யந்திரக் கவர்ச்சி
வைதீஸ்வரன்
தாடியைத் திருகிக்கொண்டு
யோசித்தான்
கை செயற்கையாகப் பரபரத்தது
உலோகக் கம்பிகளை உருவி
யெடுத்து
நீட்டி வளைத்து சுருட்டி
சின்ன வடிவாக்கிப் பரத்தி
மூக்கு வைத்து
சன்னக் கால்களில் நிறுத்தினான்
குறிக்கு பதிலாக பேட்டரியைப்
பொருத்தினான். முடுக்கி விட்டான்
தகரச் சிறகுகள் படுவேகத்தில்
துடிதுடிக்கக்
காற்றில் எழும்பியது வண்ணமற்ற பூச்சி. ஒன்று
தோட்டம் முழுக்க சுற்றிப்
பார்த்து
வருத்தமாய் வீட்டுக்
கூடத்திற்கு திரும்பி வந்து வட்டமிட்டது.
மூலையில் நின்ற பித்தளைப் பூ ஜாடி கண்டதும்
பேதுற்று சத்தமாகப் பறந்து போய்
காலை விரித்துக் குந்திக்கொண்டது
ஒரு ப்ளாஸ்டிக் பூவின் நடுக்குழிக்குள்
No comments:
Post a Comment