vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, December 27, 2015

1961 டைரிக் குறிப்பில் இருந்து எஸ்-வைதீஸ்வரன்


1961  டைரிக் குறிப்பில் இருந்து
எஸ்-வைதீஸ்வரன்




நான்  ஒரு பத்திரிகையாலயத்துக்குப்போயிருந்தேன்.  

எனக்குப்  பழக்கமான  உதவி  ஆசிரியரிடம்  பேசிக்கொண்டிருந்தேன்.  
பேச்சினிடையில்  ஒரு  வளரும் கவிஞரைப் பற்றிப் பேச்சு  வந்தது.
  
அவர்  கவிதையை சமீபத்தில்  அந்தப் பத்திரிகையில்உதவி  ஆசிரி யர்  பிரசுரித்திருந்தார்.

அந்தக்கவிஞர்  யார்? வரைப்  பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப் படுகிறேன்! என்றேன்..

யாருக்குத் தெரியும் அவனைப்பத்தி? வந்து பிராணனை வாங்கு 
வான்.. சும்மா  சும்மா  வந்து.. ஏதோ போட்டு வச்சேன் என்றார்.

ஆக, ஒரு  பத்திரிகையில் பிரசுரமாகும் விஷயங்கள் இவ்வ ளவு பிராணாவஸ்தையுடன்  பிரசுரிக்கப்படுகிறது!

எழுதுபவர் ஏன்  எழுதுகிறார் ? ஏன் அதைப் பிரசுரிக்கஆவலாதிப்
படுகிறார்?என்பது ஒருகேள்வி.

அதைப்பிரசுரிப்பவர் ஏன் இப்படி {அதன்  தரம்கருத்து அதனால்
விளையும்  பாதிப்புபலன் என்ற  நோக்கங்களையெல்லாம் மறந்து
விட்டு ஏதோ...போட்டுவெச்சேன்!”என்று நோஞ்சைக்குழந்தை மாதிரிஅலுத்துக்கொள்கிறார்?

இந்த ஏதோ  போட்டுவெச்சேன்?’ விஷயத்தை யாரோபடித்துவிட்டுப்
போகிறார்கள்? என்ற பொறுப்பற்ற  அலட்சியமா? அல்லது இதை யார் 
தான்படிக்கப்போகிறார்கள்?என்ற தப்பபிப்ராயமா?

அல்லது, எதற்காக இப்படி மக்களின் சிந்தனை வளர்ச்சிக்காக வெளி
யிடும்பத்திரிகையின் உதவி ஆசிரியர்  என்ற பதவியில் ஏமாற்று வேலை செய்துகொண்டு காலங்கடத்துகிறோம் என்று உணர்ந்து
கொள்ளாத  குற்றமா?

 இந்த மாதிரி  பத்திரிகைகளும், அதில் உழைக்கும்ஏதோபிறந்தோம்! 
ஆத்மாக்களும்பேசாமல் பத்திரிகைத்  தொழிலுக்கே முழுக்குப்போட்
டால் மக்களுக்கு  க்ஷேமம் உண்டாகும். குடி முழுகிப்போய் விடாது. 
              



No comments:

Post a Comment