vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Tuesday, August 2, 2016

கவிதை பற்றித் திரும்பிய நினைவுகள்

கவிதை  பற்றித்  திரும்பிய  நினைவுகள்

வைதீஸ்வரன்


 திரு.சி.சு.  செல்லப்பாவின்  பரிச்சயமும்  எழுத்து  பத்திரிகை  
பற்றிய  அறிமுகமும்  எனக்கு  1960களில்  கிடைத்தது. 

ஆனால்  எழுத்து பத்திரி கையின் புதுக்கவிதை முயற்சிகளை 
அறி வதற்கு  முன்பே நான்  “கிணற் றில் விழுந்த நிலவு“  
கவிதையை  எழுதி  வைத்திருந்தேன்.

இந்தக் கவிதையைக் கொண்டுபோய் அவரிடம் நான் 
கொடுத்தபோது  ‘எழுத்து இந்த  மாதிரி  தளை மீறிய  கவிதை
களைத்  தான்  வரவேற்கிறது என்று  எனக்குத்  தெரியாது!!  

இது  நான்  ஏற்கனவே  தெரிவித்திருக்கும்  தகவல்.

அது அப்போது  எழுத்துவுக்கு  ஏற்ற  புதுக்கவிதையின்  
பொருத்தமான அடையாளமாக  ஏற்றுக் கொள்ளப்பட்டது.!

 நான்  இந்தக் கவிதையை ஏன் அப்படிப்பட்ட பேச்சுத் தொனியில் இலக்கணத்தைப்பற்றிய  அக்கறையில்லாத  வடிவத்தில்  எழுதினேன்எனக்கு  அப்போது  தெளிவாகத்தெரியவில்லை
எனக்கு.  

இப்படி  கவிதை மரபுகளை  உடைத்து  புதுக் கவிதை எழுத 
வேண்டுமென்ற கோட்பாடுகளும் அறியாதவனாக இருந்தேன்.!!!
  
ஒருவேளை அப்போது  நிலவரத்தில் இருந்த  ‘வெறுமையான 
கவிதைப்  பந்தல்கள் என்னையும் கோபப்படுத்திஇருக்கலாம்.

செல்லப்பா சொல்வது போல்  Stock    expressions    standard   descriptions… ஐம்பதுகளுக்கு  பிறகு  எந்தப் பத்திரிகையைத் திருப்பினாலும் “பாரதமாதா   காந்தி  தாய்நாடு  தமிழ்ப்பற்று  
இயற்கை  பற்றிய  கும்மிகள்.  இப்படித்தான்  கவிதைகள் 
இருக்கும்.  

சமயம்  கடவுள்  தோத்திரம்  இப்படிப்பட்ட  கவிதைகள்  மெது
வாகக் குறைந்துபோய்விட்டன.  

ஆனால்எல்லாமே தேசலாக  ‘செல்லப்பா  சொன்னதுபோல் 
கம்பாஸிடர் கவிதைகளாக  இருக்கும்.

கலைப் பிரக்ஞையும் நுண்ணுணர்வும் கொண்ட பல இளைஞர் 
களை   வாழ்க்கையின்  சம கால தரிசனங்களை  புதிதாக  
படைப்பில் வெளிப்படுத்த வேண்டுமென்ற  ஏக்கமும்  கோப
மும்  விடுதலை வேகமும் ஆக்கபூர்வமாக அப்போது   எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.

கவிப் பொருளுடன்  தீவிரமாகத் தோய்ந்த  பிரக்ஞை  எந்த  
வடிவத்தை எந்த  மொழியை இயல்பாக  தேர்ந்து கொள்ளு
கிறதோ அந்த  வடிவமும்  மொழியும்   தான்  கவிதை  என்ற  உள்ளுணர்வு  எனக்கும்  நேர்ந்திருக்க வேண்டும் . 

செல்லப்பா  பிரகடனப்படுத்திய  புதுக்கவிதை  இந்தத்  தத்து
வத்தை அடிப்படையாக  கொண்டதோ!  

 நான்  அன்று  புதுக்கவிதைகளைப்  பற்றி  தீர்க்கமாகத்தெரிந்து
கொள்ள  வெவ்வேறு  திசைகளில் 'திக்குத் தெரியாமல்'  
சிந்திக்கத் தூண்டப்பட்டேன். 

 மொழிகளற்ற இயற்கையின்  ஓசைகள் என்னை வெகுவாக
 பாதிக்கும் அன்றாடப் பேச்சுவழக்கில்தொனிக்கும் 
அழகியலை நான் ரஸிப்பேன். 

கதாகாலட்சேபங்களில் பாட்டுக்கும்உரைநடைக்கும் தாவித்
தாவி மாறுகின்ற  உபந்யாசகரின்  லாகவங்கள்  
எனக்கு வியப்பாக  உற்சாகமூட்டுவதாக  இருக்கும் .

வார்த்தைகளின்அழுத்தங்களை மாற்றி மாற்றி அர்த்தத்தை 
வெவ்வேறு உணர்வு  நிலைகளுக்கு கொண்டுபோகின்ற  
நாடகவசனங்கள்...  

எதிர்எதிரான இரண்டு கருத்துக்களை மோதவிடும்போது 
திடீரென்று தெறிக்கிற மூன்றாவது அர்த்தம்

இப்படி எதைஎதையோ மனத்துக்குள் போட்டுக் குலுக்கிக்  கொண்டிருந்தேன்.

ஆங்கில நவீன கவிதைகளில் ஒரு விஷயத்தை மிக வித்யாச
மாக புதிய யதார்த்தத்துடன் சொல்லும் பாங்கு என்னை 
யோசிக்கவைக்கும். 

இதைத் தவிர வார்த்தைகளின் இடைமௌனங்கள் எவ்விதம் 
ஒரு இன்றிமையாத கனத்தை பொருளுக்கு கொடுக்கிறது 
என்பதையும்  என்னால்  ஊகித்துணர  முடிந்தது. 

மேலும் நமது நாட்டுப்பாடல்களில் ததும்பி நிற்கும் எளிமை
யான நிஜமான வாழ்வின் ஓசைகள்ன்னைக் கிறங்கடிக்கும் 
எல்லாமே ஒரு ஸ்வாரஸ்யமான  விளையாட்டாக இருந்தது 
எனக்கு.

இந்தப் பின்புலத்தில் எழுதிய கவிதைகள் வழக்கமான 
இலக்கணவிதிகளை  சாராமல் இருந்தாலும் கவிப்பொருள் 
சேதமடையாமல் கவிஅனுபவத்தைக் கொடுத்தது. 

மேலும்  வாழ்க்கையின்  நிகழ்வுகளை ஒரு சீரிய  விடுதலை
யான உணர்வுநிலையில் ஒன்றிப் பார்க்கும்  தருணங்களை  
நினைவுகள் குறுக்கிடாமல்  வெளிப்பட்டால் அது தானாகவே  கவிதையாகக்கூடும் என்றும்  எனக்கு அனுபவபூர்வமாக  
தெரிந்தது.

 இதற்கும் அடிப்படையாக  ஒரு  கவிதையின்  தகுதிக்கு  
வாழ்வின் நேசமும்  உயிர்களைஅரவணைக்கும்  பான்மையும் 
 பிரபஞ்ச  ஒருமையின் பிரக்ஞையும்தான்  முக்கியமான 
அடித் தளமாக  இருக்க வேண்டும். 
         .


No comments:

Post a Comment