிஞ்சி ஒரு  
நிமிஷமும் உயிரோட  இருக்க மாட்டேன். அவாளோடயே நான் சேந்து 
அடுத்த  கதிக்குப் போறேன்  இது  நான் மனசு ஒப்பி ஏத்துக்கற  காரியம்.
அவா  பிரேதத் துக்குப் பக்கத்துலே  படுத்துக்கறதுக்கு எனக்கும்  ஒரு எடம்
 பண்ணிக்கொடுங்கோஎன்னைத் தடுத்தா  என்னைக் கொன்ன  பாவத்துக் கு  நீங்க ஆளாயிடுவேள்..” அப்படீ ன் னா.

எல்லாரும் வாயடைச்சுப் போயிருந்தா... அப்புறம் மூத்த ஸாஸ்திரிகள் 
ஒருத் தர் தயங்கித் தயங்கி  சொன்னார்.

அம்மா  நீ  பதிவிரதைதான்.அதுக்காக  இப்படி  ஒரு  வைராக்கியத்தை
நீ ஏத்துக்கறது எங்களுக்குஅதிர்ச்சியா  இருக்கும்மா....உடன்கட்டை
ஏறுகிற வழக்கத்தை இப்போ நம்ப சம்பிரதாயத்துலகட்டாயப்படுத்தறதி
ல்லை.....இதுகூடாது ன்னு சமூகத்துலே  படிச்சவாள்ளாம் பேசறா..
சட்டம்கூடவரப் போறதா  சொல்றா....தயவு செய்து எங்க பேச்சைக்
 கேளும்மா ..ன்னார் “  

முத்தம்மா மசியவே இல்லை...ஏற்கனவே சொல்லிட்டேன் நான்
அவாளோட போறதுதான் என் ஆத்மாவுக்கு  சம்மதமானது  அவாளை
விட்டுப்  பிரிஞ்சா  என்  உயிர் க்ஷணமும் தரிக்காதுஎன்னை போக
விடுங்கோ...என்றுமடமடவென்று பாட்டி சிதையிலே ஏறி  தாத்தாவோட
பக்கத்துலே  படுத்துண்டுட்டாளாம்ஓரமா வச்சிருந்த நெருப்புச்சட்டியை 
தடால்னு தலையிலே கவு த்துண்டுட்டாளாம் சிதையிலே  நெருப்பு பத்தி
ண்டு  மளமளன்னு எரிய ஆரம்புச்சுடுத்து……….. எல்லாரும்அதிர்ந்துபோய்
 நின்னா.

முத்தம்மாகடைசியா  ஏதோ  கத்தி சொன்னாளாம்.....எம்பேரைச்
சொல்லுங்கோநெருப்பு  சுடாது.......நெருப்பு சுடாது.....””அப்படீன்னு 
சொன்னதா அங்க  யாரோ சொன்னாளாம்.

அதைப்  பாத்தவா  கேட்டவா  எல்லாரும்  “முத்தம்மா..முத்தம்மா...ன்னு
பெரிசா அன்னிக்குப் பூரா சொல்லிண்டே இருந்தாளாம். பின்னால  
ரொம்பநாள்ஊர்முழுக்கஇந்த முத்தம்மா  பேரைச்  சொல்லிண்டிருந்தா
ளாம்.அன்னிலேருந்து  நெருப்புக்காயம்  பட்டாமுத்தம்மா..முத்தம்மா..
ன்னுசொல்ற வழக்கம் ரு சம்பிரதாயமா  நம்ப  தலைமுறையில  ஏற்பட்
டுப்போச்சு..

பாட்டிதான் சொன்ன நிகழ்ச்சியின் தகிப்பிலிருந்து விடுபடமுடியாமல் 
முகத்தையும்  கண்களையும்  துடைத்துக்கொண்டாள்  கண்ணில்               ஈரமாக  இருந்தது. நான்  என் கைகளில் தென்பட்ட தீத் தழும்பைப் பார்த்துக்
கொண்டேன்.

முத்தம்மா  பாட்டிக்கு  தாத்தாமேலே அவ்வளவு  பிரியமாஒடம்பெல்
லாம் நெருப்பு எரியறதைஎப்படி பொறுத்துண்டா!!. பாட்டியோட  பிரியத்தை
நெனைச்சிண்டா ஆச்ச்சரியமாஇருக்கு....நம்பவே  முடியலெ..” 

  “சரி..போகலாமா..பாட்டி..” என்றேன்.

இரவெல்லாம் பாட்டி சொன்ன முத்தம்மா கதை மனதில் சுற்றிக்
கொண்டேஇருந்தது.அடுத்த முறை தீப்பட்டால் எண்ணை எதுவும்        தடவிக்கொள்ளாமல் ‘முத்தம்மா’ பேரைச்  சொல்லிப்பார்க்கவேண்டும்
என்றுநினைத்துக்கொண்டேன்!!
..
                    ***********************
பின்குறிப்பு :  நான்  வளர்ந்தபிறகு  பாட்டி சொன்ன இந்த  சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பார்த் தேன்ஓரளவு வருஷங்களை பின்னோக்கிப் பயணித்துப்பார்த்தபோது என்  அப்பாவின்  கொள்ளுப்  பாட்டி முத்தம்மா வாழ்ந்து மறைந்த  காலம்1800க்கு பக்கமாக  இருக்கலாம்என்று   தோன் றியது. அப்போது சதி வழக்கத்தை எதிர்த்து தீவிரமான  வாக்குவாதங்கள் நடந்து கொண்டி ருந்த சமயம்.அடுத்த பத்து ஆண்டுளுக்குப்  பிறகு தான் ராஜாராம் மோகனராய் பிரும்ம ஸமாஜத்தின் மூலம் பிரகடனப் படுத்திய சதி  தடுப்பு சட்டம் 1825 வாக் கில் ட்ட பூர்வமாக அமுலுக்கு வந்தி ருக்கிறது. .                             

                                                                    வைதீஸ்வரன்
         
அம்ருதா  ஏப்ரல் 14
                                                                                                   




1 comment:

  1. நிஜக்கதை! நிஜங்கள் கதைகளைவிட சுவார்சியமானவை. எலும்புக்குள் ஊடுருபுபவை. ஜிவ்வ்வ்வ்!

    ReplyDelete